Top posting users this month
No user |
Similar topics
கறி முருங்கைக்காய் சால்னா
Page 1 of 1
கறி முருங்கைக்காய் சால்னா
கறி (எலும்புடன்) - கால் கிலோ
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - இரண்டு மேசைக்கரண்டி
புதினா - ஒரு மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு தூள் - ஒன்றரை தேக்கரண்டி
பெரிய முருங்கைக்காய் - ஒன்று
தேங்காய் பவுடர் - மூன்று தேக்கரண்டி (அ) மூன்று பத்தை தேங்காய்
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
நெய் (அ) டால்டா - ஒரு தேக்கரண்டி
பட்டை - இரண்டு (சிறிய துண்டு)
ஏலக்காய் - இரண்டு
கிராம்பு - இரண்டு
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். கறியை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினாவை மண் போக அலசி விட்டு பொடியாக நறுக்கி வைக்கவும். முருங்கைக்காயை ஒரு விரல் நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும். மற்ற அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வாசனை வந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை போகும் வரை வதக்கி விட்டு நிறம் மாறியதும் கொத்தமல்லி,
புதினாவை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
பிறகு நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கிளறி விட்டு சிறிது நேரம் மூடி போட்டு தீயை மிதமாக வைத்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாதூள், உப்பு ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்.
அதன் பின்னர் இந்த மசாலாவுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் கறி துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி விடவும்.
மசாலா எல்லாம் கறி துண்டுகளுடனும் சேரும்படி கிளறி தீயை குறைத்து வைத்து 3 நிமிடம் சுருள விடவும்.
3 நிமிடம் கழித்து கறி மசாலா கலவையுடன் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வெயிட் போட்டு 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
கறி வெந்ததும் அரை டம்ளர் தண்ணீரில் தேங்காய் பவுடரை போட்டு கரைத்து கறியுடன் ஊற்றி முருங்கைக்காய் துண்டுகளை போட்டு கொதிக்க விட்டு குக்கரை மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வரும் வரை வேக விடவும், அல்லது குக்கரை அப்படியே வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.
சுவையான கறி முருங்கைக்காய் சால்னா ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum