Top posting users this month
No user |
Similar topics
சுட்ட கத்தரிக்காய் மசியல்
Page 1 of 1
சுட்ட கத்தரிக்காய் மசியல்
கத்தரிக்காய் - 3
தக்காளி - ஒன்று
காய்ந்த மிளகாய் - 3
புளி - கொட்டைப் பாக்கு அளவு
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயப் பொடி - தாளிக்க
முதலில் கத்தரிக்காய் மற்றும் தக்காளியை ஒரு கம்பியில் அல்லது ஃபோர்க்கில் சொருகி தோல் பகுதியை அடுப்பில் சுட்டெடுக்கவும். காய்ந்த மிளகாயையும் சுட்டு வைக்கவும்.
சுட்டெடுத்த கத்தரிக்காயைச் சிறிது நேரம் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
பிறகு தண்ணீரிலிருந்து எடுத்து தோலை உரித்துக் கொள்ளவும். சுட்ட தக்காளியின் தோலையும் உரித்து வைக்கவும்.
சிறிது தண்ணீரில் புளியைக் கரைத்துக் கொள்ளவும். கத்தரிக்காய், தக்காளி மற்றும் காய்ந்த மிளகாயைக் கைகளால் நன்கு பிசைந்து மசித்து வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
அத்துடன் மசித்த கத்தரிக்காய் கலவையைச் சேர்க்கவும்.
பிறகு புளிக் கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து புளியின் பச்சை வாசனை அடங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
சுவையான சுட்ட கத்தரிக்காய் மசியல் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum