Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பயந்தவனுக்கு பகலும் பகையே! துணிந்தவனுக்கு கடலும் சிறிதே!

Go down

பயந்தவனுக்கு பகலும் பகையே! துணிந்தவனுக்கு கடலும் சிறிதே! Empty பயந்தவனுக்கு பகலும் பகையே! துணிந்தவனுக்கு கடலும் சிறிதே!

Post by abirami Sat Mar 21, 2015 9:03 pm

பயந்தவனுக்கு பகலும் பகையே! துணிந்தவனுக்கு கடலும் சிறிதே! Large_162806797


* நல்ல செயல்களைத் தொடங்குவதில் தாமதமோ, அச்சமோ சிறிதும் வேண்டாம். ஆனந்தத்தின் மறுபெயர் தான் நற்செயல்.
* நல்லவர்கள் இருக்குமிடம் நாடோ, காடோ, மேடோ, பள்ளமோ எதுவானாலும் இருக்கட்டும். அதுவே சிறந்த இடம். அங்கு வாழ்வதே நன்மையளிக்கும்.
* எவ்வித பயமும் கூச்சமும் இன்றி உலகத்தை எதிர்கொள்ளுங்கள். அச்சம் ஒரு அசவுகர்யம். பயந்தவனுக்கு பகலும் பகையாகும்.
துணிந்தவனுக்கு கடலும் சிறிதாகும்.
* அமைதியைக் காட்டிலும் மேலான ஆனந்தம் உலகில் கிடையாது. எப்போதும் அமைதியான சூழலில் இருக்க முயலுங்கள்.
* தனக்குத் தானே தலைவனாகவும், தனக்குத் தானே அடைக்கலமாகவும் மனிதன் இருக்க வேண்டும். உதவியை வேறொருவரிடம்
எதிர்பார்த்து நிற்க வேண்டாம்.
* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருமனிதன் அறிஞனாகி விட மாட்டான். எதையும் அறிவுக்கண் கொண்டு பார்ப்பது அவசியம்.
* இருட்டில் இருந்து ஒளிமயமான பாதைக்குச் செல்பவனே அறிவாளி. அவர்களை சுகமோ, துக்கமோ சிறிதும் பாதிப்பதில்லை.
* அறியாமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிஞனாக ஒருநாள் வாழ்வது மேலானது.
* நெல் விளையும் வயலில் களை கேடு செய்வது போல, தீயஎண்ணம் மனிதனுக்கு கேடு விளைவிக்கிறது. மனதில் நல்ல எண்ணத்தை மட்டுமே விதையுங்கள்.
* உயிருள்ள வரையில் ஒழுக்கத்தை உயிராக மதித்துப் போற்றுங்கள்.
* உங்களுக்கு நீங்களே உதவி செய்ய காத்திருங்கள். மற்றவர்களின் உதவியை ஒருபோதும் எதிர்பார்க்க வேண்டாம்.
* தீய எண்ணத்துடன் செயல்படும் போது வண்டியை இழுக்கும் மாட்டின் காலைச் சக்கரம் பின்தொடர்வது போல துன்பம் தொடர்ந்து விடும்.
* பிறரிடம் எளிதாக குறை கண்டுபிடித்து விடலாம். ஆனால், தன் குற்றத்தைத் தானே அறிவது தான் சிரமமானது.
* ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தால் இரண்டில் ஒன்றைச் செய்யுங்கள். தூய்மையான நல்ல விஷயங்களைப் பேசுங்கள் அல்லது மவுனமாக இருந்து விடுங்கள்.
* பிறப்பினால் யாரும் இழிந்தவர்கள் அல்ல. அவரவர் நடத்தையே உயர்வையும், தாழ்வையும் உண்டாக்குகிறது.
* பல்லைக் காட்டி சப்தமிட்டுச் சிரிப்பது சிறுபிள்ளைத்தனம். தேவைப்பட்டால் இதழில் புன்னகையை மட்டும் வெளிப்படுத்துங்கள்.
* யாரும் யாரையும் தூய்மைப்படுத்த முடியாது. சுத்தம், அசுத்தம் இரண்டும் அவரவர் எண்ணம், செயல்களைப் பொறுத்த விஷயங்கள்.
* நற்செயல் புரிய சிறிதும் தாமதிப்பது கூடாது. ஏனென்றால் அந்த நேரத்திற்குள் மனம் மாறி விட நேரிடலாம்.
* உலகில் எதுவும் நிலையானது அல்ல. இதைச் சிந்திப்பதன் மூலம் "நான்' என்னும் ஆணவம் மறைந்து போகும்.
* வெளிப்புறத்தைக் கழுவுவதில் கவனம் செலுத்தியது போதும். மனமாகிய உள்புறத்தைக் கழுவுவதே அவசியமானது.
* வெறுப்புணர்வை விடக் கொடிய வியாதி வேறில்லை. யாரையும் உன்னோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். இருப்பதில் திருப்தி கொண்டு வாழ்.
* செய்த நன்றியை ஒருபோதும் மறக்க கூடாது. கனிவான பார்வையும், பணிவான செயல்பாடும் மேன்மைக்கு வழிவகுக்கும்.
* ஒருமுறை செய்த தீமையை மீண்டும் ஒருமுறை செய்திருக்கும் மனவலிமையை வளர்த்துக் கொள்வது அவசியம்.
* பொய்யை உண்மையாலும், தீமையை நன்மையாலும், கோபத்தை அமைதியாலும் வெல்லப் பழகுங்கள்.

உற்சாகப்படுத்துகிறார் புத்தர்

abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum