Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பதும், கிடைக்கவிருப்பதும் என்ன?

Go down

இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பதும், கிடைக்கவிருப்பதும் என்ன? Empty இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பதும், கிடைக்கவிருப்பதும் என்ன?

Post by oviya Mon Feb 16, 2015 1:05 pm

அன்பார்ந்த மக்களே இதோ உங்களுக்கா இந்த வார ராசி பலன்கள்,
மேஷம்

உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும், 10-ல் புதனும், 11-ல் சூரியனும் சுக்கிரனும் உலவுவது விசேடமாகும். வியாபார முன்னேற்றத்திட்டங்கள் இப்போது நிறைவேறும்.

எதிர்ப்புக்கள் குறையும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் ஈடேறும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவமுன்வருவார்கள். மக்களாலும், தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும்.

அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். மாணவர்களது நிலை உயரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். கூட்டுத் தொழில் லாபம் தரும். 8-ல் சனியும், 12-ல் செவ்வாய், கேது ஆகியோரும் உலவுவதால் அதிகம் உழைக்க வேண்டிவரும்.

அலைச்சல் அதிகமாகும். இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. நீர்நிலைகள் அருகில் செல்லும்போது பாதுகாப்புத் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.

15-ஆம் திகதி முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறுவதால் சுபச் செலவுகள் ஏற்படும். வாழ்க்கை வசதிகள் பெருகும்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் 11-ல் செவ்வாயும், கேதுவும் உலவுவது சிறப்பாகும். நிர்வாகத்திறமையாலும் செயல்வேகத்தாலும் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள்.

நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைத்துவரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்க வாய்ப்புக் கூடிவரும்.

அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். அரசுப்பணியாளர்களது நோக்கம் நிறைவேறும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன் ஜினீயர்களது எண்ணம் ஈடேறும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள்.

வழக்கில் அனுகூலமான போக்கு தென்படும். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்களாலும் தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும்.

மக்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் உண்டாகும்.

15-ஆம் திகதி முதல் மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த காரியம் நிகழச் சந்தர்ப்பம் உருவாகும், ஜலப்பொருட்கள் லாபம் கொண்டுவரும்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு 2-ல் வக்கிர குருவும், 6-ல் சனியும், 8-ல் புதனும் 9ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவதால் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். வெளிவட்டாரப்பழக்கம் பயன்படும்.

எதிர்ப்புக்கள் விலகும். நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிய முன்வருவார்கள். வியாபாரம் பெருகும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும்.

கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள்.

மக்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களது வருகை மனத்துக்கு மகிழ்ச்சி தரும். மாதர்களது நிலை உயரும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள்.

ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். குடும்ப நலம் சீராக இருந்துவரும். பேச்சாற்றல் வெளிப்படும். செயலில் வேகம் பிறக்கும். துணிச்சலாகன் காரியங்களில் ஈடுபாடு கூடும்.

பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். 15-ஆம் திகதி முதல் மக்களால் முக்கியமான காரியங்கள் நிறைவேறும்.

கடகம்

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 8-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். பயணத்தால் நலம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் அதிக லாபம் தரும்.

புதியவர்களின் தொடர்பு கிட்டும். அதனால் அனுகூலமும் ஏற்படும். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.

விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பெண்களால் நலம் உண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். 5-ல் சனியும் 9-ல் செவ்வாய், கேது ஆகியோரும் இருப்பதாலும் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதாலும் மக்கள் நலனிலும் தந்தை நலனிலும் கவனம் தேவைப்படும்.

அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள், அரசியல்வாதிகள், நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் ஏற்படும்.

பிரச்சனைகளும் சூழும். புத பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.

மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.

சிம்மம்

உங்கள் ராசிக்கு 6-ல் புதனும் 12-ல் வக்கிர குருவும் உலவுவது சிறப்பாகும். அறிவாற்றல் கூடும். பேச்சில் திறமை வெளிப்படும்.

வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கம்ப்யூட்டர் போன்ற இனங்கள் லாபம் தரும். நண்பர்கள் ஓரளவு உதவுவார்கள்.

பொருளாதார நிலை சீராக இருந்துவரும். சுபச் செலவுகள் சற்று கூடும். அலைச்சலைத் தவிர்க்க முடியாமல் போகும்.

சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்பத்தில் அமைதி காண அரும்பாடுபட வேண்டிவரும்.

எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.

புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை.

உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். வீண்சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். 15-ஆம் திகதி முதல் சுக்கிரன் 8-ஆமிடம் மாறுவதால் கலைத்துறையினருக்கு மந்த நிலை விலகும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும்.

கன்னி

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 6-ல் சூரியனும் 11-ல் குருவும் உலவுவதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்கள் உதவுவார்கள்.

பொது நல முன்னேற்றப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும்.

புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். தந்தையால் அனுகூலம் ஏற்படும். பண நடமாட்டம் அதிகரிக்கும்.

கடன் உபத்திரவம் குறையும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் ஒன்று இப்போது கைகூடும்.

நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவுவார்கள். செவ்வாய், சுக்கிரன், ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அலைச்சல் கூடும்.

கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கூட்டாளிகளால் ஏமாற்றப்பட நேரலாம்; எச்சரிக்கை தேவை.

பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. பெண்களால் பிரச்னைகள் சூழும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

துலாம்

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 5-ல் சுக்கிரனும், 6-ல் செவ்வாயும் கேதுவும் 10-ல் வக்கிர குருவும் உலவுவதால் பண வரவு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பேச்சில் திறமை வெளிப்படும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். நல்ல தகவல் வந்து சேரும்.

வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானம், தரகு, ஏஜன்ஸி போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள்.

புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். 15-ஆம் திகதிமுதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை.

பெண்களால் பிரச்னைகள் சூழும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது விழிப்புத் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 9-ல் குருவும், 11-ல் ராகுவும் உலவுவதால் சுகானுபவம் உண்டாகும்.

புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும்.

கலைத்துறையினருக்கு .வெற்றிகள் குவியும். பெண்களால் ஆடவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணை நலம் சிறக்கும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.

அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

ஜன்ம ராசியில் சனியும், 3-ல் புதனும் 5-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவதால் அலைச்சல் அதிகமாகும். மக்களால் சிறு சங்கடம் ஏற்படும்.

வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தினால் நஷ்டப்படாமல் தப்பலாம். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்குத் தெளிவு பிறக்கும். மந்திர, தந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும்.

15-ஆம் திகதி முதல் சுகிகிரன் 5-ஆமிடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மன உற்சாகம் பெருகும்.

தனுசு

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சூரியனும் சுக்கிரனும், 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். குரு 8-ல் வக்கிரமாக உலவுவதால் நலம் உண்டாகும். குடும்ப நலம் திருப்தி தரும்.

பேச்சாற்றல் கூடும். விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.

வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.

மாணவர்களது நிலை உயரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். கூட்டுத் தொழில் லாபம் தரும். நடுநிலையாளர்கள் பாராட்டுகளுக்கு உரியவர்கள் ஆவார்கள்.

மேடைப் பேச்சாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வித்துறைகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும்.

கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். கேளிக்கைல் உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.

அரசுப்பணியாளர்களது நோக்கம் நிறைவேறும். பண வரவு அதிகரிக்கும். 4-ல் செவ்வாய், கேது ஆகியோரும் 12-ல் சனியும் இருப்பதால் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது, வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

மகரம்

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் கேதுவும் 7-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

தொழிலாளர்களது கோரிக்கைகள் சில இப்போது நிறைவேறும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள் ஆகியவை லாபம் தரும்.

தொழில் முன்னேற்றத் திட்டங்களுக்காகச் செலவு செய்வீர்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். பெண்களால் ஆடவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். வியாபாரிகள் பொறுப்புடன் செயல்பட்டால் வளர்ச்சி காணலாம். மாணவர்களுக்கு திறமைக்குரிய வளர்ச்சி தெரியவரும்.

பேச்சில் கடுமையைக் குறைத்து இனிமையைக் கூட்டிக் கொண்டால் நலம் கூடப் பெறலாம். 15-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும்.

நல்ல தகவல் வந்து சேரும், போட்டிகளில் ஈடுபடவும் அவற்றில் வெற்றி பெறவும் சந்தர்ப்பம் கூடிவரும்.

கும்பம்

உங்கள் ராசியில் சுக்கிரனும், 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். குரு 6-ல் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். எடுத்த காரியங்களில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள்.

கலைத்துறை ஊக்கம் தரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு கூடும்.

மாதர்களது எண்ணங்களில் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் தங்கள் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயனைப் பெற்று வருவார்கள்.

தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். சுபச் செலவுகள் சற்று கூடும்.

ஜன்ம ராசியில் சூரியனும் 2-ல் செவ்வாய், கேது ஆகியோரும், 8-ல் ராகுவும் 12-ல் புதனும் உலவுவதால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. 15ம் திகதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் செல்வ நிலை உயரும்.

குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். சலசலப்புக்கள் குறையும்.

மீனம்

உங்கள் ராசிநாதன் குரு 5-லும் 11-ல் புதனும், 12-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் ஏஜன்ஸி மூலம் தொழில் புரிபவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.

நண்பர்கள், உறவினர்களது தொடர்பு பயன்படும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். கலைஞர்களுக்கு முன்னேற்றமான பாதை தெரியவரும். காண்ட் ராக்ட் முறையில் தொழில் புரிபவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும்.

இதர கிரகங்களின் நிலை சிறப்பாக இல்லாததால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். எதிலும் வேகம் கூடாது.

விவேகம் அவசியமாகும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

தந்தையாலும் அரசாங்கத்தாராலும் பிரச்னைகள் சூழும். செலவுகளும் ஏற்படும். 15-ஆம் திகதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும்.

கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். மன உற்சாகம் பெருகும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum