Top posting users this month
No user |
தரமில்லாத கட்டிடம் இடிந்து விழுந்தால்....! சிறார்களின் உயிருக்கு யார் பதில் சொல்வார்கள்?
Page 1 of 1

திருகோணமலை உப்புவெளி– துளசிபுரத்தில் நன்னடத்தை காரியாலயத்திற்கு அருகில் சிறுவர் பாதுகாப்பு இல்லம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட முன்பே வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியிலுள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சிறுவர்களின் பாதுகாப்பு இல்லம் சிறந்த முறையில் கட்டப்பட வேண்டும் என அரச உயரதிகாரிகள் அக்கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு 18 மில்லியன் 87 ஆயிரம் ரூபாயினை ஒதுக்கியிருந்த போதிலும்,
அக்கட்டடத்தை ஒப்பந்தக்காரரொருவர் 12 மில்லியன் 490 ஆயிரம் ரூபாவிற்கு கட்டி முடிப்பதற்கு ஒப்பந்த மூலம் பெற்றுள்ளதாகவும் கட்டிடங்கள் திணைக்களத்தின் மூலம் தெரிய வருகின்றது.
முன்னைய அரசாங்கத்தில் ஒப்பந்தக்காரர்கள் அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியும் – அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் வழங்கியும் தமது ஒப்பந்த வேலைகளை தரமின்றி செயற்படுத்தி வந்தனர்.
ஆனாலும், தற்போதைய நல்லாட்சி அரசும் – கிராமத்திலுள்ள பொதுமக்களும் திருட்டுத்தனத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்தகாரர்களின் விடயத்தில் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.
சிறுவர் பாதுகாப்பிற்கான நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் தரம் குறைந்த சீலிங் சீட்டுக்களுடனும் – மேல் கூரைகள் தரம் குறைந்த சீட்டுகளுடன் காட்சியளிப்பதையும் – கட்டடங்கள் வெடித்து காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
கட்டட பொறியியலாளர்கள் அரசுக்கும் – மக்களுக்கும் நம்பிக்கையாளர்களாக இருக்க வேண்டும். பொறியியலாளர்கள் ஒப்பந்தக்காரர்களின் பணத்திற்காக குறைகளை கண்டு மௌனம் சாதிப்பது சிறார்களின் நலனில் அக்கறையற்றவர்கள் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது.
எனவே அரசினால் கட்டட நிர்மாணத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட விலையை விடவும் ஆகவும் குறைத்து எடுக்கும் ஒப்பந்தக்காரர்கள் விடயத்தில் பொறியியலாளர்கள் மிகவும் கரிசனையுடன் செயற்பட வேண்டுமெனவும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தவறென்று தெரிந்தும் தொடர்ந்தும் பிழை செய்யும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சிறுவர்களின் எதிர்காலம் குறித்து சிந்திப்பார்களா?
தரமில்லாத கட்டிடம் நாளை இடிந்து விழுந்தால் சிறார்களின் உயிருக்கு நாளை யார் பதில் சொல்வது?

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum