Top posting users this month
No user |
அமெரிக்காவில் சொத்துக்களை குவித்துள்ள முன்னாள் பிரபல அமைச்சர்
Page 1 of 1

மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் அங்கம் வகித்த பிரபல அமைச்சர் ஒருவர், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ், ஆர்லிங்டன், வர்ஜனியா மற்றும் வொஷிங்டன் ஆகிய பிராந்தியங்களில் வீடுகள் மற்றும் காணிகளை கொள்வனவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் நாட்டு விஜயம் செய்துள்ள அமெரிக்க விசாரணை அதிகாரிகள், குற்ற புலனாய்வு பிரிவுக்கு இது குறித்து தெரியபடுத்தியுள்ளனர்.
இலங்கை குற்ற புலனாய்வு பிரிவு மற்றும் வேறு விசேட பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைக்கு ஆதரவு வழங்குவதற்காகவே அமெரிக்க விசாரணை பிரிவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கை அதிகாரிகளிடம் குறித்த விசாரணை தொடர்பில் தனது இணக்கப்பாட்டினை வெளிபடுத்தியிருந்தார்.
குறித்த அமைச்சர் அமெரிக்க விளம்பரப்படுத்தல் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இலங்கையின் சுயரூபத்தை வெளிக்காட்டும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்காக பல மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாகவும், அதன்போதே அவர் இந்த சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இவ்வாறு குறித்த அமைச்சரினால் இலங்கையின் சுயரூபத்தை வெளிகாட்டுவதற்கும் அமெரிக்க சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கும் பணம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசேட விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த அமைச்சரின் மனைவியின் பெயரில் உள்ள அறக்கட்டளை நிறுவனத்திற்கு அதிகளவான பணம் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் எவ்வாறு வைப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பிலும் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் ஐக்கிய அமெரிக்க குடியரசின் முன்னாள் தூதரக அதிகாரியினால் இராஜத்தந்திர நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட வியாபாரங்களில் ஈடுப்பட்டு பாரிய அளவில் பணம் சம்பாதிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்க விசாரணை அதிகாரிகள் இலங்கைக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 08ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் குறித்த தூதரக அதிகாரி உட்பட அவருக்கு நெருக்கமானவர்கள் தொடர்பில் தடயங்களை பெற்றுக்கொள்வதற்கு முடியாமல் போனதுடன் குறித்த தூதரக அதிகாரியின் சகோதரர் தலைவராக செயற்பட்ட பத்திரிகை நிறுவனத்திற்கு அரசாங்க பணம் பெற்றுக்கொடுக்கப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum