Top posting users this month
No user |
தமிழகத்தில் மேகி நூடுல்ஸுக்கு 3 மாத தடை: இந்தியா முழுவதும் மேகி நூடுல்ஸை திரும்பபெற நெஸ்ட்லே முடிவு
Page 1 of 1

தமிழகத்தில் மேகி உள்ளிட்ட நான்கு வகை நூடுல்ஸ்களுக்கு மூன்று மாதங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
செய்தி - மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே இந்தியாவில் பல வகை உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் காரீயத்தின் அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமாக உள்ளதாக ஒரு சில மாநிலங்களில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மூலம் தமிழகத்தில் விற்கப்படும் நூடுல்ஸ் உணவுப் பொருட்களின் மாதிரியை எடுத்து சோதனை செய்து அவை உணவு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கேற்ப உள்ளதா என கண்டறியுமாறு உத்தரவிட்டார்.
தமிழ்நாடு முழுவதும் 65 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் எடுக்கப்பட்ட 17 உணவு மாதிரிகளில் 7 மாதிரிகளில் பரிசோதனைக்குப் பின் ஆய்வக முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
இந்த 7 மாதிரிகளில் 6 மாதிரிகளில் காரீயத்தின் அளவு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 லட்சத்திற்கு 2.5 அதாவது 2.5 parts per million (PPM) என்ற அளவை விட அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ், வே வே எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன் ட் நூடுல்ஸ், ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலா ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காரீயத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை அறிந்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிறுவனங்கள் நூடுல்ஸ் உணவுப் பொருட்களை தமிழ்நாட்டில் தயாரிப்பதற்கும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் முதற்கட்டமாக மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உணவுப் பாதுகாப்பு ஆணையர் ஆணையிட்டுள்ளார்.
மேலும், இவ்வகை உணவுப் பொருட்களை விற்பனையிலிருந்து உடனடியாக திரும்பப் பெறுவதற்கும் இந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மேகி நூடுல்ஸ் தயாரிப்புகளை திரும்பபெற நெஸ்ட்லே நிறுவனம் முடிவு!
நாடு முழுவதுமுள்ள மேகி நூடுல்ஸ் தயாரிப்புகளை திரும்பபெற நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.
மேகி நூடுல்ஸ் பாக்கெட்டில் அளவுக்கு அதிகமான ரசாயன உப்பு (மோனோசோடியம் க்ளூட்ட மேட்) மற்றும் ஈயம் (லெட்) கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
டெல்லியை அடுத்து குஜராத், தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், மற்றும் உத்தரகாண்டிலும் மோனோசோடியம் குளூடாமேட் அதிகமாக இருப்பதால் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டது.
இந்த 4 மாநிலங்களும், மேகி நூடுல்சை திரும்பபெற வேண்டும் என்று நெஸ்ட்லே நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நெஸ்ட்லே நிறுவனம் தனது மேகி நூடுல்ஸ் தயாரிப்பை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நெஸ்ட்லே நிறுவனம், நேற்று நள்ளிரவு வெளியிட்ட அறிக்கையில், எதிர்பாராத விதமாக, மேகி நூடுல்ஸ் குறித்த சமீபத்திய மேம்பாடுகளும், ஆதாரமற்ற கவலைகளும், வாடிக்கையாளர்களிடம் ஒரு குழப்பமான சூழலை உருவாக்கியுள்ளது.
எனவே, எங்கள் தயாரிப்பை திரும்பப்பெற நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த குழப்பமான சூழல் முடிவுற்ற பின், மீண்டும் நம்பிக்கையுடம் மேகி நூடுல்ஸ் சந்தைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum