Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜோதிடத்தின் வரலாறு

Go down

ஜோதிடத்தின் வரலாறு  Empty ஜோதிடத்தின் வரலாறு

Post by ram1994 Sun Dec 28, 2014 5:56 pm

ஜோதிடத்தின் வரலாறு கடவுளின் படைப்புக் காலத்திலிருந்தே தொடங்குகிறது. கார்க முனிவர், ஜோதிடவியல் படிப்புக் கடவுளாலேயே எடுத்துரைக்கப் பெற்றது என்றும் பிரம்மன் அதைப் படைத்த போதே தமக்கு அருளியதாகவும் கூறுகிறார். கார்க முனிவரிடமிருந்து மற்றைய முனிவர்கள் கற்று உலகம் எங்கும் பரப்பினார்கள். ஜோதிடம் உலகம் தோன்றிய போதே தோன்றியதாகத் தெரிகிறது.மேலை நாடுகளில் (கிமு 3769ல்) சேத் என்பவர் உலகத்தின் முதல் ஜோதிடம் என்ற நம்பிக்கை உள்ளது. அராபியர், எகிப்தியர் , யாதா, பாரசீக ஜோதிடர்கள் எழுதிய ஜோதிட நூல்களில் இருந்து இது அறியப்படுகிறது. கிரகங்களின் கற்றும் வழியையும் அவைகளின் வேகத்தையும் சேத் என்பவர் முதல் முதலில் ஆராய்ந்து அறிந்தார் என்று மேலை நாட்டினர்

நம்புகிறார்கள். விண்ணில் கிரகங்கள் செல்லும் விதியை 12 சரிசம பாகமாக அவர் தாம் பிரித்தார், ஏனெனில் சூரியன் விண் வெளியில்ஒரே பாதையில் ஆண்டு முழுவதும் செல்கிறது என்று அவர்கண்டார். மேலும் சூரியனின் வட்ட பாதை ஆண்டு பனிரெண்டு பௌர்ணமிகளை கொண்டதாகக் கண்டார். பௌர்ணமி 1 மாதத்திற்கு ஒரு முறை நிகழ்கிறது. ஆகவே சூரியன் செல்லும் பாதை பன்னிரண்டு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. இவைகளுக்குப் பெயர் மஸ்ஸரோத் என்பது, நம்மால் இராசி அல்லது சூரியன் மாளிகை என்றழைக்கப்படுகிறது.சுமார் 2600 ஆண்டுகளுக்குமுன், சாஸ்டியன் நாட்டு குருமார்களும் ஆட்டிடையார்களும் இவ்வறிவியலைக் கருத்தூன்றி படித்து இதை வளர்த்தார்கள். இந்தக் காலம் ஜோதிடத்தின் பொற்காலம் ஆகும். ஏனென்றால், அவர்கள் கிரகங்களின் எல்லா விதமான இயக்கங்களையும் மானிட வாழ்க்கையில் தொடர்புபடுத்தினர். நிகழும் எல்லாவிதமான நிகழ்ச்சிகளுடன் டாக்டர் தாம்சன் சொல்வது :

அக் கேடியர்களும் சுமோரியர்களும் விண்ணயையும் விண் வாய்ந்த பொருள் தொகுதிகளையும் கூர்ந்து கவனித்து அவைகளுடைய பாதைகளைக் கணித்தார்கள். பாபிலோனியர்களும் எகிப்தியர்களும் பூமியிலுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் மீது கவனம் செலுத்தினார்கள். ஜோதிடம் , பணக்காரர், குருக்கள், அரசர்கள் இவர்களிடையே செல்வாக்கும் பெற்றது. மெஸ்ப்ரோ என்பவர் தம் காலத்தில் ஜோதிடம் இல்லத் தலைவியாக இருந்தது என்று கூறுகிறார்.புராண காலத்தில் சாஸ்டிய நாட்டில் ஜோதிடம் தோன்றியது என்று சிலர் கருதுகின்றனர். சால்டியர் என்றால் ஜோதிடம் என்று பொருள் என்கிறார்கள். சால்டியர்களின் பொதுக் கருத்துக்களைப் பித்தகோரியஸ் முன்னேற்றினர். அவர்கள் மேம்பட்ட கணிதத்தை பயன்படுத்தினர். பின்னர் ஜோதிடம் கிரேக்கர்களின் கைகளுக்கு மாறியது. அவர்களுக்கு ஆழமான மத

நம்பிக்கையும் ஆராயும் மனப்பான்மையும் அவர்களிடமிருந்ததால் பிறப்பு ஜோதிடத்தில் அதிக கவனம் செலுத்தினர்.நான் யார், நான் ஏன் பிறந்தேன், நான் எதற்காக வாழ்கிறேன், என் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் ( உயர்வு, தாழ்வு நிலையில்) உள்ளன என்பவை அவர்களுடைய கேள்விகளில் இடம் பெற்றன. இவைகளுக்கு விடைகள் ஜோதிடத்தின் மூலமே கிடைத்தன. நனிவே, பாபிலோன் நாட்டின் பழக்கால ஜோதிடர்களுடைய அனேக ஆவணங்கள், பட்டயத்தகடுகளில் ஆங்கிலேயரின் அருங்காட்சிச் சாலையில் காண்ப்படுகின்றன. அவர்களுடைய கண்டுபிடிப்புகள் ஏற்க்குறைய 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும்.கிரேக்கர்களும் ஜோதிடத்தைப் பின்பற்றுவதில் ஊக்கமுடையவராக இருந்தனர். அவர்கள் பிறப்பு ஜாதகத்தைக் கணித்து அந்தப் பிறப்பு நேரடிப்படி அந்த நபர்களின் பண விஷயங்கள் குடும்பம், விதி, அதிர்ஷ்டம் வருங்காலப் பலங்கள் இவைகள் முன் கூட்டியே தெரியப்படுத்தினர். பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன் பாப்பிரஸில் எழுதி கணிக்கப் பெற்ற கிரேக்கிய ஜாதகம் உள்ளது. ஜோதிடத்தைக் கற்ற சால்டியர்கள் பெருமைமிகு அலெக்சாண்டரின் காலத்திலேயே புகழ் பெற்றிருந்தனர்.எகிப்தியர்களும் ஜோதிடத்தில் முக்கியமாக அக்கறை கொண்டு இருந்தனர். அவர்களுடைய நாட்டின் வருங்காலத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு பெற்றிருந்தனர். நினைவுச் சின்னங்கள் கல்வெட்டுக்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் மூலம் இக்கலை கிமு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை அறியவும். பாரோக்கள் ( எகிப்திய அரசர்கள் )

ஜோதிடங்களை மிகவும் மதித்தனர். அவர்களுக்குத் தலைவராக பாவிலஸ் என்ற ஜோதிடர் விளங்கினார் அவருக்கு வேலை என்னவென்றால் அரசருக்கு யார் எதிரியாகக் கூடும்,

சக்ரவர்த்திக்கு யார் தொல்லை தரக்கூடும் என்பதைச் ஜாதகங்கள் மூலமாகக் கண்டிபிடிப்பதுதான். எப்போதாவது பாபிலஸ் அப்படிப்பட்ட ஜாதகரை முன்னதாக அறிந்தால், அதனை அரசருக்குத் தெரிவிப்பார். அரசர் அவரைக் கொன்று விடுவார். பாரோக்கள் ஜோதிடர்களிடம் நம்பிக்கை வைத்திருந்தனர். அடிக்கடி அரசரின் கனவுகளுக்கு விளக்கம் தரும்படி அவர்க்ளைக் கலந்து ஆலோசிப்பர்.பெர்சியாவில், அரசர்கள் ஜோதிடர்களை அவர்களுடைய பரந்த அறிவியல் புத்திசாலித் தனத்திற்கு மதிப்புக் கொடுத்து கௌரவித்தனர். முகமது நபினாயகரின் சரியான பிறக்கும் நேரத்தை முன் கூட்டியே உரைத்தால் பெர்சிய அரசவையில் இருந்த ஜோதிடம் ஒருவருக்கு அல்ஹகீம் ( கற்றறிந்தவர் என்று பொருள் ) என்ற ஞமாஸ்ப் பட்டம் வழங்கப்பட்டது. சாரசென்ஸ் கி.பி 711ம் ஆண்டில் இந்த விஞ்ஞானத்தை ஸ்பெயின் நாட்டில் பரப்பினர். வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன் இனத்தவர் 1237ல் இந்த அறிவியலை ஐரோப்பாவில் பரப்பினர். சீன நாட்டில் கி.மு 2752 வாக்கில் போகி அரசர் காலத்தில் இருந்து ஜோதிடம் படிப்பதற்காக மட்டுமே, வானசாஸ்திரத்தை முன்னேற்றம் அடையச் செய்ததாக டாக்டர்.ப்ருஸ்டர் ஒப்புக் கொள்ளுகிறார். ஜோதிடத்தில் ஆழ்ந்த புலமைமிக்க ஜோதிடர்களாலேயே சீனச் சக்ரவர்த்திகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கி.மு 2513 ஆம் ஆண்டில் கியன் என்பவர் இந்த முறையிலேயே அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.மகா அலெக்சாந்தர் தாம் செல்லும்இடங்களுக்கெல்லாம் தம்முடைன் கலிஸ்தினிஸ் என்ற வான சாஸ்திரியையும் அழைத்துச் சென்றார். கிழக்கிந்திய நாடுகளிலும் இந்த

விஞ்ஞானத்தைப் பரப்பினர். இந்தியாவுக்கு அவர் வந்த போது இக்கலையை மேலும் கற்றுக்கொண்டார். தம் நாட்டில் இதை அபிவிருத்தி செய்ய அது உதவிகரமாய் இருந்தது. 38 வயதே ஆன 1486ல் பிறந்த ஹென்றிகார்னலியஸ் அக்ரிப்பா என்னும் ஜோதிடம் பிரான்சின் மன்னர் முதலாம் பிரான்சிஸ்க்குச் ஜோதிடராக இருந்தார். எலிசபெத் இராணியின் மதிப்பைப் ஜோதிடர் ஜான்டீ பிலாவைச் சேர்ந்த அபு மெஸார் என்பவர் பாக்தாதில் தேசிய ஜோதிட இயலுக்கு பேராசிரியராகத் திகழ்ந்தார். பழமை வாய்ந்த ஜோதிட நூல்களை அராபிக்

மொழியில் காலிப்மம்மன்னோராஷ்ட் என்பவர் மொழி பெயர்த்தார்.ஆக எல்லா நாடுகளும் இந்த அறிவியல் திறனில் மதிப்பு வைதிருந்தது துல்லியமான பலங்களைக் கூறும் தொழில் நுட்பத்திற்கு வேண்டிய அனுபவங்களையும், முடிவுகளையும் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களிடம் கற்றறிந்து கொள்ளுவது சிறந்தது. இந்த அறிவியலை விருத்தி செய்து வழங்கிய சில அயல் நாட்டவரை நான் குறிப்பிடுகிறேன் . அவர்கள் ஜோதிடத்தில் வல்லுனர்கள் என்பது மட்டுமன்றி புகழ் பெற்ற வானசாஸ்த்திரிகள் சரித்திரக்காரர்கள், தத்துவ ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் கவிஞர்கள் ஆவர்.
ஜோதிடத்தின் வரலாறு  Horoscope-wheel

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum