Top posting users this month
No user |
ஸ்வீட் கார்ன் சூப்
Page 1 of 1
ஸ்வீட் கார்ன் சூப்
டின் கார்ன் -- 200 கிராம்
கேரட் -- 1 என்னம் (துருவியது)
முட்டைகோஸ் -- 25 கிராம் (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
மிளகுப்பொடி -- 1 1/2 டீஸ்பூன்
கார்ன் ப்ளார் -- 3 டேபிள்ஸ்பூன்
வினிகர் -- 2 துளி
சோயாசாஸ் -- 2 துளி
அஜினோமோட்டோ -- 1 சிட்டிகை
வெண்ணைய் -- 2 டேபிள்ஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
சர்க்கரை -- ருசிக்கேற்ப
டின் கார்ன், கேரட்,கோச்,உருளை இவற்றை ஒன்றாக சேர்த்து அதனுடன் வெண்ணைய், உப்பு, சர்க்கரை சேர்த்து கலந்து சோயாசாஸ், வினிகரை ஊற்றி கலந்து 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து 7 நிமிடம் மைக்ரோவேவ் அவனில் ஹைய்யில் வைக்கவும்.
நடுவில் 2 முறை (3 நிமிடத்திற்கொரு முறை) எடுத்து கிளறிவிடவும்.
கார்ன் ப்ளாரை கொஞ்சம் தண்ணீரில் நீராக கரைக்கவும்.
அவனில் இருந்து வேகவைத்த கலவையை எடுத்து அதில் கரைத்த கார்ன் ப்ளார், பெப்பர், அஜினோமோட்டோ சேர்த்து நன்கு கலந்து மீண்டும் 4 நிமிடம் கொதிக்கவிடவும்.
சூப்பரான ஸ்வீட் கார்ன் சூப் ரெடி.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum