Top posting users this month
No user |
Similar topics
20 ஆண்டுகளாய் நோயுற்ற வாலிபரை ஆசையாக மணமுடிக்கும் பெண்
Page 1 of 1

கன்னியாகுமரியில் 20 ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் வாலிபரை பெண் ஒருவர் திருமணம் செய்ய முன்வந்துள்ளார்.
கன்னியாகுமரியில் தக்கலையை அடுத்த மருதூர் குறிச்சி காலனி, சேரிக்கடையைச் சேர்ந்த ஜார்ஜ் வில்லியம், அன்னம்மாள் தம்பதிக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
விஜயகுமார், ஜெயகுமார் என பெயரிடப்பட்ட இருவருக்கும் 10 வயது ஆன போது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் எவ்வித பயனும் இல்ல.
நோய் குணமாகாததால் இருவரும் நடக்க முடியாமல் படுக்கையில் விழுந்துள்ளனர்.
பின்னர் சமூக ஆர்வலர்கள் மூலம் இந்த இரட்டையர்கள் பற்றிய விவரத்தினை அறிந்த கேரளாவைச் சேர்ந்த உத்தமன் என்பவரின் மகள் மஞ்சுஷா சேரிக்கடைக்கு வந்துள்ளார்.
அவர் இரட்டை சகோதரர்களில் மூத்தவரான விஜயகுமாரை கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி மஞ்சுஷா திருமணம் செய்து கொண்டதால் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த நெல்லை மாவட்டம் நாங்குநேரி பருத்திபாடு பகுதியைச் சேர்ந்த சிவகுல தேவி என்பவர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
பின்னர் அவருக்கு வாழ்க்கை கொடுக்க முன் வந்த சிவகுலதேவி பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார்.
இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த அவர்கள், பின்னர் ஜெயக்குமாரை சிவகுல தேவிக்கு திருமணம் செய்து வைக்க ஒப்புக் கொண்டதால் இருவீட்டு பெற்றோரும் பேசி முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து வரும் 22ம் திகதி குமரி மாவட்ட தலித் மக்கள் கூட்டமைப்பின் தலைவர் பால்ராஜ் தலைமையில் மாவட்ட பொருளாளர் ரிச்சர்டு மனுவேல் முன்னிலையில் மருதூர் குறிச்சியில் இவர்களின் திருமணம் நடக்கிறது.
சிவகுலதேவி இதுபற்றி கூறுகையில், எனது தந்தை கூலி வேலை செய்கிறார். நான், 8–வது வகுப்பு வரை படித்துள்ளேன்.
தன் கை, கால் செயல் இழந்த ஒருவருக்கு மஞ்சுஷா வாழ்க்கை கொடுத்த தகவல் என்னையும் அதுபோன்ற செயலில் ஈடுபட செய்தது.
மேலும், திருமணத்திற்கு பிறகு நான், ஜெயக்குமாருக்கு நல்ல மனைவியாக இருப்பேன். இறுதிவரை அவருக்கு ஊன்றுகோலாக திகழ்வேன் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 20 ஆண்டுகளாய் நோயுற்ற வாலிபர்: ஆசையாய் காதலித்து மணமுடித்த புதுமைப்பெண்
» லிப்டில் இந்திய வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்த பெண்: துபாயில் கைது
» ஆசையாக மட்டன் பிரியாணி சுவைத்த தாத்தா: உயிர்போன சோகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum