Top posting users this month
No user |
1,195 கறுப்பு இந்திய முதலைகளின் பெயர் அம்பலம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
Page 1 of 1

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள 1,195 இந்தியர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
சுவிஸ் நாட்டில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்பு பணம் போட்டு வைத்துள்ள 628 இந்தியர்களின் பட்டியல், கடந்த 2011–ம் ஆண்டு, பிரான்சு நாட்டு அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு கிடைத்தது.
அந்த பட்டியலில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுவிஸ் நாட்டின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்பு பணம் போட்டு வைத்துள்ள மேலும் 1,195 இந்தியர்களின் பெயர் பட்டியல் நேற்று ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளியானது.
அந்த பட்டியலில், கடந்த 2006–2007–ம் நிதி ஆண்டில் அவர்களது வங்கி கணக்கில் இருந்த பண விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,195 இந்தியர்களும் வைத்திருந்த மொத்த பணம் ரூ.25 ஆயிரத்து 420 கோடி ஆகும்.
இந்த பட்டியலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி பிரனீத் கவுர், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்னு தாண்டன், மறைந்த முன்னாள் மத்திய மந்திரியும், சோனியா காந்தி குடும்பத்தின் விசுவாசியுமான வசந்த் சாத்தேவின் குடும்பத்தினர்.
முன்னாள் சிவசேனா தலைவரும், தற்போது காங்கிரசில் இருப்பவருமான நாராயண் ரானேவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் மருமகள் சுமிதா தாக்கரே ஆகிய அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
தொழில் அதிபர்களில், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த நரேஷ் கோயல், எமார் எம்.ஜி.எப். குழுமத்தைச் சேர்ந்த ஷ்ரவன் குப்தா, பிர்லா குழும கிளை, ஷா வாலஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சாப்ரியா குடும்பத்தினர், டாபரின் பர்மன் குடும்பத்தினர், எஸ்கார்ட்ஸ் குழுமத்தின் நந்தா குடும்பத்தினர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியதாவது, இந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான பெயர்கள், ஏற்கனவே வெளியானதுதான். இருப்பினும், சில புதிய பெயர்களும் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தும்.
பட்டியலில் உள்ள எல்லோருமே சட்டவிரோதமானவர்களாக இருக்க மாட்டார்கள். ஏனென்றால், சிலர் தங்களது வெளிநாட்டு வர்த்தக பரிவர்த்தனை குறித்து வருமான வரித்துறைக்கு தெரிவித்துள்ளனர். வேறு சிலர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆவர்.
இருப்பினும் ஆதாரம் இல்லாவிட்டால், வெறும் பெயர்கள் வேலைக்கு ஆகாது. ஆதாரமும் இருந்தால்தான், வலுவான வழக்காக பதிவு செய்ய முடியும்.
ஏற்கனவே பெறப்பட்ட 628 பெயர்கள் கொண்ட பட்டியலில், 60 பேருக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. மீதியுள்ளவர்களின் பெயர் மற்றும் முகவரியை சரிபார்ப்பது கடினமாக உள்ளது.
ஆயினும், அப்பணி, மார்ச் 31ம் திகதிக்குள் முடிவடையும் என்றும் சட்டத்தை மீறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum