Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வெற்றி தரும் வேங்கட வரதன்!

Go down

தரும் - வெற்றி தரும் வேங்கட வரதன்!              Empty வெற்றி தரும் வேங்கட வரதன்!

Post by oviya Sat Apr 11, 2015 2:35 pm

ஒரே நேரத்தில் திருப்பதி, காஞ்சிபுரம் திவ்யதேசங்களை தரிசித்த பலனைத் தருபவராக வேங்கட வரதராஜப் பெருமாள் விழுப்புரத்திற்கு அருகிலுள்ள பெரும்பாக்கத்தில் வீற்றிருக்கிறார். இவரைத் தரிசித்தவர்களுக்கு எடுத்த செயலில் வெற்றி உண்டாகும்
தல வரலாறு: பெரும்பாக்கத்தில் 800 ஆண்டுகளுக்கு முன் பெருமாள் பக்தர் ஒருவர் இருந்தார். அவரின் கனவில் தோன்றிய பெருமாள் "தொரமானியம்' என்னும் நிலத்தில் பூமிக்கடியில் புதைந்து கிடப்பதாகவும், தோண்டி எடுத்து ஒரு கோயில் கட்டி வழிபடும்படியும் ஆணையிட்டார். ஊர் மக்கள் உதவியுடன் தோண்டிய போது, ஸ்ரீதேவி, பூதேவியரோடு வேங்கட வரதராஜப் பெருமாள் விக்ரஹம் கிடைத்தது. ஆனந்த விமானத்துடன் கோயில் அமைத்து பெருமாளை அதில் பிரதிஷ்டை செய்தனர். 30அடி உயரத்தில் செப்பு கொடிமரத்தையும் அமைத்து வழிபடத் தொடங்கினர்.
இரண்டு திவ்யதேசம்: இங்குள்ள மூலவர் 'வேங்கட வரதராஜர்' எனப்படுகிறார். திருப்பதி ஏழுமலையானைப் போல கடிக ஹஸ்தம் என்னும் வளைந்த இடக்கையும், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளைப் போல அபயம் அளிக்கும் வலக்கையும் கொண்டு காட்சி தருகிறார்.
இதனால், திருப்பதி, காஞ்சிபுரம் ஆகிய இரு திவ்ய தேசங்களையும் ஒரு சேர தரிசித்த புண்ணியம் உண்டாகும். அதோடு அகோபிலம் நரசிம்மரை நினைவூட்டும் விதத்தில் பெருமாளின் மார்பில் சிம்ம பதக்கம் உள்ளது. இத்தலத்திற்கு "தட்சிண அகோபிலம்' என்றும் பெயருண்டு.
பெருந்தேவி தாயார்: தனி சந்நிதியில் பெருந்தேவி தாயார் வீற்றிருக்கிறார். தலவிருட்சமான வில்வமரம் தாயார் சந்நிதியின் வலப்புறத்தில் உள்ளது. பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று பெருமாள், தாயார் சந்நிதிக்கு எழுந்தருளி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடக்கிறது. வெள்ளியன்று பெருந்தேவி தாயாரை வலம் வந்து வழிபடுவோருக்கு விருப்பம் விரைவில் நிறைவேறும்.
கல்யாண ஆஞ்சநேயர்: பிரகாரத்தில் பாரிஜாத மரத்தின் கீழ் கல்யாண ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். கைகளைக் கூப்பி அஞ்சலி ஹஸ்தத்துடன் இருக்கும் இவர் திருமண தோஷம் போக்குபவராக விளங்குகிறார். திருமணத் தடை நீங்க, மஞ்சள் பூசிய உரிக்காத மட்டைத் தேங்காய் வைத்து பெருமாள், தாயாருக்கு அர்ச்சனை செய்து 12 முறை வலம் வந்து வழிபட வேண்டும். பின்னர் அந்த தேங்காயை கல்யாண ஆஞ்சநேயர் சந்நிதியில் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது இங்கு மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கடந்த ஜூலை 7ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பரிவார சந்நிதிகள்: லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், லட்சுமி வராகர், சக்கரத்தாழ்வார், லட்சுமி ஹயவதனப் பெருமாள், பட்டாபிராமர், லட்சுமி நாராயணர், ஆதிசேஷன், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், குமுதவல்லி சமேத திருமங்கையாழ்வார், பாஷ்யக்காரர், சுவாமி தேசிகன், ஆதிவண் சடகோப யதீந்திர மகாதேசிகன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.
இருப்பிடம்: விழுப்புரத்தில் இருந்து 7 கி.மீ.,
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum