Top posting users this month
No user |
Similar topics
கூந்தல் பராமரிப்பு...
Page 1 of 1
கூந்தல் பராமரிப்பு...
தேங்காய் எண்ணையை எப்போதும் தலைமுடியின் இயல்புக்கேற்ப தடவ வேண்டும். கேசம் எண்ணைப் பசையுடன் இருந்தால் வாரம் ஒரு முறை மட்டுமே எண்ணை தடவினால் போதும். வறண்ட கூந்தல் என்றால் தலைக்கு எண்ணை தேய்த்த பிறகுதான் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
எண்ணைப் பசையுள்ள தலைமுடியில் எண்ணையை தலைமுடி வேர்க்கால்களில் தடவாமல் மேற்புறமாக தடவ வேண்டும்.
ஏனென்றால் வேர்க்கால்களில் இயற்கையிலேயே எண்ணை சுரக்கிறது. ஒருவேளை திரும்பவும் நீங்கள் எண்ணை தடவினால் அதிகப்படியான எண்ணை சுரப்பைக் கொடுக்கும்.
எண்ணை பசை முடியா?
உங்கள் தலைமுடி அதிக எண்ணைப் பசையுடையதாக இருந்தால் ஷாம்புவில் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு குளிக்க வேண்டும். கூந்தலில் எண்ணையை அதிக நேரம் தடவி வைக்கக் கூடாது. தலைக்கு குளிப்பதற்கு 2 மணி நேரம் முன்பு எண்ணை தடவினால் போதும்.
வறண்ட கூந்தலில் வாரம் 2 முறை எண்ணை தடவலாம். வறண்ட சருமமாக இருந்தால் எண்ணையை சிறிது சூடுபடுத்தி முடியின் வேர்க்கால்களில் தடவ வேண்டும்.
எண்ணை தடவுவது எப்படி?
எண்ணை தடவுவதற்கு முன்பு கூந்தலை நன்றாக சிக்கெடுக்கவும். இதனால் சருமத்தின் மீது படிந்துள்ள உயிரற்ற திசுக்கள் மற்றும் தூசிகள் வெளியேற்றப்படும்.
சீப்பினால் வாரிய பிறகு கூந்தலின் இயல்புக்கேற்ப ஸ்பாஞ்ச் கொண்டு வேர்கால்களில் அல்லது தலைமுடியின் நுனிப்பகுதியிலும் லேசாக சூடுபடுத்தப்பட்ட எண்ணையால் நன்றாக மாலிஷ் செய்யவும்.
மாலிஷ் செய்வதால் தலையின் சருமப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அதோடு ரத்தக் குழாய்கள் சீரடைகின்றன.
கைவிரல்களை சிப்பு போல பயன்படுத்தி மாலிஷ் செய்ய வேண்டும் .எண்ணை இல்லாமல் தலையை குளுமைப்படுத்த குளிர்ந்த நீரில் ஸ்பாஞ்சை நனைத்து தலை சருமத்தின் மீது தேய்க்கவும்.
எண்ணையை தலை மீது கொட்டிய பிறகு விரலால் லேசாக பிடித்து நாலாபுறமும் அழுத்தி மாலிஷ் செய்யவும்.
என்னென்ன நன்மைகள்?
தலைமுடியை அடிக்கடி மாலிஷ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் இவை.
இரவில் மாலிஷ் செய்வதால் நாள் முழுவதும் ஏற்படும் களைப்பு உடனே மாயமாகும்.
தூக்கமின்மையால் அவதிப்படும் பெண்கள் இரவில் மட்டும் தலைமுடிக்கு கைவிரல்களால் லேசாக மாலிஷ் செய்யவும். தூக்கம் உங்கள் கண்களை தழுவும்.
தலைமுடிக்கு மாலிஷ் செய்வதால் தலைக்கு மட்டுமல்ல கண் மற்றும் காதுக்கும் நன்மை ஏற்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum