Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நீங்காத செல்வம் தரும் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில்

Go down

தரும் - நீங்காத செல்வம் தரும் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் Empty நீங்காத செல்வம் தரும் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:27 pm

திருவாரூர் மாவட்டத்தில் 'கோவில்பாதி, குளம்பாதி' என்ற பழமொழியை தனக்கே உரித்தாக்கிக்கொண்ட ஊர் மன்னார்குடி. மன்னர்கள் இவ்வூரில் குடிகொண்டு இருந்ததால் 'மன்னார்குடி' என்ற பெயர் வந்தது. மன்னார்குடி மதில் அழகு என்பது இவ்வூருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள விஷ்ணு கோவில்களில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் தனிச்சிறப்புடையதாக விளங்குகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் மகாவிஷ்ணு சங்கு, சக்கரம் இல்லாமல் உபயகரங்கள், செண்டுடன் சேவை சாதிப்பது சிறப்பம்சம்.

இக்கோவில் முதலாம் குலோத்துங்க மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. அர்த்த மண்டபம், 3-ம் கோபுரம் ஆகியவற்றையும் அவர் கட்டினார். அவர் காலத்திற்கு பின் வந்த மன்னர்களால் இக்கோவில் பராமரிக்கப்பட்டது. கோவிலுக்கு எதிரே 54 அடி உயரமுள்ள கருட ஸ்தம்பம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது.

கம்பத்தின் மேல் தளத்தில் கருடனுக்கு அழகிய கோவில் உள்ளது. கோவிலில் பெருமாள் மூலவர் ஸ்ரீவாசுதேவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். ருக்மணி, சத்தியபாமாவுடன் வித்ய ராஜகோபாலனாக உற்சவமூர்த்தி காட்சியளிக்கிறார். இவருக்கு ராஜமன்னார், கோபாலன் என்ற திருப்பெயர்களும் உண்டு.

ஒரு காதில் குண்டலமும், ஒரு காதில் தோடும் அணிந்து வித்ய ராஜகோப£லன் என்ற திருப்பெயரோடு ஒரு வஸ்திரத்தில் இடுப்பில் கச்சம், சிரசில் முண்டாசு, வலது கரத்தில் பொன்சாட்டையுடன், மாடு-கன்றுகளுடன் இடையர் உருவத்தில் நின்ற திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார். மூலவர் செண்பக லட்சுமியாகவும், உற்சவர் செங்கமலத்தாயாராகவும் காட்சி தருகிறார். இத்திருக்கோவிலில் பெருமாள் தாயார் சன்னதி உள்பட 24 சன்னிதிகள் உள்ளன.

மண்டபம் :

இக்கோவிலுக்கு வல்லாள மகாராஜன் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், கருட வாகன மண்டபம், யானை வாகன மண்டபம், பலகனி மண்டபம், வெண்ணைத்தாழி மண்டபம், புன்னை வாகன மண்டபம் என 7 மண்டபங்கள் உள்ளன. கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள ராஜகோபுரத்தின் உயரம் 154 அடி. மேற்கு கோபுரம் சிற்பம் வேலைப்பாடுகள் நிறைந்தது.

ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாதருக்கு ஆண்டு முழுவதும் நடைபெறுவது போல் ராஜகோபாலசுவாமிக்கும் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறுகிறது. ஆனி மாதத்தில் ஹரித்ரா நதி குளத்தில் நடைபெறும் தெப்பத்திருவிழா, ஆடிமாதத்தில் செங்கமலத்தாயார் தேர்த்திருவிழா, மார்கழி மாதத்தில் இராப்பத்து, பகல்பத்து உற்சவம், ஏகாதசி திருவிழா போன்ற விழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா 18 நாட்களும், விடையாற்றி திருவிழா 12 நாட்களும் சேர்த்து 30 நாள் திருவிழா நடைபெறும். அதில் வெண்ணைத்தாழி, கருடசேவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். மன்னார்குடிக்கு பெருமை சேர்ப்பது ஹரித்ரா நதி திருக்குளம்.

23 ஏக்கர் பரப்பளவு தண்ணீர் உள்ள இக்குளத்தில் நடுவில் வேணுகோபாலன் திருக்கோவில் உள்ளது. நான்கு கரைகளிலும் வீதிகள் உள்ளன. குளத்தின் தெற்கே கரை நீண்ட படிக்கட்டுக்களை கொண்டது. நான்கு கரைகளிலும் ஆஞ்சநேயர், ராமர், விநாயகர், சீனிவாசர் ஆகியோருக்கு கோவில்கள் அமைந்துள்ளன.

தலவரலாறு :

கும்பகோணத்துக்கு தென்கிழக்கில் சம்பக வனம் உள்ளது. இங்கு 1,008 முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களில் வஹ்னிமுகர் சிறப்புடையவர். அவருக்கு கோப்பிரளயர், கோபிலர் என்றும் 2 மகன்கள் இருந்தனர். அவர்கள் தீ நடுவே ஒற்றைக்காலில் நின்று எட்டெழுத்தோதி நாராயணனை குறித்து தவம் மேற்கொண்டனர்.

பெருமான் அவர்கள் முன்தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். உடனே அவர்கள், 'எங்களுக்கு மோட்சம் வேண்டும்' என்றனர். அப்படியானால் துவாரகையில் உள்ள கண்ணபிரானை தரிசித்தால் அப்பேறு கிட்டும் என்றார் பரமாத்மா. இருவரும் மகிழ்ந்து துவாரகையை நோக்கி புறப்பட்டனர்.

வழியில் அவர்கள் நாரத முனிவரை சந்தித்து, 'கண்ணபிரான் எங்கு இருக்கிறார்?, துவாரகை எங்கு உள்ளது?' என்று கேட்டனர். நாரதர், 'கண்ணபிரான் இவ்வுலகில் கம்சன் முதலான தீயவர்களை அழித்து விண்ணுலகம் சென்றுவிட்டார்' என்று கூறினார். இதைக்கேட்ட இருவரும் மயங்கி விழுந்துவிட்டனர்.

நாரதர் அவர்கள் பக்தியை கண்டு மகிழ்ந்தார். பின்னர் நாரதர் அவர்கள் இருவருக்கும் பன்னிரெண்டழுத்து மந்திரத்தை உபதேசித்து, 'நீங்கள் கும்பகோணத்துக்கு தெற்குபுறம் உள்ள செண்பகாரண்யம் என்னும் தலத்தில் உள்ள ஹரித்ரா நதிகரைக்கு சென்று நீராடி, அங்கு 1 வருடம் தவம் இருந்தால் பகவான் உங்களுக்கு காட்சி தருவார்' என்று கூறினார்.

இருவரும் மகிழ்ந்து ஹரித்ரா நதியை அடைந்து ஆசிரமம் அமைத்து கடும் தவம் இருந்தனர். அவர்கள் தவத்தை கண்டு மகிழ்ந்து பரந்தாமன் அவர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது அவர்கள் இருவரும் 'பெருமானே! அன்று பிருந்தாவனத்தில் செய்த லீலைகளை இன்று நாங்கள் காணும் படி அருள வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

பரந்தாமன் கண்ணனாக அவதாரம் செய்து காட்டிய லீலைகள் அவர்களுக்கு காட்டி அருளாசி புரிந்தார். கண்ணனது 30 சேவைகளையும் இரு முனிவர்களும் கண்டு பரவசமுற்றனர். பின்னர் அவர்கள் கண்ணீர் மழைபொழிய பரந்தாமனின் திருவடிகளில் விழுந்து வணங்கி, 'தாங்கள் இத்திருக்கோலத்துடன் என்றும் இந்த இடத்திலேயே எழுந்தருளி எல்லோருக்கும் காட்சி தந்தருள வேண்டும்' என்று வேண்டிக்கொண்டனர்.

அவர்கள் வேண்டுதலின் படி ஓங்கி உலகளந்த உத்தமன் செண்பகாரண்யத்தில் ராஜகோபாலனாய் கோவில் கொண்டான். இத்தலத்தில் பரந்தாமன் பிரம்மாவின் அகந்தையை அழித்து அவருக்கு உண்மை அறிவை ஊட்டினார். இதனால் மகிழ்ந்த பிரம்மன் இத்தலத்தில் விசுவகர்மாவை கொண்டு ஸ்வாயம்புல விமானத்துடன் கூடிய கோவிலை அமைக்க செய்து பரமாத்மாவை தானே பிரதிஷ்டை செய்து, பங்குனி ரோகிணியில் தேர்த்திருவிழாவையும் சிறப்பாக நடத்தி மகிழ்ந்தார்.

திருமகள் இத்தலத்தின் வடகிழக்கு கோவில் செந்தாமரை பொய்கையில் அவதரித்தாள். பிருகுமுனிவர் அவரை தன் மகளாக வளர்த்து பின்னர் பரந்தாமனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். மகாலட்சுமி அவதரித்த குளம் இன்று 'திருப்பாற்கடல்' என்று அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் அக்னி பகவான் தவமிருந்து, பெருமானின் அருளால் இழந்த தனது ஒளியையும் வெப்பத்தையும் மீண்டும் பெற்றார். இந்த ஆண்டு வெண்ணைத்தாழி உற்சவம் வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum