Top posting users this month
No user |
Similar topics
முள்ளங்கி கறி
Page 1 of 1
முள்ளங்கி கறி
முள்ளங்கி - ஒரு கோப்பை (சிறியது என்றால் வட்டமாக மெலிதாக நறுக்கவும், பெரிய சைஸ் என்றால் 1/4 பாகமாக மெலிதாக நறுக்கவும்)
வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி - ஒன்று (துண்டுகளாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 2 (இரண்டாக கீறியது)
அரைக்க:
தேங்காய்துருவல் - 1/2 கப்
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ்பூன் மட்டும், அரைக்க + 1/2 டீஸ்பூன்
பூண்டு - ஒரு பல்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கீற்று
நல்லமிளகு - 4
உப்பு - தேவைக்கேற்ப
மேலே கூறிய பொருட்களை எடுத்துக்கொள்ளவும், முள்ளங்கியை தோல்நீக்கி நறுக்கிக் கொள்ளவும். அதேப்போல் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
அரைக்கவேண்டிய பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, நல்லமிளகு, கறிவேப்பிலை, கீறிய பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும், இரண்டும் நன்றாக வதங்க வேண்டும்.
இரண்டும் வதங்கிய பின்பு முள்ளங்கியை போட்டு 4 முறை கிண்டி விட்டு 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் தூவவும். பின்னர் அளவாக தண்ணீர் விட்டு மிதமான தீயில் அடுப்பை வைக்கவும்.
ஒரு கொதிவந்த பின்னர் உப்பு போட்டு முள்ளங்கி கலவையை மூடிப்போட்டு வேக வைக்கவும்.
தண்ணீர் வற்றி முள்ளங்கி வெந்துவரும் போது நன்றாக கிளறி விடவும் தண்ணீர் வற்றின பின்பு அரைத்த கலவையை கொட்டி பச்சை வாசம் போகும் வரை அடிப்பிடிக்காமல் கிண்டவும். 2 நிமிடம் பொறுத்து இறக்கவும்.
இப்போது சுவையான முள்ளங்கி கறி தயார். தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கும் பொருந்தும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum