Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அறிவோம் அவனை! அவன் அன்பே நாம் பெறும் கருணை!

Go down

அறிவோம் அவனை! அவன் அன்பே நாம் பெறும் கருணை! Empty அறிவோம் அவனை! அவன் அன்பே நாம் பெறும் கருணை!

Post by abirami Sat Mar 21, 2015 9:02 pm

அறிவோம் அவனை! அவன் அன்பே நாம் பெறும் கருணை! Large_120711684* கடவுள் ஒருவரே. அருள் வடிவான அவரே அருட்பெருஞ்ஜோதியாகவும், தனிப்பெருங்கருணை கொண்டவராகவும் விளங்குகிறார்.
* பசியால் வாடும் உயிர்களுக்கு உணவிடுவதும், துன்பப்படுவோருக்கு உதவி செய்வதுமே உண்மையான இறைவழிபாடு.
* தனிமனித ஒழுக்கமே நம்மை தெய்வநிலைக்கு உயர்த்தும். உலகிலுள்ள எல்லா உயிர்களும் நம் உடன்பிறப்புகளே.
* கீழ்த்தரமான எண்ணங்களை விட்டு விடுங்கள். இறைவன் மீது தளராத நம்பிக்கை கொள்ளுங்கள்.
* தினமும் அதிகாலையில் எழுந்து, திருநீறு அணிந்து கடவுளை தியானம் செய்தல் அவசியம்.
* பசியெடுத்த நேரம் ஆகாரம் உண்ணுவது அவசியம். ஆனால், அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ உண்பது கூடாது.
* மாலை நேரத்தில் வெயில் மேனியில் படும் விதத்தில் சிறிது நேரம் உலாவுதல் வேண்டும். இரவில் படுக்கும் போது இடப் பக்கமாக படுப்பதே நல்லது.
* காரணமில்லாமல் பயம் கொள்ளக்கூடாது. எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருப்பது அவசியம்.
* எந்தப் பணியில் ஈடுபட்டாலும் கடவுள் சிந்தனையோடு இருப்பது மிகவும் அவசியம்.
* வெளியே வெளிச்சம், உள்ளே இருட்டு என்று உடலில் தூய்மையும், உள்ளத்தில் அழுக்கும் கொண்டிருப்பது கூடாது.
* கருணை உங்கள் உள்ளத்தில் ஊற்றாய் பொங்கி உடம்பெங்கும் வழிந்தோடட்டும்.
* தன்னைப் போல பிறரையும் நேசிக்கும் உள்ளமே உயர்ந்த உள்ளம்.
* உயிரையும், உடலையும் கூட மறக்கலாம். ஆனால், இந்த உலகைப் படைத்த கடவுளை ஒருபோதும் மறப்பது கூடாது.
* கண்ணால் காண முடியாத கடவுளை அன்புணர்வால் மட்டுமே அறிய முடியும். அன்பிருக்கும் இடமே அவனது இருப்பிடம். அவனது கருணையைப் பெறுவதே நமது நோக்கம்.
* லட்சியத்தை அடைய எத்தனை படிகள் என்று மலைக்க வேண்டாம். எல்லாப்படிகளையும் முயன்றால் கடந்து விடலாம்.
* உண்மையை நன்கு உணர்ந்தவனுக்கு, உண்மையற்றது எது என்பதை எளிதாகப் புரிந்து விடும்.
* பெரிதிலும் பெரிதாக கடல் போலவும், சிறிதிலும் சிறிதாக கடுகு போலவும் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்.
* எங்கே ஆணவம் அறவே இல்லையோ, அங்கு அருள் ஒளி வீசத் தொடங்குகிறது.
* இரட்டைவேடமிடும் கபடதாரிகளிடம் நெருங்காதீர்கள். உண்மை மனம் கொண்ட நல்ல உத்தமர்களோடு உறவாடுங்கள்.
* ஆட்டுவிப்பவன் நம்மை ஆட்டுவிக்க, நம்மால் ஆவது ஏதுமில்லை. அவன் கையில் நாம் ஒரு கருவி என்பதை உணருங்கள்.
* நீங்கள் எதைச் செய்தாலும் அது பிறருக்கு இடையூறு செய்வதாக இருப்பது கூடாது. எண்ணம், சொல், செயல் மூன்றாலும் நல்லதை மட்டும் செய்யுங்கள்.
* அறிவுக்கண்ணைத் திறந்து பாருங்கள். உண்மையைக் கண்டறிய இது ஒன்றே வழி.
* இயற்கையோடு இணைந்து வாழ்வு நடத்துங்கள். குளிர்ந்த நீரில் நீராடியும், நறுமலர்களின் மணத்தை நுகர்ந்தும் மகிழுங்கள்.
* எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள். மகிழ்ச்சியே உங்கள் உயிரைக் காப்பாற்றும் அமுதம்.

கடவுளை சொல்கிறார் வள்ளலார்


abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum