Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


19வது அரசியலமைப்பு திருத்தம்: அவசரமாக சமர்ப்பிக்கப்படுவதற்கு ஸ்ரீ.சு.க எதிர்ப்பு

Go down

ஸ்ரீ - 19வது அரசியலமைப்பு திருத்தம்: அவசரமாக சமர்ப்பிக்கப்படுவதற்கு ஸ்ரீ.சு.க எதிர்ப்பு  Empty 19வது அரசியலமைப்பு திருத்தம்: அவசரமாக சமர்ப்பிக்கப்படுவதற்கு ஸ்ரீ.சு.க எதிர்ப்பு

Post by oviya Wed Mar 11, 2015 1:18 pm

19வது அரசியலமைப்பு திருத்தம் அவசர சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பு திருத்தம் அவசர சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் தமது கட்சி அதற்கு எதிராக கடுமையான தீர்வை எடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

19வது அரசியலமைப்பை ஸ்ரீ.சு.க ஆதரிக்கும்: சுசில்

19வது அரசலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கும் என கட்சியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல் மற்றும் புதிய தேர்தல் முறைமை உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டால் மாத்திரமே குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கப்படும் என சுசில் பிரேமஜயந்த நிபந்தனையொன்றையும் முன்வைத்துள்ளார்.

- See more at: http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu2H.html#sthash.YY7btsMT.dpuf
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum