Top posting users this month
No user |
வளம் வழங்கி நலம் சேர்க்கும் விமான வேங்கடேஸ்வரா
Page 1 of 1

வைணவ திவ்ய தேசங்களிலுள்ள ஆலய விமானங்களுக்கென்று தனித் தனியான பெயர்களும் சிறப்புகளும் உண்டு. உதாரணமாக திருவரங்கத்தில் ப்ரணவாக்ருதி விமானம், திருவனந்தபுரத்தில் ஹேமகூட விமானம், அழகர்கோவிலில் ஸோமஸந்த விமானம், திருக்கோஷ்டியூரில் அஷ்டாங்க விமானம் என்று பல்வேறு விதமாக அழைக்கப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் இணையான மிகப் பரவசமூட்டும் விமானத்தை தரிசிக்க நாம் திருமலை திருப்பதிக்குத்தான் செல்ல வேண்டும்.
திருமலை யாத்திரை மேற்கொண்டு, மணிக்கணக்கில் காத்திருந்தாலும் வேங்கடவனைத் தரிசிக்க நின்று சில விநாடிகள் மட்டுமே கிடைத்தாலும், வேங்கடவனைத் தரிசிக்கும் பக்தர்களின் ஆனந்தத்தை அளவிட முடியாது. ஆலயத்திற்கு முன்பாக கோபுரமும், கருவறையிலுள்ள ஸ்ரீநிவாசப் பெருமாளின் தரிசனமும், கருவறைக்கு மேலேயுள்ள விமானமும் நம்மை எப்போதும் பரவசப்படுத்தும். திருமலை விமானத்திற்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. பார்த்தவுடனேயே நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துவதால் இந்த தங்க விமானத்திற்கு ஆனந்த நிலையம் என்றே பெயர்.
திருவேங்கடவனை தரிசிக்கும்போது ஏற்படும் அதே ஆனந்த உணர்வு ஆனந்த நிலைய விமானத்தை தரிசிக்கும்போதும் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விமான வேங்கடேஸ்வரரே ஆகும். இவரைப் பற்றி பல சுவையான வரலாற்றுச் செய்திகள் உள்ளன. திருமலைகோயில் கருவறையைச் சுற்றியுள்ள விமானப் பிரதட்சணம் என்கிற திருச்சுற்றில் வலம் வரும்போது கருவறையின் வடபுறத்தில் ஓரிடத்தில் ஸ்ரீ விமான வேங்கடேஸ்வரர் தரிசனம் என்கிற ஓர் அறிவிப்புப் பலகையைக் காணலாம்.
இந்த இடத்திலிருந்து பக்தர்கள் விமானத்தை தரிசனம் பண்ணும்போது விமானத்தின் தென்மேற்கு மூலையில் நடுத் தளத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளி யிருக்கும் திருவேங்கடவனின் சிறிய விக்கிரகத்தையும் தரிசிக்கின்றனர். ஆகமப்படி அமைந்துள்ள இந்த வேங்கடவனை விமான சீனிவாசர் என்றும், விமான வேங்கடேஸ்வரர் என்றும் குறிப்பிடுகிறார்கள். கருவறையில் இருப்பது போன்றே நின்ற நிலையில் நான்கு கரங்களோடு, பின்னிரு கரங்களில் சங்கு சக்கரம் திகழ, முன் வலக்கையை அபயஹஸ்தமாகவும், இடக்கையை கடிஹஸ்தமாகவும் (இடுப்பில்) கொண்டு அருட்காட்சி அளிப்பதை தரிசிக்க மனம் பரவசமுறுகிறது.
இந்த விமான வேங்கடவனை எளிதாக பக்தர்கள் தரிசிக்கும் வகையில் விக்ரகத்தைச் சுற்றி வெள்ளிப் பிரபாவளி அமைக்கப்பட்டுள்ளது. அழகான சிறிய திருவுருவத்தில் காட்சி தரும் இவர், கருவறையில் உள்ளது போன்றே சாளகிராம மாலையையும் அணிந்துள்ளார். அவருக்கு இடப்புறம் அனுமனும், வலப்புறம் கருடனும் உள்ளனர். திருமலை யாத்திரை செல்லும் அனைத்து பக்தர்களும் இந்த விமான வேங்கடேசரைத் தரிசிக்கத் தவறுவதில்லை. புராணங்களிலேயே இந்த ஆனந்த நிலைய விமானத்தை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
திருமலை தல மகிமை பற்றி விரிவாக கூறும் நூல்களில் இந்த விமானம் தொண்டைமான் சக்ரவர்த்தியால் அமைக்கப்பட்டதாகவும், அவர் இதைத் தரிசித்து ஆனந்தம் அடைந்ததாக கூறப்படுகிறது. விஜய நகர மன்னர்களின் ராஜகுருவாகத் திகழ்ந்த, தலைசிறந்த அனுமன் பக்தரான ஸ்ரீ வியாசராஜர் இந்தியா முழுவதும் 732 அனுமன் ஆலயங்களை அமைத்த பெருமைக்குரியவர். அந்நியர் படையெடுப்பின்போது திருவேங்கடவன் ஆலயம் 12 ஆண்டுகளுக்கு மூடப்பட்டுவிட்டதால், ஸ்ரீவியாசராஜர் திருமலைக்கு வந்து இந்த விமான வேங்கடேசனை நோக்கி அமர்ந்து மானசீகமாக பூஜைகளையும், வழிபாடுகளையும் செய்து, கருவறையில் இருந்த திருவேங்கடவனின் சாந்நித்யம் பூரணமாக பரவுவதை உணர்ந்தார், உணர்த்தினார்.
ஸ்ரீ வியாசராஜர் திருமலைக்கு வந்து இந்த விமான வேங்கடேசரை நோக்கி தியானித்த இடம் ஸ்ரீ வியாசராயர் ஹனிக் மண்டபம் எனப்படுகிறது. இத்தனை அழகு மிகுந்த இந்த ஆனந்த நிலைய விமானம் மஹாபலிபுரத்திலுள்ள பஞ்சபாண்டவ ரதங்களில் ஒன்றான தருமர் ரதம் போன்ற அமைப்பைக் கொண்டது. விமானத்தின் உயரம் கலசத்தையும் சேர்த்து சுமார் 88 அடி ஆகும். ஆனந்த நிலைய விமானம் முதன் முதலில் யாரால் அமைக்கப்பட்டது என்பது பற்றிய முழுமை யான விவரங்கள் தெரியவில்லை. சுதையால் அமைக்கப்பட்டு தங்கத் தகட்டால் கவசமிடப்பட்டுள்ளது.
முதன் முதலில் வீரநரசிங்கத் தேவன் என்ற மன்னன் 1260ல் இதற்குக் கவசமிட்டு தங்க முலாம் பூசியதை அடுத்து, 1262ல் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் தங்கக் கலசம் அமைத்திருக்கிறான். தொடர்ந்து 1261 முதல் 1908ம் ஆண்டு வரை சுமார் 700 ஆண்டுகளில் பல்வேறு கால கட்டங்களில் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் உட்பட பல்வேறு மன்னர்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 1958ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருப்பணியின்போது பழைய சுதை விமானத்தில் சிதிலமடைந்து காணப்பட்ட பகுதிகள் சீர் செய்யப்பட்டு மீண்டும் தங்கக் கவசம் வேயப்பட்டு விமரிசையாகக் குடமுழுக்கும் நடத்தப்பட்டது.
இன்றும் தகதகவென ஜொலித்துக் கொண்டிருக்கிறது. கருவறையில் திருமலை திருவேங்கடவனைத் தரிசித்து விட்டு வலம் வருகின்ற பக்தர்கள் தவறாது ஸ்ரீவிமான வேங்கடேஸ்வர ஸ்வாமியையும் தரிசிக்க வேண்டும். அப்போதுதான் திருமலை தரிசனத்தின் பரிபூரண பலன் கிட்டும் என்ற ஐதீகமும் உள்ளது. இந்த தரிசனம்தான் ஒருசில விநாடிகள் மட்டுமே தரிசித்த வேங்கடவனின் முழுமையான அருளை வழங்கும் என்றும் நம்புகிறார்கள். வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே பெருமாள் ஆலயங்களில் பரமபதவாசல் வழியே வடக்கு நோக்கி எழுந்தருளும் பெருமாளை தரிசிக்க முடியும். ஆனால், திருமலை ஆலயத்தில் எப்போதும் வடக்குநோக்கி அருள்பாலிக்கும் ஸ்ரீ விமான வேங்கடேஸ்வரரை தரிசிக்கும் பாக்கியம் பக்தர்களுக்குக் கிட்டுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum