Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


லால்குடி ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் ஆலயம்

Go down

ஸ்ரீ - லால்குடி ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் ஆலயம் Empty லால்குடி ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் ஆலயம்

Post by oviya Sat Apr 18, 2015 2:59 pm

ஸ்தல வரலாறு:

திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் பாதையில் 17 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது லால்குடி. இங்கு பழம்பெரும் சிறப்புமிக்க ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் ஆலயம் இருக்கிறது. மனைவி மீது கோபப்பட்டு, மாமனார் வீட்டுக்கு விரட்டி விட்ட ஆண்களுக்கு தண்டனை தரும் கோவில் இது என்கிறார்கள். மாலிக்காபூர் படையினர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது இந்த ஊர் பக்கம் வந்தார்கள்.

அப்போது திருவத்துறை ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் கோவில் கோபுரத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு அழகுபடுத்தும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அதனைக் கவனித்த மகாலிக்காபூர் அருகில் இருந்த தளபதியிடம் உருது மொழியில், 'அது என்னலால் (சிகப்பு) குடி (கோபுரம்)?...' என்றான். அச்சொற்றொடரே லால்குடி என்று மாறி விட்டது.

இந்த கோவிலில் மிகப் பழமையான கோவில். மூலவர் சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார். அம்பாள் பெயர் சிவகாம சுந்தரி. சப்தரிஷிகளான அத்தரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி-ஆகிய 7 பேரும் சிவனை அடைந்த தலம் என்பதால், இறைவனுக்கு ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் எனப் பெயர் ஏற்பட்டது.

இவர்கள் 7 பேரும் நவக்கிரகங்களின் உறவினர்கள். மாரிசி மகரிஷியின் பேரன் தான் சூரியன் அத்திரியின் மகன் தான் சந்திரன், சந்திரனின் மகன் புதன், அங்கீசரின் மகன் குரு, வசிட்டரின் வழி வந்தவர்தான் செவ்வாய். எனவே நவக்கிரகங்களால் இன்னல் படுபவர்கள் சப்தரிஷிஸ்வரரை வணங்கினால் இன்னல் தீரும் என்று சொல்லப்படுகிறது.

இங்குள்ள லிங்கத்தின் மேல் வரி வரியாய் பள்ளங்கள் காணப் படுகின்றன. தாரகா சூரனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் சிவனிடம் முறையிட்டார்கள். சூரனின் அட்டகாசத்தை அடக்குவதாக சிவன் வாக்களித்தார். அதன் பொருட்டுத்தான் சூரனை அழிக்க முருகன் பிறந்தார். அடர்ந்த வனத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகியோர் அமைதியாய் வாழ்ந்தனர்.

அவர்களிடம் திரு விளையாடல் செய்ய ஈசன், இளம் பாலகனாக உள்ள முருகனை கொண்டு வந்து அந்த 7 குடில் பகுதியில் பேபாட்டார். ரிஷி பத்தினிகள் அதிசயமாய் அந்தக் குழந்தையைப் பார்த்தனர். பாலகுமாரன் லேசாய் அழத் துவங்கினான். 7 பெண்களும் குழந்தைக்கு விளையாட்டு காட்டினர். குழந்தைக்கு பசி ஏற்பட அழுகை அதிகரித்தது.

ரிஷி பத்தினிகள் பால் தர மறுத்தார்கள். அதனால் அங்கே வந்த கார்த்திகைப் பெண்கள் தூக்கிப் பரிவோடு தாலாட்டிப் பாலூட்டினார்கள். வேள்வி முடித்து வந்த முனிவர்கள் தத்தம் மனைவியர் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததைக் கேள்விப்பட்டனர்.

சிவனின் வாரிசுக்குப் பால் கொடுத்ததால் எவ்வளவு பெரும் பாக்கியம், காலம் காலமாய் அந்த சந்தோஷத்தில் காலம் கழிக்கலாமே. அந்த நல்ல வாய்ப்பைப் கெடுத்து, அந்தப் புகழைக் கார்த்திகைப் பெண்களுக்குக் கொடுத்து விட்டீர்களே என்று மனைவியரை அடித்து விரட்டினர்.

முருகப் பெருமான் தனது அவதார காரணத்தை உணர்ந்தார். தாராகா சூரனைக் கொன்று போட்டு, வெற்றி வீரராய்த் திரும்பிக் கொண்டிருந்தபோது, சப்தரிஷிகளும் தத்தம் மனைவியரை விரட்டிய விஷயம் கேள்விப்பட்டு வெகுண்டார்.

அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 ரிஷிகளுக்கும் தீராத சாபமிட்டுச் சென்றார். நேராக திருவையாறு சென்று, சிவனை வணங்கித் தவம் செய்தனர். பலன் கிடைக்கவில்லை. பிறகு லால்குடி (திருவத்துறை) வந்து, சிவனை நினைத்துக் கடும் தவும் புரிந்தனர்.

கோபத்தில் மனைவியரை விரட்டிய பாவத்திற்குப் பிராயச்சித்தம் தந்து, தங்களை ஆட்கொள்ளுமாறு கடும் தவம் இருந்தனர். இதையடுத்து சிவன் ஆண்களுக்கு சாப விமோசனம் தரும் தலமாக இது கருதப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum