Top posting users this month
No user |
ஆலு டிக்கி பராத்தா
Page 1 of 1
ஆலு டிக்கி பராத்தா
கோதுமை மாவு - ஒரு கப்
உருளைக்கிழங்கு - கால் கிலோ
ப்ரெட் துண்டுகள் - 4
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
கேரட் துருவல் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிது
கோதுமை மாவை பிசைந்து வைக்கவும். கேரட்டை துருவி வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி உப்பு சேர்த்து பிசறி வைக்கவும். தயிரில் உப்பு, சர்க்கரை சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவை திரட்டி சப்பாத்திகளாக தேய்த்து சுட்டு எடுக்கவும்.
வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து விட்டு அதில் தூள் வகைகள், உப்பு, கொத்தமல்லித் தழை போட்டு அதனுடன் ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி விட்டு தண்ணீரில் நனைத்து சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்.
அதை கட்லெட் அளவிற்கு தட்டி பேனில் பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுக்கவும்.
சப்பாத்தியின் நடுவில் இரண்டு கட்லெட்களை வைத்து அதன் மேல் கேரட் துருவல் வைக்கவும்
அதன் மேல் தயிர் கலவையை ஊற்றவும்.
பின்னர் அதில் வெங்காயத்தை தூவி மூடி விடவும். சப்பாத்தி பிரிந்து வராமல் இருக்க மேலே டூத் பிக்கை குத்தி விடவும்.
சுவையான ஆலு டிக்கி பராத்தா தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum