Top posting users this month
No user |
முட்டை-தேங்காய் குழம்பு
Page 1 of 1
முட்டை-தேங்காய் குழம்பு
முட்டை - 4
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - ஒரு பெரிய துண்டு
பச்சை மிளகாய் - 6
சீரகம் - ஒரு ஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி
மஞ்சள் தூள் - 1 ஒரு ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
முட்டையை வேக வைத்து இரண்டாக நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
புளியை 1/2 டம்ளர் நீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.
சீரகம், மஞ்சள்தூள், தேங்காய் இவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.
இஞ்சியையும், பச்சை மிளகாயையும் ஒன்றிரண்டாக தனித்தனியே தட்டி எடுக்கவும்.
ஒரு சட்டியில் புளிதண்ணீர், கறிவேப்பிலை, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும், அரைத்த தேங்காய் விழுதை விட்டு இஞ்சி, பச்சை மிளகாய் தட்டியதை போட்டு உப்பு சேர்க்கவும். கெட்டியாக இருந்தால் 1/2 டம்ளர் நீர் விடவும்.
மறுகொதி வந்தவுடன் முட்டையை போட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்.
இது மஞ்சள் நிறத்தில் நல்ல வாசனையுடனும், சுவையாகவும் இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum