Top posting users this month
No user |
ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி எனக்கு தொல்லை தந்தார்: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வாக்குமூலத்தால் வழக்கில் திடீர் திருப்பம்
Page 1 of 1

பெங்களூரில் தற்கொலை செய்துகொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரில் வணிக வரித்துறை கூடுதல் ஆணையராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி தனது வீட்டில், கடந்த 16ம் திகதி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தற்கொலை அல்ல கொலை என்று பலத்த குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது.
தற்போது சி.ஐ.டி. பொலிசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரித்து வரும் சி.ஐ.டி. பொலிசார், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ரவியும், அவருடன் ஒன்றாக படித்த மற்றொரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
அதிலும், குறிப்பாக தற்கொலை செய்து கொண்ட நாளில் மட்டும் ரவி அந்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு 44 முறை கைப்பேசியில் அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து ரவியின் தொலைபேசி தொடர்புகளை பொலிசார் ஆய்வு செய்ததில் பல முறை இருவரும் கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளது தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் கூட ஒருவருக்கொருவர் 8 முறை கைபேசியில் பேசியுள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கில் புலனாய்வு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்ட துணை காவல் ஆணையர் ரோகினி செபாட் கடோச்சை அழைத்து பேசிய அந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி, தங்கள் இருவருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், திருமண உறவை முறித்துக்கொள்ளுமாறு ரவி தன்னை தொந்தரவு செய்தார் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி, ரவியால் தான் வேட்டையாடப்பட்டதாகவும், தொடர்ந்து தன்னை வேட்டையாட முயன்ற ரவிக்கு தான் உடன்படவில்லை என்றும் கூறியுள்ளது இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வாக்குமூலம் குறித்து, சி.ஐ.டி. பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum