Top posting users this month
No user |
Similar topics
கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்... நாடு பூராகவும் வங்கி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்....
Page 1 of 1

நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய, நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் கொழும்பிற்கு வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கி ஊழி்யர்கள் இணைந்து கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
2016ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் தமக்கான உரிமைகள் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இன்றைய தினம் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த போதிலும், பாராளுமன்றத்தில் பிரதமர் நேற்றைய தினம் ஆற்றிய உரையின் பின்னர் அந்த பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டிருந்தது.
எனினும், தமது கோரிக்கைகளை முன்வைத்து திட்டமிட்டவாறு தாம் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாகவும், இந்த நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
கொழும்பு - கோட்டை பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடமைகளில் கலகத் தடுப்பு பிரிவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» சுகாதார அமைச்சுகாதார அமைச்சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.
» கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள்
» விரிவுரையாளர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum