Top posting users this month
No user |
Similar topics
20 ஆண்டுகளாய் நோயுற்ற வாலிபர்: ஆசையாய் காதலித்து மணமுடித்த புதுமைப்பெண்
Page 1 of 1

கன்னியாகுமரியில் 20 வருடமாக படுக்கையில் இருக்கும் வாலிபருக்கு அவருடைய காதலியுடன் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.
கன்னியாகுமரியில் தக்கலையை அடுத்த மருதூர் குறிச்சி காலனி, சேரிக்கடையைச் சேர்ந்த ஜார்ஜ் வில்லியம், அன்னம்மாள் தம்பதிக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
விஜயகுமார், ஜெயகுமார் என பெயரிடப்பட்ட இருவருக்கும் 10 வயது ஆன போது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் எவ்வித பயனும் இல்லை.
நோய் குணமாகாததால் இருவரும் நடக்க முடியாமல் படுக்கையில் விழுந்துள்ளனர்.
பின்னர் சமூக ஆர்வலர்கள் மூலம் இந்த இரட்டையர்கள் பற்றிய விவரத்தினை அறிந்த கேரளாவைச் சேர்ந்த உத்தமன் என்பவரின் மகள் மஞ்சுஷா சேரிக்கடைக்கு வந்துள்ளார்.
அவர் இரட்டை சகோதரர்களில் மூத்தவரான விஜயகுமாரை கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி மஞ்சுஷா திருமணம் செய்து கொண்டதால் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த நெல்லை மாவட்டம் நாங்குநேரி பருத்திபாடு பகுதியைச் சேர்ந்த சிவகுல தேவி என்பவர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
பின்னர் அவருக்கு வாழ்க்கை கொடுக்க முன் வந்த சிவகுலதேவி பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார்.
இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த அவர்கள், பின்னர் ஜெயக்குமாரை சிவகுல தேவிக்கு திருமணம் செய்து வைக்க ஒப்புக் கொண்டதால் இருவீட்டு பெற்றோரும் பேசி முடிவு செய்தனர்.
இதையடுத்து இருவீட்டார் ஏற்பாடுகளின்படி நேற்று அவர்களுக்கு திருமணம் நடந்தது. மணமகன் வீட்டில் நடந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 20 ஆண்டுகளாய் நோயுற்ற வாலிபரை ஆசையாக மணமுடிக்கும் பெண்
» ”இதுதான் உண்மையான காதல்” ஆசிட் வீச்சில் பார்வையிழந்த பெண்ணை மணமுடித்த வாலிபர்
» காதலித்து ஏமாற்றிவிட்டார்: புதுமுக நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum