Top posting users this month
No user |
கார வடகம்
Page 1 of 1
கார வடகம்
பச்சை மிளகாய் - ஒரு கிலோ
மெல்லிய அவல் - 200 கிராம்
சீரகம் - 2 மேசைக்கரண்டி
வெந்தயம் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 2 மேசைக்கரண்டி
உப்பு - 2 மேசைக்கரண்டி
தயிர் - கால் லிட்டர்
மிளகாயை காம்புகளை நீக்கி விட்டு எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மத்தை கொண்டு சிலுப்பி வைத்துக் கொள்ளவும்.
அதே மிக்ஸியில் மிளகாயை இரண்டிரண்டாக கிள்ளி போட்டு அதனுடன் உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும். விழுதாக அரைத்து விட கூடாது செதில்செதிலாக இருக்க வேண்டும். ஒரே முறையில் போட்டு அரைக்க வேண்டுமென்றால் கிரைண்டரில் போட்டு அரைக்கலாம். மிக்ஸியில் அரைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக அரைக்க வேண்டும்.
அரைத்த மிளகாய் விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் பொடித்த வெந்தயம், கடுகு, சீரகம் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதில் சிலுப்பி வைத்திருக்கும் தயிரை ஊற்றி கிளறி ஒரு நாள் முழுவதும் ஊற விடவும்.
அடுத்த நாள் செய்ய போகும் ஒரு மணி நேரத்திற்கு முன் அவலை மூழ்கும் அளவு தண்ணீரில் ஊற வைத்து விடவும்.
ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து விட்டு பச்சை மிளகாய் கலவையுடன் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
வெயிலில் ஒரு ப்ளாஸ்டிக் கவரை விரித்து மிளகாய் கலவையை ஒரு எலுமிச்சை அளவு எடுத்து வடை போல தட்டவும். மிகவும் மெல்லியதாக தட்ட வேண்டாம். அன்று முழுவதும் காய வேண்டும்.
இதைப் போல் மூன்று நாட்கள் காய வேண்டும். நன்கு காய்ந்த பிறகு எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
தேவைப்படும் போது எடுத்து எண்ணெயில் பொரித்து சாப்பிடவும். பொரித்த பிறகு உதிர்த்து விட்டு எண்ணெய் ஊற்றி இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum