Top posting users this month
No user |
மகிந்தவுக்காக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நிதி மோசடி செய்தவர்களுக்கு எதிராக வழக்கு
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்களை ஒளிபரப்பியமை தொடர்பில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை பிரிவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் 200 மில்லியன் நிதி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த மோசடி சம்பவம் தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு நடத்திய விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், சந்தேக நபர்களுக்கு எதிராக விரைவில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதேவேளை இத்தாலியில் இருந்து செய்மதி தொலைக்காட்சி மூலம் ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பட்டமை தொடர்பில் நடந்த 6.5 மில்லியன் ரூபா முறைகேடான கொடுக்கல் வாங்கல்கள் குறித்து ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருகிறது.
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு அமைய இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த விசாரணைகளை நடத்தி வருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum