Top posting users this month
No user |
எண்ணெய் கத்திரிக்காய்
Page 1 of 1
எண்ணெய் கத்திரிக்காய்
கத்திரிக்காய் - 8 - 10 (சிறியது)
கடுகு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 8 - 10 இலைகள்
பச்சை மிளகாய் - 3 நீளவாக்கில் நறுக்கியது
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
அரைப்பதற்கு:
எள்ளு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1 டீஸ்பூன் (நன்கு அரிந்தது)
பூண்டு - 1 டீஸ்பூன் (நன்கு அரிந்தது)
வெங்காயம் - 1/4 கப்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
தனியா பொடி - 1 டீஸ்பூன்
ஜீரா பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
புளி விழுது - 1 டீஸ்பூன்
கத்திரிக்காய் காம்பு பகுதியை விட்டு விட்டு, மறுபக்கத்திலிருந்து கத்திரிக்காயை நான்காக நீளவாக்கில் நறுக்கவும்.
கத்திரிக்காய் காம்போடி ஒட்டிக் கொண்டிருக்கவேண்டும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களில், எள்ளு, தேங்காய், இஞ்சி, பூண்டு, வெங்காயம், வேர்க்கடலையை லேசாக வறுத்து (எண்ணெயில்லாமல்), இதனுடன் மஞ்சள் பொடி, தனியா பொடி, மிளகாய் பொடி, ஜீரா பொடி, புளி விழுது, சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம் சேர்த்து வெடிக்க விடவும்.
நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயை அதில் சேர்க்கவும்.
பிறகு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி தனியாக வைக்கவும்.
அதே வாணலியில் அரைத்த விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
வறுத்த கத்திரிக்காயை இந்த விழுதுடன் சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து, உப்பும் சேர்த்து கொதிக்கவிடவும்.
கத்திரிக்காய் நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து சாதம், சப்பாத்தியுடன் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum