Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வையுங்கள்!

Go down

ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வையுங்கள்! Empty ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வையுங்கள்!

Post by oviya Mon Jan 05, 2015 1:32 pm

தமிழ் மக்கள் வாக்குரிமை என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வையுங்கள் என தமிழ்ப படைப்பாளிகள் சங்கம் மற்றும் கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழ்ப் படைப்பாளிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக் கூடிய எதிர்காலம் அமைவதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்குமாறும் ஜனவரி 8 ஆம் நாள் மைத்திரிபாலாவின் சின்னமான அன்னத்திற்கு தவறாமல் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய எதிர்காலம் அமைவதற்கு ஜனாதிபதித் தேர்தலில் அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து பொது எதிரணி சனாதிபதி வேட்பாளர் மைத்திரிபாலாவை வெல்ல வைக்குமாறு வட மாகாண சபை மாண்புமிகு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ்மக்களைக் கேட்டுள்ளார்.

மே 2009 க்கு பிறகு தமிழ் மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் சொல்லொணாத துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.

சிங்கள பௌத்த மேலாதிகத்தைக் கட்டிக் காக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழ் மக்களது அடிப்படை சஜநாயக உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து வருகிறார்.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை சிங்கள இராணுவம் கைப்பற்றியுள்ளது. வலிகாமம் வடக்கில் 6,382 ஏக்கர் நிலத்தை இராணுவம் அடாத்தாகப் பறித்துள்ளது.
அதே போல் கிழக்கு மாகாணத்தில் சம்பூர் மக்களுக்குச் சொந்தமான 10,000 ஏக்கர் காணியை சிங்கள இராணுவம் கைப்பற்றியுள்ளது.

இந்தக் காணி பறிப்பால் சுமார் 90,000 பேர் தங்களது சொந்த இடத்தில் மீளக் குடியமர முடியாத நிலை எழுந்துள்ளது. இந்த மக்கள் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாது குடிசைகளிலும் கொட்டில்களிலும் முகாம்களிலும் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் பல ஆண்டுகளாக அவல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

இப்போது முதல்முறையாக தென்னிலங்கையில் ஒரு ஆட்சிமாற்றத்துக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்மக்களைப் போலவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார குடும்ப ஆட்சியின் கீழ் பாதிக்கப்பட்டுள்ள சிங்கள மக்களில் ஒரு சாராரும் ஓர் ஆட்சிமாற்றத்தை விரும்புகிறார்கள்.

இந்த ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவர தமிழ் மக்கள் தங்களது கையிலுள்ள வாக்குச் சீட்டு என்று ஆயுதத்தை எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது பயன்படுத்த வேண்டும். எமக்கு எஞ்சியுள்ள ஆயுதம் இந்த வாக்குரிமைதான் என்பதை மறந்து விடக் கூடாது.

சற்றும் எதிர்பாராத வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கோட்டையில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆளும் கட்சியில் இருந்து இதுவரை 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்கள்.

எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா நாட்டில் மீண்டும் நல்லாட்சியை, சட்டதின் ஆட்சியை, மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவேன் என உறுதிபடக் கூறிவருகிறார். குடும்ப ஆட்சி ஒழிக்கப்படும் என்கிறார்.

ஜனநாயகத்தை நிலைநிறுத்தி இலங்கையில் உள்ள சிங்களவர், தமிழர், முஸ்லிம் மக்கள் அனைவரும் சம உரிமையோடு வாழ வழி அமைப்பேன் என்று மைத்திரிபால சிறிசேனா உறுதிமொழி வழங்கியுள்ளார்.

எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களை புன்மைத் தேரைகளாக, வாயில்லாப் பூச்சிகளாக, புழுக்களிலும் கேவலமாக, அடிமைகளாக நடத்தும் ஜனாதிபதி ராஜபக்சவின் கொடுங்கோல் ஆட்சியை தமிழ்மக்கள் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

வலி தந்தவர்களுக்கு வட்டியும் முதலுமாக நாங்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும். எமது வாழ்வுரிமையைப் பறித்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்கான வாய்ப்பை எதிர்பாராத விதமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டு ஆண்டுகளுக்கு முன்கூட்டியே வழங்கியுள்ளார்.

வீதிகள் அமைப்பதற்கும் தொடர்வண்டி ஓட விட்டதற்கும் ஈடாக தமிழ்மக்கள் தங்கள் தன்மானத்தை இழக்கமாட்டார்கள் என்பதை நாங்கள் உலகத்துக்கு எண்பித்துக் காட்ட வேண்டும்.

தன்துணை இன்றால், பகையிரண்டால், தானொருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று (பகைத்திறன் அறிதல் - குறள் 875)

இதன்பொருள்: துணையின்றித் தனித்திருப்பவன், தன்னை எதிர்த்த இரண்டு பகைகளில் ஒன்றைத் துணையாகக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்

வாக்குரிமை எமது பிறப்புரிமை அதை முழுமையாகப் பயன்படுத்துவோம்!

கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தேர்தல் புறக்கணிப்புகள் தமிழ் மக்களுக்கு தீமையையே விளைவித்துள்ளன.

யூன், 1931 இல் சட்ட சபைக்கு நடந்த தேர்தலை யாழ்ப்பாண இளைஞர் பேரவை (Jaffna Youth Congress) புறக்கணிக்கச் சொன்னது. அதன் காரணமாக தனிச் சிங்கள வாரியம் (Pan Sinhala Board of Ministers) ஒன்று உருவாகியது.

அதன் விளைவுகளைத் தமிழ் மக்கள் பின்னாளில் அனுபவித்தனர்.

1994 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை விடுதலைப் புலிகள் புறக்கணித்தார்கள். அதன் விளைவாக யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் டக்லஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி 10,744 வாக்குகளை மட்டும் பெற்று 9 உறுப்பினர்கயோடு நாடாளுமன்றம் சென்றது.

அதன் விளைவுகளை இப்போதும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.

2005 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் உத்தியோகப் பற்றற்ற முறையில் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னார்கள்.

புறக்கணிப்புக் காரணமாக மகிந்த ராசபக்ச சொற்ப பெரும்பான்மையோடு (180,786 வாக்குகள்) ஆட்சிக்கு வந்தார். அதன் விளைவை இந்தப் பொழுது மட்டும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஷஎனவே மீண்டும் ஒருமுறை அப்படியான தவறைச் செய்யாமல் மதிப்புக்குரிய இரா. சம்பந்தன் ஐயா, மாண்புமிகு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா முதலியோர் கேட்டுக் கொண்டபடி ஜனவரி 8 ஆம் நாள் நடைபெறவுள்ள தேர்தலில் எமது தாயக உறவுகள் முதல் கடமையாக வாக்குச்சாவடிக்கு வேளையோடு சென்று அன்னனச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum