Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 4

Go down

ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 4            Empty ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 4

Post by oviya Thu May 28, 2015 7:14 am

அலங்கரிக்க :
ஐஸிங் சுகர் - கால் கோப்பை
ஜிஞ்சர்ப்ரெட் மனிதர்கள்
M&M's - 100 கிராம்
100's & 1000's - ஒரு தேக்கரண்டி
க்ளேஸ்ட் ஜிஞ்சர் - 100 கிராம்
சாக்லேட் ஃபிங்கர்ஸ் - ஒரு பாக்கெட் (200 கிராம்)
சாக்லேட் ஹெய்ல்ஸ் - 50 கிராம்
கம்பால் (Gumball) - ஒன்று
மின்ட் லீஃப் ஜூப்ஸ் (Spearmint Leaves) - 100 கிராம்
Silver Cachous - 10 கிராம்
Gold Cachous - 10 கிராம்



கதவையும் அதன் மேல் வட்ட வடிவ ஜன்னலையும் வரைந்து கொள்ளவும். (டிப் இல. 4) டிப்பை பேக்கிங்கிற்குச் செங்குத்தாகப் பிடிக்காமல் சரித்துப் பிடித்தால், ஐஸிங் விழாமல் பிடித்துக் கொள்ளும். ஐஸிங் உலரும் முன் இடுக்கியால் மணிகளை வைத்து ஒட்டிவிடவும்.


கூரையிலும் ஒரு வரி மணி ஒட்டிவிடவும். கூரையில் காட்டியுள்ளபடி வளைவுகள் (டிப் இல. 4) வரையவும். இடையில் சிறிது ஐஸிங் வைத்து, M&M எழுத்து இல்லாத பக்கம் வெளியே தெரியுமாறு ஒட்டிக் கொள்ளவும். இடையில் மணிகளையும் ஒட்டிக் கொள்ளவும். (ஓரங்களில் மணிகள் தேவையில்லை). இதே போல மறுபக்கக் கூரையிலும் செய்யவும். (புகைபோக்கி வரும் இடங்களில் மிட்டாய்கள் வைக்கத் தேவையில்லை.)


வீட்டின் முகப்பை, கம்பால் (Gumball), சாக்லேட் ஃபிங்கர்ஸ், M&M's கொண்டு காட்டியுள்ளபடி அலங்கரிக்கவும். (இப்போது ஐஸிங் போதுமான அளவு பார்வையிலிருந்து மறைந்துவிடும்). ஒரு பக்கம் ஜன்னலையும் வரைந்து நிரப்பவும்.


சாக்லேட் ஃபிங்கர்ஸ் நான்கை ஒன்றாக வைத்து, ஒரு பக்கமிருந்து ஒரு செ.மீ வெட்டிவிடவும். இதே போல இன்னும் நான்கு தயாராக்கி எடுக்கவும்.


கூரைச் சரிவுகளில் இவற்றை ஒட்டவும்.


சாக்லேட் ஃபிங்கர்ஸ் ஒட்டுப் போது அவற்றின் பின்பக்கம் ஐஸிங் வைத்து விட்டு ஒட்டுவது சுலபம். நன்கு பிடித்துக் கொள்ளும். பார்வைக்கு நேர்த்தியாகவும் இருக்கும்.


புகைபோக்கிக்கான துண்டுகளைக் காட்டியுள்ள விதமாக இரண்டிரண்டாக ஒட்டிக் காயவிடவும். இறுகும் வரை ஆதாரத்துக்காக, இப்படி ஒரு உயர்ந்த விளிம்பு கொண்ட ட்ரேயில் அல்லது அட்டைப் பெட்டியுள் வைத்திருக்கவும்.


புகைபோக்கியைப் பொருத்தி ஒட்டிவிடவும். கூரையில் நான்கு துண்டுகளும் படும் இடங்களிலும் (துண்டுகளில், கூரையில் அல்ல) ஐஸிங் வைத்து ஒட்டிக் கொள்ளவும். சிறிது நேரம் அசையாமல் பிடித்துக் கொள்ளவும்.


கதவில், T எழுத்தைத் தலைகீழாகப் பிடித்து கைப்பிடி போல ஒட்டவும். மணிகளையும் ஒட்டிவிடவும்.


ஜன்னலின் இருபுறமும் விரும்பியபடி தண்டுகள் (டிப் இல. 1) வரையவும். விரும்பிய நிறங்கள் இரண்டில் ஐந்தைந்து M&M's எடுத்து, இரண்டிரண்டாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய மிட்டாய்ப் பாதிகளை பூ வடிவத்தில் ஒட்டவும். மிட்டாயில் ஐஸிங் வைத்து, பிறகு சுவரில் பொருத்தமான இடத்தில் அழுத்தினால் ஒட்டிக் கொள்ளும். மின்ட் லீஃப் மிட்டாய்களை இலைகளாக ஒட்டவும்.


வீட்டின் பக்கங்கள், விளிம்புகள், கூரை எல்லாம் சரியானபடி பூரணப்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு, கூரையிலும் புகைபோக்கியிலும் பனி வடிந்து உறைந்திருப்பது போல (டிப் இல. 27) ஐஸ் செய்துவிடவும்.


கதவிலிருந்து நீண்ட பாதை போல இரண்டு கோடுகள் பைப் செய்து, பாதியாக வெட்டிய M&M's கொண்டு அலங்கரிக்கவும்.


பாதை முழுவதும் சாக்லேட் ஹெய்லை கொட்டிப் பரவிவிடவும். அதன் வெளிப்புறம் ஷேக்கரால் ஐஸிங் சுகரைப் பரவலாகத் தூவவும்.


ஏற்கனவே அலங்கரித்துக் காயவிட்ட ஜிஞ்சர் ப்ரெட் மனிதர்களை விரும்பிய இடத்தில் ஐஸிங் கொண்டு ஒட்டிவிடவும். (எங்காவது ஆதாரம் உள்ள விதமாக ஒட்டுவது நல்லது. நடுவில் நிறுத்தியிருக்கும் பொம்மைக்குப் பின்னால், அது சார்ந்து நிற்க உதவியாகத்தான் செடியைச் செய்திருக்கிறேன்).


மின்ட் லீஃப் மிட்டாய்களை கூம்பு போல அடுக்கி, மேலே ஒவ்வொரு பச்சை நிற M&M வைத்துவிடவும்.


ட்ரே விளிம்பில் மீதி இடங்களுக்கு சாக்லெட் ஃபிங்கர்ஸை வைத்து நிரப்பவும். க்ளேஸ்ட் ஜிஞ்சரைக் குவித்து வைத்தால் பாறை போல் தெரியும். வீட்டுக் கூரையிலும் பாதையின் மேலும் மிக மெல்லிதாக, பனி தூவினாற் போல தெரியும் விதமாக ஷேக்கரைக் கொண்டு ஐஸிங் சுகர் தூவிவிடவும். டீ டவலை நனைத்துப் பிழிந்து விட்டு, ட்ரே ஓரங்களைத் துடைத்து விட்டால் அழகான ஜிஞ்சர் ப்ரெட் வீடு கிடைக்கும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum