Top posting users this month
No user |
Similar topics
பெண்கள் தாங்களே தாலி அகற்றும் நிகழ்வை நடத்துகின்றனர்: கி.வீரமணி
Page 1 of 1

பெண்கள் தாங்களே எந்த நிர்ப்பந்தமும் இன்றி தாலி அகற்றும் நிகழ்வை நடத்துகிறார்கள் என்று கி.வீரமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை காவல்துறை ஆணையருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வரும் 14ம் திகதி நடைபெறவிருக்கும் அம்பேத்கரின் 125-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்துவது என்றும் அதில் பெண்ணுரிமை, உண்ணுரிமை, கருத்துரிமைகள் வலியுறுத்தும் நிகழ்ச்சிகளும் பெரியார் திடலில் நடைபெறும் என்றும் முறைப்படி கடிதம் கொடுத்துள்ளோம்.
தாய்மார்களும், முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்களும், தாலிகளை பொறுத்தவரை ஒரு அடிமை சின்னம், அதை அகற்றி கொள்வதாகவும், அதன் மூலம் எங்களது கருத்துரிமையை பாதுகாக்க விழைகிறோம் என்றும் என்னை சந்தித்து கூறிய நிலையில், அம்பேத்கர் விழாவையொட்டி அதில் தாங்களே விருப்பப்பட்டு முன்வரும் பெண்கள் தாலியை அகற்றிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இது “தாலி அறுப்பும்“ அல்ல. (மதச்சடங்கு செய்வோர்தான் பெண்களை விதவையாக்கச் செய்யும் செயல் அது) போராட்டமும் அல்ல.
இந்து மத உணர்வைப் புண்படுத்துவதாக உள்ளது என்று சிலர் பேசுவது, எழுதுவது, புகாரில் கூறுவது ஒன்று அறியாமை அல்லது விஷமத்தனமே.
இந்துக்கள் மனம் புண்படுகிறது என்ற வாதம் பொய்யானது. புரட்டானது, பொருளற்றது.காரணம் இந்து மதத்தில் வேத மதத்தில் இப்படி ஒரு சடங்கே இல்லை. இது போராட்டமும் அல்ல.
அம்பேத்கர் 125-ம் ஆண்டு விழா அன்று பெண்கள் தாங்களே எவ்வித கட்டாயமோ, நிர்ப்பந்தமோ இன்றி தெளிவான, துணிவான உணர்வுடன் முன் வந்து நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளுகின்றனர்.
இது அவர்களது தனி மனித சுதந்திரம். இதைப்பறிக்க, தடுக்க எவருக்கும் சட்டப்படியும், நியாயப்படியும் உரிமை இல்லை. எங்களது வற்புறுத்துதலோ, அல்லது தவறான ஈர்ப்போ கூட கிடையாது.
அறிஞர் அண்ணா ஆட்சியில் தந்தை பெரியார் விருப்பப்படி நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமண செல்லுபடிச்சட்டத்தில் தாலி அணிந்து கொள்ளாத திருமணமும் சட்டப்படி செல்லும் என்று கூறப்பட்டுள்ளதே.
இதுதான் நமது விளக்கம்; எந்தவித ஆர்ப்பாட்டம், அமளி இன்றி, அம்பேத்கர் 125-ம் ஆண்டு விழா பெரியார் திடலில் நடைபெறும்; எங்களால் எந்தச்சட்டம் ஒழுங்கு பிரச்சினையோ, அமைதியின்மையோ ஏற்படாது என்பது உறுதி.
வழக்கம் போல் திராவிடர் கழக தொண்டர்கள் எவ்வளவு உணர்ச்சி வயப்பட்டாலும் கட்டுப்பாடு காத்து நடந்து கொள்ளுவார்கள். கட்டுப்பாடுள்ள ஒரு இயக்கம் இது.
சட்டப்படி நமக்குள்ள உரிமையை எவரும் பறிக்க முயன்றால் அவர்கள் தோல்வியை அடைவர். அதனை உரிய முறையிலும் சந்திப்போம். இது உறுதி என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழகத்தில் நடக்கவுள்ள தாலி அகற்றும் விழா: வலுக்கும் எதிர்ப்பு
» நள்ளிரவில் பெண்கள் மீது காரை ஏற்றிய பொலிசார்: 3 பெண்கள் பலி
» தங்களிற்குத் தாங்களே சாவு மணி அடித்த ஐ.எஸ்.ஐ.எஸ்: ரஸ்யா, அமெரிக்காவுடன் ஐரோப்பா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum