Top posting users this month
No user |
Similar topics
முஞ்சிஷ்பேதி மாத்திரை
Page 1 of 1
முஞ்சிஷ்பேதி மாத்திரை
தேவையானப் பொருள்கள்:
செய்முறை:
அளவு:
துணைமருந்து:
செய்முறை:
தீரும் நோய்கள்:
மருத்துணவு:
- செண்பக மொட்டு – 50 கிராம்
- கடுகுரோகிணி – 50 கிராம்
- மஞ்சள் கடுக்காய் தோல் – 50 கிராம்
- ஏலரிசி – 50 கிராம்
- நேர்வாளப்பருப்பு – 140 கிராம்
செய்முறை:
- செண்பக மொட்டு, கடுகுரோகிணி, மஞ்சள் கடுக்காய், ஏலரிசி ஆகிய நான்கையும்
- இடித்து தூள் செய்து ஒரு துணியினால் வடிகட்டிக் கொள்ள வேணடும்.
- பின்பு நேர்வாளப்பருப்பை பரவாலாக அரைத்து அதனுடன் தேவையான அளவு குளிர்ந்த தண்ணீர் சேர்த்து வெண்ணெய் போல் தயாரித்துக் கொள்ள வேண்டும்.
- பின் இரண்டையும் சேர்த்து சிறு உருண்டை அளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி ஒரு பளிங்குக் குப்பியில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அளவு:
- 1 முதல் 2 மாத்திரை
துணைமருந்து:
- கடுக்காய் தோல் – 3 கிராம்
- மஞ்சட் கடுக்காய் தோல் – 5 கிராம்
- அதிமதுரம் – 3 கிராம்
- நெல்லிமுள்ளி – 3 கிராம்
- ரேவல்சின்னி – 3 கிராம்
- வால்மிளகு – 3 கிராம்
- பறங்கிப்பட்டை – 3 கிராம்
- கொட்டைப்பாக்கு – 3 கிராம்
- கண்டந்திப்பிலி – 3 கிராம்
- அரிசித்திப்பிலி – 3 கிராம்
செய்முறை:
- கடுக்காய் தோல், மஞ்சட் கடுக்காய் தோல், அதிமதுரம், நெல்லிமுள்ளி, ரேவல்சின்னி, வால்மிளகு, பறங்கிப்பட்டை, கொட்டைப்பாக்கு, கண்டந்திப்பிலி, அரிசித்திப்பிலி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து தேவைதயான அளவு தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பாகமாக காய்ச்சி வடிகட்ட வேண்டும்.
- அவ்வாறு வடிகட்டின குடிநீரை இரவில் குடிக்க வேணடும். மீண்டும் மறுநாள் காலையில் மாத்திரைகளில் இரண்டை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
- இதனை தொடர்ந்து மூன்று நாள் அல்லது ஐந்து நாள் சாப்பிட வேண்டும்.
தீரும் நோய்கள்:
- சூலை பிரமேகம், அண்டவாயு, சுரம், பித்த வாயுஆகியவற்றை குணமாக்கும் மற்றும் கெட்ட நீரை கழிச்சல் மூலமாக வெளியேற்றும்.
- மேலும் இம்மாத்திரையை சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வெந்நீர் பருகினால் கழிச்சல் சுலபமாக இருக்கும்.
- உடலின் கெட்ட நீரை கழிச்சல் மூலம் வெளிப்படுத்துவதால் இதற்கு முஞ்சிஷ்பேதி மாத்திரை என்ற பெயர் உண்டு.
மருத்துணவு:
- நோய் வலிமை, உடல் வலிமை ஆகியவைகளுக்கு தகுந்தபடி கஞ்சி போன்ற ஆகாரம் பருக வேண்டும்.
- மேலும் பத்தியம் மேற்கொள்ள வேண்டும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum