Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயம் தரும் செந்தில் ஆண்டவர்

Go down

தரும் - ஜெயம் தரும் செந்தில் ஆண்டவர்      Empty ஜெயம் தரும் செந்தில் ஆண்டவர்

Post by oviya Sat Apr 11, 2015 2:31 pm

* இரண்டாம் படைவீடு: முருகன் தலங்களில் திருச்செந்தூர் இரண்டாம் படைவீடாகத் திகழ்கிறது. மனித உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களின் அடிப்படையில் , அதற்குரிய ஆறு தலங்களை யோகிகள் உருவாக்கி அமைத்தனர். அதில் திருச்செந்தூர் இரண்டாவதாகத் திகழ்கிறது. திருமுருகாற்றுப்படை என்னும் நூலில் நக்கீரர் திருச்சீரலைவாய் என்று இத்தலத்தைக் குறிப்பிடுகிறார். அரசன் படைகளோடு தங்குமிடமே படைவீடு என்பர். அந்த வகையில் முருகன் சூரசம்ஹாரம் நிகழ்த்துவதற்காக படையோடு தங்கிய தலம் இது.
"ஜெயம்' என்பதற்கு வெற்றி என்பது பொருள். போர் நிகழ்த்திய முருகன் இங்கு வெற்றி பெற்றதால் திருச்செந்தூருக்கு"ஜெயந்திபுரம்' என்று பெயர் இருந்தது. இத்தலத்தின் சிறப்பைக் கூறும் "ஜெயந்திபுர மகாத்மியம்' என்று ஒரு நூல் உள்ளது. செந்திலாண்டவர் முருகனைத் தரிசித்தவர்கள் வாழ்வில் வெற்றிவாகை சூடி மகிழ்வர் என்பது ஐதீகம்.

* சந்தனக் காட்டுக்குள்ளே....: திருச்செந்தூர் வட்டாரப் பகுதியில் வழங்கப்படும் நாடோடிப்பாடலில் ""சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்' என்னும் வரி இடம் பெற்றுள்ளது. முருகன் வீற்றிருக்கும் இப்பகுதிக்கு சந்தன மலை என்றும் பெயர் இருக்கிறது. 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் திருப்புகழில், "சந்தனப் பைம்பொழில் தண் செந்தில்' என்று சந்தன சோலையாக திருச்செந்தூர் இருந்ததைக் குறிப்பிடுகிறார். தற்போது சந்தனமரம் எதுவும் இல்லை. இங்கு வழங்கப்படும் பிரசாதத்தில் திருநீறு அளவுக்கு சந்தனத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு.

* பெருமைக்குரிய "எருமை': ஒரு சமயம் திருச்செந்தூர் கோயிலில் உள்ள கொடிமரம் முறிந்து சாய்ந்தது. பக்தர்கள் வருந்திக் கொண்டிருந்த நேரத்தில், எருமை ஒன்று கடலுக்குள் நீந்திச் சென்று ஒரு சந்தன மரத்தடியைத் தள்ளிக் கொண்டு வந்தது. அதை வியப்புடன் பார்த்த பக்தர்கள், அந்த தடியிலேயே புதிய கொடிமரம் செய்து பிரதிஷ்டை செய்தனர். இந்த மரத்தடியை அனுப்பியதும் முருகனின் திருவிளையாடல் தான். இந்த வரலாறு பகழிக்கூத்தர் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் இடம் பெற்றுள்ளது.

* தெய்வானை கல்யாணம்: திருச்செந்தூர் கடற்கரையில் கந்தசஷ்டியன்று மாலையில் சூரசம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். முதலில் யானைமுகன், சிங்க முகன் ஆகிய இரு அசுரர்களையும் வேலினால் முருகன் வீழ்த்துவது போல் பாவனை செய்வர். பிறகு, மாமரமாக மாறும் சூரபத்மனை இரு கூறாகப் பிளந்து மயிலும், சேவலுமாக ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நடக்கும். சூரனை வென்ற வெற்றிக் களிப்பில் முருகன் கடற்கரையிலுள்ள சந்தோஷ மண்டபம் என்னும் மேடைக்கு எழுந்தருளியதும் சிறப்பு பூஜை நடக்கும். சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் காலையில், இங்குள்ள தெப்பக்குள மண்படத்திற்கு தெய்வானை எழுந்தருளுவாள். இந்த நிகழ்ச்சியை "அம்மன் தவம்' என்பர். அன்று மாலையில் குமரவிடங்கப் பெருமானுக்கும் (முருகன்), தெய்வானைக்கும் திருக்கல்யாணம் (மாலை மாற்றும் நிகழ்ச்சி) நடக்கும்.

* எல்லை தாண்டாத பக்தர்கள்: திருச்செந்தூருக்கு வந்து கந்தசஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள், விரதத்தின் போது கோயில் எல்லையைத் தாண்டக் கூடாது என்பது ஐதீகம். கிழக்கில் கடற்கரை, மேற்கில் தூண்டு கை விநாயகர் சந்நிதி, வடக்கில் வள்ளியம்மன் குகை, தெற்கில் நாழிக்கிணறு ஆகிய நான்கு எல்லைகளை ஆறுநாட்களில் கடந்து செல்லக்கூடாது என்பர். உண்ணா நோன்பு, பேசா நோன்பு, பழச்சாறு மட்டும் அருந்துதல், பகலில் ஒருவேளை உண்பது, துளசியோடு தீர்த்தம் பருகுதல் என பலவித நடைமுறைகளை விரத காலத்தில் பக்தர்கள் மேற்கொள்கின்றனர். இதில் ஒருவேளை உண்ணும் வழக்கமே பெரிதும் கடைபிடிக்கப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum