Top posting users this month
No user |
ஒரு ப்ராய்டியன் பார்வையில் தமிழ் நாட்டுப்புற வழக்காறுகள்
Page 1 of 1

விலைரூ.230
ஆசிரியர் : தி.கு.ரவிச்சந்திரன்
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்
பகுதி: கட்டுரைகள்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம்: 368
"நாட்டுப்புற வழக்காறுகள், ப்ராய்டிய உளப்பகுப்பாய்வு என்னும் தலைப்பில், முனைவர் பட்டத்திற்காக ஆசிரியர் ஆய்வு செய்து எழுதிய கட்டுரைகள், மேலும், சிறிது விரிவுபடுத்தி, இந்த நூலாக அமைத்துள்ளார்.நாட்டுப்புற வழக்காறுகளை எப்படி அணுக வேண்டும் என்பதை சிக்மண்ட் ப்ராய்ட் தெரிவித்துள்ள முறைகளின்படி ஆராய்ந்து, பதின் மூன்று தலைப்புகளில் பதிவு செய்துள்ளார்.
நாட்டுப்புறவியல், ஏற்றப்பாட்டு, கதைப்பாடல்கள்,பழமொழிகள், விடுகதைகள், பெண்கள் போடும் வாசற் கோலங்கள், தாயம், பல்லாங்குழி விளையாட்டுகள், மாடு விரட்டு, சேவல் சண்டை போன்ற போட்டிகள், செய்வினை, பேய் ஓட்டுதல், கனவுகள், கூத்தாண்டவர் வழிபாட்டில் திருநங்கை ஆளுமை பலியிடுதல் என, எண்ணற்ற விஷயங்கள் மிக விரிவாக, ஆழமாக அலசப்படுகின்றன.
"மனித இன வளர்ச்சியில், நாட்டுப்புறம் என்பது ஒரு கட்டம். பழங்குடி நிலைக்கும், நாகரிக வளர்ச்சி நிலைக்கும் இடைப்பட்டது நாட்டுப்புறநிலை. இதன் தாக்கம் மானுட வாழ்வில் ஆழமானது, உளப்பூர்வமானது. அதனால் தான், மெத்தப் படித்த அறிவியலர், மருத்துவர் போன்றோரும் கூட, குல வழக்கங்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பர்
என்பதோடு, புறத்தாக்கம் இன்றி எவரும் இல்லை. சுயம்பு என்று யாரையும் குறிப்பிட முடியாது. தாக்கம் இல்லாமல் சிந்தனை வளர்ச்சி இல்லை என்ற நூலாசிரியர், மானுடச் சிந்தனையை மேம்படுத்தும் ஓர் அரிய நூலை அளித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum