Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கொட்டாவி - கொட்டாவி -பலவிதம்

Go down

கொட்டாவி - கொட்டாவி -பலவிதம்  Empty கொட்டாவி - கொட்டாவி -பலவிதம்

Post by ram1994 Fri Mar 20, 2015 4:32 pm

புதிதாக மந்திரம் கூற ஆரம்பிக்கும்போது ஒரு அசதி ஆரம்பத்தில் இருக்கும். பிறகு அது பழகிவிடும். ஆரம்பக் கட்டத்தில் புதிதாக விரதம் இருப்போர்க்கு பசியால் கொட்டாவி வரும். அது போக போக பழகிவிடும்.

இவைகளையெல்லாம் கடந்து ஒரு விஷயத்தை நாம் ஆராய வேண்டும். அது என்னவெனில் ஒரு ஆலயம் செல்லும் போதும், அருள்வாக்கு கேட்க சென்ற இடத்திலும், பம்பை உடுக்கை சத்தம் கேட்கும் போதும், உணர்ச்சி பூர்வமாக மந்திரம் கூறும்போதும் இடைஇடையே அடிக்கடி கொட்டாவி வரும். அது எதனால் என்றால் புதிதாக வெளியில் உள்ள சக்தி நம்மோடு தொடர்பு கொள்ள முயலும்போது அந்த உணர்வு உண்டாகும். அதை அடக்க முயற்சி செய்தாலும் மிக சிரமமாக இருக்கும். இறை சக்தி வேண்டுவோர் அதை அடக்கவும் கூடாது. அந்த கொட்டாவியை நன்கு வெளியிட வேண்டும்.

கொட்டாவி மேல் சிந்தனையை மாற்றாமல் ஆரம்பத்தில் இருந்து எதை கவனித்துக் கொண்டிருந்தீர்களோ அதையே தான் செய்திருக்க வேண்டும். அக்கம்பக்கம் உள்ளவர்கள் கொட்டாவி விடுவதை பார்த்து அசிங்கமாக நினைப்பார்களோ என கூச்சப்படக்கூடாது. முழுவதுமாய் அனுபவிக்க வேண்டும். இது மந்திர தேவதை கொட்டாவி அல்லது ஆத்ம தேவதை கொட்டாவியாக இருக்கலாம். இவை தொடர்ந்தால் சிலருக்கு மருள் வரும். (சாமி ஆடுதல்) போக போக இறை அருள் நம்முள் அமர்ந்து ஆட்சி செய்ய எத்தணிக்கும். இந்த அனுபவம் எல்லோருக்கும் கிடைக்கும் என சொல்ல முடியாது. ஆனால் பலரும் விரதம் இருந்து தெய்வத்தின்மீது பக்தி கொண்டு செல்பவர்களுக்கு இந்த அருள் உண்டாகும்.

ஒருவேளை இந்த கொட்டாவி தொடர்ந்து வருவதை விரும்பவில்லை எனில் கால் கட்டைவிரலை பூமியில் நன்கு அழுத்தினால் கொட்டாவி விலகும். சிந்தனையை வேறொரு இடத்திற்கு மாற்றினாலும் கொட்டாவி விலகும். அடுத்து எலுமிச்சை பழத்தை கடித்தாலும் கொட்டாவி விலகும். மருள் வந்து ஆடுவோர்கூட அமைதியாகிவிடுவர்.

இது ஒருபுறம் இருந்தாலும் எச்சரிக்கை ஒன்றும் உள்ளது. உடற்கட்டு மந்திர சித்தி செய்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு இதுபோன்ற இன்னொரு சக்தியின் ஆட்சி நம்மிடம் தொடரும்போது ஒரு பிரச்சனை உள்ளது. என்னவெனில் நம்மிடம் வரக்கூடிய சக்தி நமக்கு உதவி செய்யக்கூடியதாகத்தான் இருக்கும் என சொல்ல முடியாது. தீய சக்திகளான அசுப ஆத்மாவின் ஆவியாகவும் இருக்கலாம். இதுபோன்ற தீய சக்திகளுக்கும் நல்ல சக்திகளுக்கும் ஆரம்ப கட்டத்தில் வித்தியாசம் காண முடியாது. போக போகத்தான் அதன் செயல்பாடுகள் நமக்கு நன்மை தருவதையும் பாதிப்பு தருவதையும் உணர முடியும்.

சாதாரண மனிதருக்கு இதுபோன்ற கொட்டாவியில் தொடங்கி மருள் ஆடி குடும்பமே அழிந்துபோன பல குடும்பங்களை அழிந்துள்ளது (அவர்களுக்கு தெரியாமல் ) . எனவே உடற்கட்டு மந்திரத்தை எப்பொழுதும் ஆரம்ப முதலே முக்கியத்துவம் கொடுத்து சித்தி செய்து உச்சரித்துவிட்டு பின்பு எந்தவித கொட்டாவியும் நல்லதாகவே அமையும். ஆன்மிகர்களுக்கு ஆரம்ப பயிற்சியை சிறப்பாக பழக்கப்படுத்திவிட்டாலே பிறகு தூக்க கொட்டாவி, பசி கொட்டாவி வராது. வேறு சக்தியின் தொடர்பால் வரும் கொட்டாவியே வரும். அது உடற்கட்டு உள்ளவரை ஒன்றும் செய்யாது. எனக்கு தெரிந்து என் ஊரில் சித்தர் ஒருவர் ,இருப்பார் சும்மா இருக்கும்,தலையை கீழே போட்டு தூங்குவார்.நான் முதலில் இதை தப்பாக நினைத்தேன்.
அவரிடம் கேட்கும்போது " என் மீது சித்து வந்து அமர்கிறது என்று கூறுவார் "முதலில் புரியவில்லை ,அது பின்புதான் ஆன்மீகத்தில் வாசியோகம் பயின்று பல நிலைகளை அடைந்தவர்களுக்கு (மிக பெரிய ஞானிகளுக்கு ).அவர்கள் மீது நமக்கு வியர்வை வருவது போல் அவர்களுக்கு ,அவர்கள் பயின்ற ஆன்மீக சாதனை யால் அவர்களுக்கு சித்து வந்து இறங்கும் என்று அறிந்தேன்.
கொட்டாவி - கொட்டாவி -பலவிதம்  12955644-Yawning-and-stretching-emoticon-Stock-Vector-smiley-face-cartoon

நன்றி திரு "R.K.மோகனவேல் "அவர்களுக்கு


ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum