Top posting users this month
No user |
Similar topics
உளுந்து கொழுக்கட்டை - மற்றொரு முறை
Page 1 of 1
உளுந்து கொழுக்கட்டை - மற்றொரு முறை
பச்சரிசி மாவு - ஒரு ஆழாக்கு
உளுத்தம் பருப்பு - அரை ஆழாக்கு
கடுகு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - தேவையான அளவு
பெருங்காயம் - அரை சிட்டிகை
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
அரிசியில் தண்ணீர் விட்டு கழுவி காயவைத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவில் ஒரு டம்ளர் மாவுக்கு, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கிளறி, இட்லி பானையில் வைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
உளுத்தம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு ஊறிய உளுத்தம் பருப்புடன் உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கிளறி உருண்டையாக உருட்டி இட்லி தட்டில் வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெந்த பருப்பு உருண்டையை உதிர்த்து போட்டு நன்றாக வதக்கவும்.
விரும்பினால், சிறிது துருவிய தேங்காயும் சேர்த்து வதக்கி பூரணம் தயாரிக்கலாம்.
பிறகு, முன்பே தயாரித்த மாவை எடுத்து உருண்டையாக உருட்டி வட்டமாக தட்டி, அதில் பூரணத்தை வைத்து மூடி, இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum