Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நம் மனம் எனும் ஆத்மயட்சனி

Go down

நம் மனம் எனும் ஆத்மயட்சனி  Empty நம் மனம் எனும் ஆத்மயட்சனி

Post by ram1994 Tue Feb 10, 2015 2:44 am

1, திடீர் ஷாக் அல்லது அதிர்ச்சியான சம்பவம் அல்லது விபத்து. அல்லது திடீர் பயம் இந்த சூழலில் இளகிய மனம் அல்லது வெகுளிகளுக்கு சுயநினைவை இழப்பர் அல்லது பைத்தியமாவர், இதே போன்ற அதிர்ச்சி தரும் சம்பவம் மீண்டும் நடக்கும்போது சுய நினைவுக்கு திரும்புவர், இது எவ்வாறு நிகழ்கிறது என்றால் தன்னை அறியாமல் ஏற்படும் திடீர் தூண்டுதலாகும், இதே போல்தான் அபூர்வ சம்பவமாக முற்பிறவி நடந்த சம்பவம் நினைவுக்கு வருவதும் மறந்து போவதும் நிகழும், இதே அடிப்படையில் தான் ஒருவருக்கு இயல்பாகவே ஞானம் வந்து சேர்கிறது , முயற்சி செய்கின்ற போதும் ஞானம் சொல்லி வைத்து வராது திடீர் என்றுதான் வரும் .

2, ஞான வழியை கடைபிடித்துக் கொண்டே இருக்க வேண்டும், அது திடீர் என ஒரு நாள் ஞான கதவு திறந்து வரும் .

3, நீங்கள் எதிர்பார்த்து நாள் குறித்து வருவது ஞானமல்ல, இந்த நிமிடமே கூட அது நடக்கலாம், எனினும் அதை எதிர்பார்ப்பது ஞான சிதறலை உண்டாக்கிவிடும், மன ஏக்கத்தை கெடுத்துவிடும், ஆசை என்னும் நிரந்தரமில்லா பதிவு கொண்ட சிறுமூளை பெருமளவில் இயங்கி நிரந்தர பதிவு கொண்ட வலது மூளை இயங்காமல் போய்விடும், எனவே இறுதியில் உங்கள் தேடல் தேவை பூர்த்தி அடையாமல் போய்விடும், எனவே ஞானவழி கடந்து கொண்டிருக்கும் போது மனம் அதன் வெற்றியை சிந்திக்காதிருப்பது நல்லது .

4, ஞானத்தை எந்த சக்தி மிக்க குருவும் கையில் பிடித்து கொடுக்க முடியாது, அதன் அடிப்படை அறிவையோ. முழு வழியையோ மட்டுமே போதித்தும். பயிற்சியில் விளக்கியும் காட்ட முடியும், அவ்வளவே. குருவின் மேல் உள்ள நம்பிக்கை ஈர்ப்பு ஞானத்தின் வாயில் வரை செல்ல உதவும் அவ்வளவே, வழியை மட்டுமே எவரும் உணர்த்த முடியும், ஆனால் ஞான வெற்றியை தானேதான் பெற வேண்டும், குரு கொடுப்பார் என எதிர்பார்ப்பது ஞானவாயிலை தானே அடைத்ததற்கு சமமாகும் .

5, மனிதனை செயல்படுத்துவது ஆத்ம சக்கரம்தான் அந்த ஆத்மாவிற்கு என்ன வேலை கொடுக்கிறீர்களோ அதை உற்பத்தி செய்யும், கொடுப்பதும் செயல் செய்வதும் இரண்டுமே ஆத்ம சக்ரம்தான், மேல்ஆத்மா கொடுக்கும் சூழ்நிலைஅடி ஆத்மா செயலாக்கும், நடந்து முடிந்த கசப்பான
சம்பவத்தையோ. சோகமாகவோ. சந்தோஷமோ. சிரிப்போ. வெறுப்போ. பக்தியோ. தர்மமோ. செல்வமோ. காதலோ. நல்எண்ணமோ இப்படி பல காரணிகளில் எதை மனதிற்கு கொடுத்தாலும் அதை பெருகச் செய்யும், பலதையும் கொடுத்தாலும் ஒரு சேர பெருகச் செய்யும், ஆத்ம சக்கரம் சுழல நீங்கள் கொடுக்கும் எண்ணம் காற்றை போன்றது, உங்களுக்கு எது தேவையோ அதை நீங்களே முடிவு செய்து ஆத்ம சக்கரத்திற்கு கொடுங்கள் .

6, தாமரை ஞானத்தின் +அறிவின்+ ஒழுக்கத்தின் + வளர்ச்சியை கொடுக்கும், தாமரை மொட்டு இதழ் ஒவ்வொன்றாய் பிரிந்து மலர்ந்தால் தான் அதன் மையத்தை காணமுடியும், நம் மனமும் அவ்வாறே, மலருக்கு சிதைவை கொடுத்து மையத்தை காணக்கூடாது, அதேபோல் மனதையும். சிதைவு படுத்தி வெற்றியை காணகூடாது, தன்னால் நிகழ வேண்டும், அதுவரை பொறுக்க வேண்டும் .

7, ஆன்மிகத்தில் தற்காலத்தில் பொறுமையில்லாமல் போனதன் காரணம், உள்நோக்கம் சரியில்லாததே, சம்பாத்யமும். தற்பெருமையும். உடனே வெற்றிபெற ஆதங்கமும். அடக்க முடியா ஆவலும். கற்பனையும் விரக்தியால் நுழைந்ததும். அதிக உணர்ச்சி வசத்தால் நுழைந்ததும் காரணமாகும், காலத்தின் மேல் பழிபோடுகிறார்கள், இதுவும் தவறே, எல்லா தோல்விக்கும் அவரவரே பொறுப்பேற்க வேண்டும் .

8, தர்மத்தை பரிபூரணமாய் உணர வேண்டும், இது ஆன்மிகத்தின் நுழைவுவாயில் போன்றது, தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பதைவிட நாமே தர்மமாய் மாறவேண்டும், இதற்கான பயிற்சசியை வெளியில் தேடி பலன் இருக்காது, நம் ஆத்மா தான் அதற்கு குரு .

9,மூலமாய் தேர்ந்தெடுத்த ஒரு சக்தியை  வணங்கும் முன் அதன் உபசக்திகளை கண்டறிந்து. சுற்று சக்திகளை கண்டறிந்து. மூல சக்தியின் விருப்பங்களை கண்டறிந்து சுற்றமும் புறமும் கண்டுணர்ந்து அதை மரியாதை கொண்டு இறுதியால் தான் மூலசக்தியை பெற முயற்சிக்க வேண்டும், யந்திரத்தின் சுற்று பிரகாரமும். ஆலயத்தின் சுற்று பிரகாரமும் இதை உணர்த்தும், ஆனால் இன்று மக்களின் தோல்விக்கு இந்த புரிதல் இல்லாமல் போனதே காரணம், எடுத்ததும் மூல சக்தியை அடைய முயற்சிக்கின்றனர், தன் தகுதியை உயர்த்திக் கொள்ளதான் பிரகார தெய்வங்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், சில பயிற்சிகள் அடிப்படையில் தேவைப்படுவதும் தன்னை உயர்த்திக் கொள்ளாத்தான் என்பதை அறியவும், உயர்த்திக் கொள்வதென்பது அந்தஸ்தை அல்ல மனதை என்று புரிந்து கொள்வீராக .

10, தன் கேள்விக்கும். தேடுதலுக்கும் விடை காண பல குருவை நாடி பதில் கிடைக்காமல் வெறுத்து இனி எனக்கு யாருமே வேண்டாம் நானே தேடிக்கொள்கிறேன் என்று எப்போது தனியாக தேடுகிறானோ அப்போதே அவன் தேடுதலில் வெற்றி பெற்றவனாவான், இந்த வெறுப்பு வரும்போதுதான் போலியான தேடுதல் அகன்று உண்மையான முயற்சியும். தன்னம்பிக்கையும் உண்டாகும், அப்போதுதான் ஏழாம் அறிவு செயல்பட துவங்குகிறது,  தேடுதல் தனி சிந்தனையாய் ஒருநிலைப்படுகிறது, போலியான நம்பிக்கை அகன்று பகுத்தறிவு செயல்படுகிறது .

11, ஆசையை அறுக்க விரக்தி. வெறுப்பும். சலிப்பும். வேதனையும் பயன்படுகிறது, இவை ஆன்மிகத்தின் இன்றியமையாத கருவிகளாகும், இரண்டாம்பட்சமாக தியாகம். தர்மம். அற்பணிப்பு. முயற்சித்தல். வம்சாவழி. சூழ்நிலை கருவிகளாக உள்ளது, மூன்றாம் பட்சமாக பயம். ஆசை. பெருமை கருவியாக அமைகிறது, ஆன்மிக அடிப்படைக்கு மேற்கண்ட கருவிதுணை இல்லாமல் யாரும் நுழைந்தது இல்லை .

12, எந்த துன்பம் வந்தாலும் துவண்டு போவது அறியாமை, இவரை அறியாமலேயே இவர் அனைத்திலும் பற்றுள்ள ஆசைக்காரராக இருக்கிறார் என்று பொருள், அழகை கூட இந்த அணியைசேர்ந்ததுதான், எந்த துன்பம் வந்தாலும் வரட்டும் பார்க்கலாம் என்பதே ஞானம், எத்துன்பமும் வந்தாலும் ஆசையை அறுக்க உதவும் கருவியான மனஅடக்கம் தனக்கு உதவுகிறது என்று நினைப்பவர் ஞான வாசலை திறந்து விட்டார் என உணரவும், இவ்வாறு உணர அனைவரும் நினைத்தால் ஞான தெளிவு உண்டாகும், பின்பு ஆசையை அறுக்க உதவும் கருவிகள் கூட நம்மை நெருங்காது, துன்பம் இன்பம் என்ற இரு அர்த்தமும் சமமாகிவிடும். வெறுமனாகி விடும் .

13, உண்மையாகவே உங்கள் மனம் ஆன்மிக வெற்றி நாடினால் அதில் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள், விடாமுயற்சியை உங்கள் மனதில் வைப்பதைவிட அதிலேயே உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள், தன்னால் எல்லாம் தேடி வரும், எதிர்பார்ப்பு என்ற ஒன்றை மனதில் வைத்தால் அது முழுமனதையும் இடம்பிடித்துவிடும், மேற்கண்ட விஷயம் எல்லா செயலிலும்  வெற்றி காண பயன்படும், மேற்கண்டவற்றில் உள்ள தகவல் யாதெனில் நீங்கள் ஆசைபடுவதையோ. எதிர்பார்ப்பு வைப்பதிலோ குற்றம் கூறுவதில்லை, அதற்கே அடிமையாகி உண்மையான வெற்றியை கை நழுவ விட்டுவிடக்கூடாது என்பதே எம் நோக்கம், பலரும் ஆசைப்பட்டு ஆசை கனவிலேயே மிதப்பதோடு சரி ,அடைவதற்கான தியானம் கூட செய்ய முயற்சிப்பதில்லை, சிலர் தன்னால் வரும் என்று இருப்பர், இந்த பொருமை நல்லதுதான் என்றாலும் அந்த பொறுமை முயற்சியோடு சம்மந்தப்ட்டதாக இருக்க வேண்டும், இல்லையேல் அந்த பொறுமை சோம்பேறித்தனத்தையும் ஏமாளித்தனத்தையும் குறிக்கும் .

14, சமாதிக்கு முன் சக்தியை பெறுவதே சிறந்த வழி. சமாதிக்கு பின் சக்தியை பெறுவதனால் உடலோடு ஆன்மா இருந்தபோது பெற்ற சக்தியே சமாதிக்கு பின் சக்தி பெற உதவும், அவ்வாறு சக்தி பெறாமல் சமாதியானால் ஆத்மாவோடு வாழ்ந்த காலத்தில் நேசித்த உடலோடு உள்ள ஆத்மாவே சக்தி ஊட்ட முடியும், இவ்வாறு நீத்த ஆத்மா உடல் ஆத்மாவிடம் சக்தி பெற்றாலும் அந்த சக்தி அனைவருக்கும் பயன் அளிப்பதில்லை, முயற்சியும் தேடுதலும் உள்ள ஆத்மாவே சக்தியை பெற முயற்சிக்கிறது, அதுவே இறுதியிலாவது தெளிவு பெறுகிறது, உடலை நீக்கும் ஒரு நொடி முன்பாவது சக்தியை பெற்றுவிடும், சக்தியே பெறவில்லை எனினும் தேடுதலில் அனைத்து அனுபவங்களையும் காணும் வாய்ப்பு கிடைப்பதால் பலம் பொருந்திய ஆத்மாவாக மாறிவிடுவதால் அதன் சக்தி தன்னால் பன்மடங்காகிறது, பல சித்தர்கள் இறப்பை பெற்ற பின் சக்தி பெற்றதும் இவ்வாறே, இறப்பை விரும்பியதும் இதற்கே .

15, கர்மாவை தாங்கிய உடல் பாவங்களால் தாக்கப்படுகிறது, கர்மாவை தாங்கிய உடலோடு உள்ள ஆத்மா புண்ணியங்களை ஏற்றுக்கும் சக்தி பெற்றது, அதனால் அதன் பலம் பெருகும், ஆனால் இந்த உடல் பாவங்களை ஏற்பதுபோல புண்ணியங்களை பெற  முடிவதில்லை, பாதிக்கப்பட்ட ஆத்மாவை மீண்டும் சரி செய்ய முடியும், ஆனால் உடல அவ்வாறில்லை, பஞ்ச பூதங்களின் துணை உடலுக்கு அத்தியாவசியமானது, ஆனால் ஆத்மாவிற்கு அவசியமில்லை, ஆனால் அந்த ஆத்மா வலிமை பெற உடல் அவசியமாகிறது, உடலோடு இருந்து சக்தி பெற்ற பின் இந்த உடலை துறப்பதால் ஒரு தவறும் இல்லை, சக்தி பெற்ற ஆத்மாவிற்கு உடல் இருந்தாலும் இல்லை என்றாலம் எல்லாம் ஒன்றுதான் .


16, மனிதன் இறப்பதற்கான காரணமும் முதுமையும் இறைவன் கொடுத்த வரபிரசாதமாகும், மனிதன் கர்மாவில் பிறப்பெடுக்கிறான், இந்த லோகத்தில் அவன் அறிந்த ஆசைகள் எல்லாவற்றையும் அடைய முயல்கிறான், இதற்காக பல தவறுகளையும். பல ஆத்மா இம்சையும். பல உயிர்களையும் அழிக்கிறான், உருவாக்குவது ஒன்றொன்றால் அழிப்பது பலதாக செயல்படுகிறான், இவன் ஆசை அடைய ஒருவனால் ஒரு குடும்பமே உருவாக்கப்படுகிறது, பின்பு  தேவை பெருக்கத்தால் சுயநலம் உட்புகுகிறது, பின்பு லோகத்தில் போட்டியும் ஆரம்பமாகிவிடுறது, இந்த போட்டியின் வெற்றி
ஏமாற்றுவதிலோ. அழிப்பதிலோ. நிராசையிலோ. பாவத்திலோ முடிகிறது .

இத்தனை குற்றத்திற்கும் செயல்களை செய்த அத்தனை ஆத்மாக்களும் பொறுப்பேற்க வேண்டியதாகிறது, மரணமோ. முதுமையோ. அவன் பாவச் செயலுக்கு முற்றுபுள்ளி வைத்து இவன் விதியை தடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இறை ஆத்மாவிற்கு ஏற்படுகிறது , இறைவனுக்கு அப்படியென்ன அவசியம் என்றால் உண்மையில் நாம் வாழும் இந்த பூமி மனிதனைவிட பலபல கோடி பாரம் கொண்ட எத்தனை மலைகளையும் மரங்களையும் தாங்கும் சக்தி உண்டு, ஆனால் மனிதனையும் நகரும் உயிர்களையும் தாங்கும் சக்தி மட்டும் கிடையாது, அதிலும் குறிப்பாக மற்ற ஆத்மாவை அழுத்தக்கூடிய அதாவது வேதனைபடுத்தக்கூடிய காரணிகளே உலகில் மிக பாரமான ஒன்றாகும், மனபாரம் என்று சொல்வார்களே அதன் பாரத்தை எவராலும் அளக்க முடியாததாகும், மேலும் இந்த மனபாரமாகப்பட்டது, இன்னொரு உடல் ஆத்மாவை உருவாக்கும்போது அதே பாரத்தை அனுபவிக்கும் ஆத்மாவாகிறது, அப்படியானால் இதற்கு முடிவே கிடையாத என்கின்ற போது ஒரு படைப்பு உருவானால் அது முதிர்ந்து உதிர வேண்டும், உதிர்ந்த ஆத்மா ஆத்மலோகத்துடன் ஐக்கியமாகிவிடவேண்டும், அவ்வாறு ஐக்கியமாக  அந்த ஆத்மா நிராசை உள்ளதாகவோ அல்லது தேவைகள் பூர்த்தி அடைந்ததாகவோ அல்லது பற்றற்றதாகவோ தகுதி பெற்றிருக்க வேண்டும், இதையே புண்ணிய ஆத்மா என்பர் .

புண்ணிய லோகத்தில் தகுதி பெற்ற ஆத்மாக்கள் அடுத்த லோகத்திலும் தகுதி பெறுவது  உயர் ஆத்மாவாகும், அந்த ஆத்மாவே கிரகம். தெய்வம். தேவதை என சொல்லப்படுகிறது, ஆக இந்த உயர் வகை ஆத்மாக்களும் மானிடமே, அதனால் தான் மானிடத்தோடு தெய்வ தேவதைகளோ அல்லது இதற்கு மாற்று பெயரான கிரகங்களோ ஆட்கொள்ளுகின்றன, இதைத்தான் அக்காலத்திலேயே ஒருவன் பிறக்கும் போது அவன் ஆத்மாவோடு தொடர்புள்ள நட்சத்திர மண்டலமாக காட்சி அளிக்கும் ஆத்மாக்கள் தொடர்பு கொண்டு பூமியில் ஒரு புதிய ஆத்மா உடலுக்குள் நுழைந்து வளரும் என்றார்கள், இது உண்மையே ஆக இது போன்ற சக்தி வாய்ந்த ஆத்மாக்களின் சக்தியோடு தொடர்பு கொள்ள உடலோடு உள்ள ஆத்மாவாலும் முடியும், இந்த முயற்சியே ஞானவழியாகும் .

இது மாந்திரிகத்தோடு இரண்டாம் பட்சமாக தொடர்பு கொண்டது, முதலில் சுத்தமான ஆத்மா பிறகு ஆத்ம மண்டலத்துடன் தொடர்பு கொள்ள மந்திர ஒலி அந்த ஒலி உடலில் இருந்து மனதோடு தொடர்பு கொண்டு வெளி செல்ல வேண்டும், அது பல லோகத்தை சங்கிலி தொடராய் கடக்க வேண்டும், அந்த ஒலியை எழுப்பிய ஆத்மாவிற்கு மேல்நிலை ஆத்மா சக்தி பரிமாற்றம் செய்ய வேண்டும் (வரம்) அவ்வாறு நிகழும் போது அந்த ஆத்மா புனிதமடைகிறது, உடலோடு இருக்கும் போதே உடலோடு உள்ள ஆத்மாக்களுக்கு உதவிட முடியும், உதவி பெறும் ஆத்மாக்கள் சக்தி பெற்ற ஆத்மாவை வாழ்த்துவதோடும் பலனை பெறுவதோடும் மட்டும் நின்றுவிடுவதாலும் பாவிகளான ஆத்மாக்களின் பரிதாபத்திற்கு ஆட்பட்டு புண்ணிய உடல் ஆத்மாக்கள் உதவி செய்து அவர்களின் பாவ பங்கை பெற்று தன் புண்ணிய பங்கை தாரை வார்க்கிறது, இதனால் புண்ணிய ஆத்மா பலம் குறைந்து செயலிழந்து மிக கீழ்நிலைக்கு செல்கின்றன, இதற்கும் மரணம் அத்தியாவசியமாகிறது, ஏனெனில் உதவுவது தாராதரம் அறியாமல் பரிதாபத்திற்கும். தொந்தரவிற்கும் லயித்து உதவி செய்து ஆத்ம புனித பயணம் மேற்கொள்ள முடியாமல் போக வைக்கிறது, அதனால் இந்த ஆத்மாவிற்கும் மரணம் பொதுவாகிறது .

 வயோதிகம் மன பக்குவத்திற்கும் பெரும் பங்காற்றுகிறது  ,  உடலுக்கு முதிர்ச்சியும். வலிமை குறைவும் அவசியமாகிறது இவை இரண்டும் நடக்கும் போது தேவை குறைகிறது, மனம் பலமாகிறது, இந்த பலமான மனதிற்கு மரணமோ. வயோதிகமோ இல்லை, ஆனால் உடலுக்கு தேவைப்படுகிறது,  ஏனெனில்  உடலைவிட்டு பிரிந்தால்தான் சந்ததிகளை உருவாக்கும் கருவை தாங்கி இளமை கொண்டு மீண்டும் பிறக்கலாம்.

இங்கு ஒரு சந்தேகம் எழலாம், இறந்தவர் மட்டுமே மீண்டும் கருவினில் நுழைய முடியும் என்றால் மக்கள் தொகை பெருகாதே அப்படியே தானே இருக்கும் ? விந்துவால் என்ன தான் பயன் ? என்றெல்லாம் கேட்கத் தோன்றும், அறிவீராக ! விந்துவால் உடலை மட்டுமே உருவாக்க முடியும், உடலோடு உயிர் (காற்று) சம்மந்தப்பட்டது, ஆனால் அந்த உடலுக்கு ஆத்மாவை அளிக்கும் பொறுப்பு மனிதனிடம் முழுமையாய் இல்லை, அது நீத்த முன்னோர் வசமோ அல்லது கருவிற்கு சொந்தக்காரனின் மன விகாரங்கள் மற்றும் அவன் பெற்றுள்ள ஆத்மா பலம். மற்றும் வேறொரு ஆத்மாவின் வரமோ சாபமோ இவைகளே முழு ஆத்மாவை உட்புகுத்துகிறது .

ஒரு ஆத்மா நல்லதோ. கெட்டதோ அவைகளுக்கு பல குணபேதம் உண்டு, ஒவ்வொரு பேதத்திற்கும் ஒரு ஆத்ம ரூபம் பெற முடியும், ஒவ்வொரு ரூபத்திற்கும் அடையாளமாக பெயரை வேண்டுமானால் சூட்டலாம், (பஞ்ச பூதத்திற்கும். பஞ்ச முகத்திற்கும். தசாவதாரத்திற்கும். தசமகா சக்திக்கும். ஒவ்வொரு ரூபத்திற்கும் ஒரு பெயர் உண்டு, இதை அவதாரம் என்றும் கூறுவர்) இதேதான் அனைத்து மனிதருக்கும் உள்ள ஆத்மாவிற்கும் குணபேதகம் ஒன்றல்ல நூறல்ல எண்ணிலடங்காதவை உண்டு, அத்தனைக்கும் ஒவ்வொரு ரூபம் பெற முடியும், இந்த வழித்தோன்றுதலால்தான் மக்கள் தொகையும் பெறுகிறது, ஒரே தந்தைக்கு உருவான கரு 10 எனில் பத்தும் ஆளுக்கொரு குணபேதகத்தோடு பிறந்து வாழ்வதை பார்த்திருப்பீர்கள், அதற்கு காரணம் இதுதான் .

ஆக இறப்பும். வயோதிகமும் இறை ஆத்மா (இறைவன்) தந்த வரமாகும், பலருக்கும் முதுமையில் மனபாரம் பெருகி இருக்கிறது, அந்த பாரம் உடலைவிட்டு ஆத்மா பிரியும் போதுதான் பூமி சுமை குறைகிறது, இதற்கும் மரணம் அவசியமாகிறது, மனபாரம் இல்லா ஆத்மாவால் நிலத்திற்கு ஒரு துன்பமும் வருதில்லை, ஆனால் மனபாரம் இல்லா ஆத்மா எவரும் இருப்பதில்லை, அதனால் மரணம் விரும்பவில்லை, எனினும் ஆத்மாவிற்கும் லோகத்திற்கும் அவசியமாகிறது .

மரமோ. செடியோ கொடியோ அவைகளும் உருவாகின்றன. அழிகின்றன, மிருகங்களும் அவ்வாறே.  தண்ணீரும் ஆவியாகி ஆவியும் தண்ணீராகின்றன, மனிதனும். அவ்வாறே எடுப்பதை கொடுப்பதும் கொடுப்பதை எடுப்பதும். பிரபஞ்சத்தை ஆளும் ஆத்மாக்களின் விளையாட்டு இது தர்மமும். சூதும். அதர்மும் கலந்த சுழற்சி விளையாட்டு. இந்த விளையாட்டின் அவசியம் உண்டு ஆத்மாவை பரிசுத்தமாக்கவே நடக்கிறது, (இதைத்தான் ஜோதிடத்தில் தசாபுத்தி என்பார்கள்) மேற்கண்ட விளையாட்டு மனிதனிடம் ஒரே குணம் இல்லாததின் காரணமாகும், இதையெல்லாம் கேட்கும்போது மனிதன் ஆக்கவும். அழிக்கவும் பயன்படுத்தும் ஒரு கருவிதானா என கேட்கத் தோன்றும், உண்மையில் இல்லை, ஏனெனில் இந்த செயல்களை ஆட்டுவிப்பது எல்லாமே ஆத்மாக்கள் தான்.

 வாழும் மனித ஆத்மாக்கள்கூட அந்த செயலை செய்யலாம், அதற்கு பயிற்சி தேவை,பயிற்சிக்கு முக்கிய கருவியே காற்றுதான், இந்த காற்றை பூமியில் வாழும் உயிர்களால் மட்டுமே தக்க வைக்க முடியும், பெருக வைக்க முடியும், வேறு எந்த லோகத்திற்கும் அந்த சக்தி இல்லை,  எனினும் உடல் தாங்கி இருக்கும் ஆத்மாவின் சாதனையே இந்த காற்றை பிடிப்பதில் தான் இருக்கிறது, எப்படி பிடிப்பது என சந்தேகம் தோன்றுகிறது அல்லவா அறிவீராக, உடலை துறந்த ஆத்மாவால் எதையும் செய்ய முடியும், காற்றை எந்த ஆத்மா சுவாசிப்பதில்லையோ அது மகா பலம் பெருகிறது ,  காற்றை சுவாசிக்காவிடில் உடலில் ஆத்மாவை பிடித்து வைக்க முடியாது , அப்படியானால் சக்தி பெற வழி இல்லையா என கேட்கத் தோன்றும், உண்டு அறிவீராக, உடலோடு ஆத்மா இருக்க வேண்டுமானால் காற்று அவசியம்தான் அதே நேரத்தில் காற்றை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறோமோ அவ்வளவும். ஆத்மா பலம் இழக்கும், உடலோடு ஆத்மா இருந்தால் தான் ஆத்ம சக்தியை எளிதில் பெருக்கவும் முடியும், அப்படியானால் உடல் ஆத்மாவோடு வாழ்ந்தே ஆக வேண்டும், காற்றை உபயோகித்தே தீர வேண்டும், பிறகு எப்படி ஆத்ம பலம் சாத்தியமாகும் என வினா எழத்தான் செய்யும், அறிவோமாக காற்றை அடக்க சில உபகரணம் தேவை அவை பிரணாயாமம் என்னும் ரேசகம் பூரகம். கும்பகம் மற்றும் சக்ராக்களுக்கான இயக்க பயிற்கியாகும்,
உடல் சக்தி மையங்களை காற்றின் மூலம் எழும்ப உதவும் முறையாகும் .

இந்த பிராணாயாமத்தால் ஞான ஆத்மாவிற்கு முழு பலன் இல்லை, உடலுக்கே முழு பலன், இந்த பயிற்சியும். காற்றை கட்டுப்படுத்தக்கூடியதே எனினும் மனம் வசப்படுவதில்லை, அப்படியானால் காற்றோடு மனமும் (ஆத்மா) வசப்பட வழி இல்லையா என கேட்க வேண்டாம் நிறையவே உண்டு, ஆசைக்கும் சூழ்நிலைக்கும் அடிமையான மனிதரால் இதையெல்லாம் கடைபிடிக்க முடியாததுதான் எனினும் மனம்  வைத்தால் மனம் வசப்படும், வழிகள் அறிவீராக, 1, சும்மா இருத்தல். 2, பேசாதிருத்தல். 3, யோசிக்காதிருத்தல். 4, பசியை அடக்குதல். 5, வெற்றாக தியானித்தல். 6, இருட்டையும். தனிமையையும் நேசித்தல். 7, தேவையில்லாதிருத்தல். 8, கோபம். சிரிப்பு. படபடப்பு. ஆவேசம். பொறாமை. ஆசை. சுகம். பெருமை விரும்பாதிருத்தல். 9, தன் உடலை மறந்திருத்தல். 10, வித்தியாசம் காணாதிருத்தல் (ஆண். பெண். மதிப்பு மரியாதை. உயர்வு. தாழ்வு உன்னது என்னது. நீயா. நானா. வெற்றி தோல்வி இவை யாவும் அடங்கும் இன்னும் பல அடங்கும்,) மேற்கண்டவைகளை கடைபிடித்தாலே தன்னால் காற்று வசமாகும், அதுசரி இவ்வாறு காற்றை அடக்கி ஆன்மாவை பலப்படுத்துவதால் என்ன லாபம் என கேட்பீர் அல்லவா அறிந்து கொள்ளுங்கள்,
            நீரே கடவுள். நீரே புனித ஆத்மா. நீரே படைப்பாளி. தர்மமாய் தோன்றுவாய் .

17, ஒரே விஷயத்தை அடிக்கடி ஆழ்ந்து யோசிக்கும்போது அந்த நிகழ்வின் சாரம் கனவில் வரும், அதே போல் ஒரே கோரிக்கையை மனக்கண்ணால் தொடர்ந்து தியானித்துக்கொண்டிருந்தால் அது நடக்கும், அதே போல் வலிமை பெற்ற ஆத்மாவால்  எச்செயலையும் மற்றவருக்கு நிகழ்த்தி கொடுக்க முடியும் .

18, சிலருக்கு ஆத்மா திடீர் திடீர் என அவர் அறியாமலேயே வசப்படும், அப்போது சொல்வதும். செய்வதும் பலிக்கும் (நடக்கும்) ஆத்மா முழுமையாய் வசப்பட்டவருக்கு எப்பொழுதுமே செயல்கள் நடக்கும், எனவே செயல்களை ஆத்மாவால் செய்தால் மட்டுமே நடக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள், (செயல் என்பது கர்மாவை சார்ந்தது என்று இங்கு அறிக), இந்த ஆத்மாவை அதுவும் நமக்காக பணி செய்யும் ஆத்மாவை மன யட்சனி என்றும் அழைக்கலாம் .

19, நம் ஆத்மாவால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், நம் யட்சனி அருபமானது இதையே ஆத்மா எனலாம், நிலத்தில். நெருப்பில். தண்ணீரில். ஆகாயத்தில் எங்கு வேண்டுமானாலும் ஊடுறுவலாம், யட்சனி ஆத்மா (புனிதம் அடைந்தது அல்லது சக்தி பெற்றது) காற்று பூதத்துடன் கலந்து விடுவதால் எவ்வளவு வேகமாகவும் செயல்பட முடியும், இந்த உடலோடு சாதாரண ஆத்மா இருக்கும் வரை ஆத்மாவை உடல் கட்டுப்படுத்தும், ஆத்மா புனிதமாக பயிற்சி கொண்டால் உடலை ஆத்மா கட்டுப்படுத்தும். உடலோடு ஆத்மா ஒட்டியிருக்கும் போதே நாமும் எங்கும் ஊடுருவி எச்செயலும் செய்யலாம், இவ்வாறு இருப்பவரையே சித்தர். சுவாமி. தெய்வ அவதாரம். மகான். ஞானி. கடவுள் என்றெல்லாம் மக்கள் புகழ்வார்கள் .

20, முழு மனநிலையோடு நாம் தியானிக்கும்போது உடலோடு நாம் இருக்கிறோம் என்பதே தெரியாது, உடல் வலியும் அசைவும் கூட தெரியாது, இதுபோன்று தியானிப்பவர்கள் இறப்பை கண்டு வருத்தப்படமாட்டார்கள், உடல் முதிர்ச்சியும் ஒரு பொருட்டல்ல .

21, உங்கள் உண்மையான சுயகுணம் என்ன என்பதை கண்டறியுங்கள், அது எப்படிப்பட்டது எதை நாடுகிறது, அதன் பணி என்ன என்பதை முதலில் ஆய்வு செய்யுங்கள், இதை கண்டுபிடித்து விட்டாலே ஆன்மிகப்பயிற்சியில் வெற்றி பெருவோமா. தோல்வி பெறுவோமா என்று உங்களுக்கு விடை கிடைக்கும், தோல்வி தான் என் சுயத்திற்கு கிடைக்கும் என நம்பினால் இதில் உள்ளமுறைகளை கடைபிடியுங்கள் வெற்றி பெறுவீர்கள், ஆத்மாவால் முடியாதது எதுவும் இல்லை, அதை எப்படி வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம், உடலால் தான் அவ்வாறு முடியாதது .

உங்களுக்குள் கட்டுப்பாட்டையும். தர்மத்தையும். அர்ப்பணிப்பையும் ஒருவர் புகுத்த கூடாது , நீங்களாகவே தான் புகுத்திக் கொள்ள வேண்டும், சுய குண ஆய்வையும் மற்றவரை கேட்டு தெரிந்து கெள்ள முடியாது, நீங்களாகவே தான் அறிய முடியும், அவ்வாறு அறிய முற்படும்போது சலனத்திற்கு ஏற்றவாறு உங்கள் சுயகுணம் மாறுபடுவதை உணர்வீர்கள், ஒரு நேரம் கோபமாக. சில நேரம் நகைச்சுவையாக. பல நேரம் சாந்தமாக என மாறுபாடுகள் நிகழ்வதை காண்பீர்கள், இதை அறிந்த பின் எது நிலையாக வேண்டும் என நினைக்கிறீர்களோ. அதை நீங்கள் தேர்ந்தெடுத்து ஒன்றையே பயன்படுத்தலாம், இந்த பெரும் ஆற்றல் உங்களிடமே இருக்கிறது, இப்பணியை ஆற்றுவது உங்கள் ஆத்ம யட்சனியாகும் .

இந்த சுயலத்தை கண்டுபிடிக்க முதல் வழி நல்லதையோ. கெட்டதையோ. தேவையையோ. சிந்திக்காமல் மனம் பொதுவாய் இருந்து சிந்திக்க வேண்டும், அதில் நான் யார் என்று கேள்வி வையுங்கள் அதற்கான விடை உங்கள் மனதில் தான் இருக்கும், வெளியில் இல்லை, இதனை தெரிந்து நான் என்ன செய்யப் போகிறேன் என்று கேட்கத்தோன்றும், இதற்க்கு அவசியம் உண்டு, ஆன்மிகத்தில் நாம் யார் என்று தெரியாத வரை நம்மை மாற்ற முடியாது, நம்மை அறியாமல் நம்மை மாற்றி கொள்ள முயல்வது தற்காலிகமே நிரந்தரமாய் இருக்காது , இன்றைய குருக்கள் தற்காலிகமாக உங்களை மாற்றவே போதனை உள்ளது , ஆனால் அது பலன் அற்றது , விரைவில் உங்கள் மனதை வேறொரு சூழலுக்கு மாற்றிக் கொள்வீர்கள், இதனால் பெற்ற சக்தி எதுவானாலும் மீண்டும் விலகிவிடும், நம்மை நாம் அறிந்து செயல்படுவதே நிரந்தரம் .

வாழ்வில் ஏற்படும் காரணிகளால் நம் ஆத்மாவை அலையவிட்டு மாற்றிக் கொள்கிறோம், அது சாதாரண குடிமகனுக்கு பொருந்தும், ஆனால் ஆன்மிக சக்தி பெறவும், பெற்ற சக்தியை மற்றவருக்கு பயன்தரவும், பொது வாழ்க்கையோடு தன்னை அர்ப்பணிக்க முயல்பவரும் இதுபோல் அடிக்கடி ஆன்மாவை மாற்றி அமைக்க முயல கூடாது . அது சலனமற்று இருக்க வேண்டும், சலனமற்று இருக்க வேண்டுமானால் ஆத்மாவிற்கு பிரச்சனைகள் இருக்கக் கூடாது . எனவே குடும்பத்தை அமைத்துக் கொண்டாலோ. ஆசைகளை புகுத்திக் கொண்டாலோ. சமூக உணர்வுகளுக்கு இடம் கொடுத்தாலோ சலனமற்ற ஆத்மாவை பெற முடியாது . எனவே குடும்பத்தோடு தன்னை இணைத்துக் கொள்ளாமல் சன்யாசம் பெறுவதே சிறந்தது . அதுவும் சிறு வயதிலேயே பெற வேண்டும் என அக்காலத்தில் வலியுறுத்தினர், ஆனால் என் கூற்றுப்படி உண்மையில் அவ்வாறு இருந்துதான் சலனமற்ற ஆத்மாவை உருவாக்க முடியும் என்பதில்லை . உலகில் காணுகிற எந்த உயிரானலும் தன் உயிர் போல்தான் என்ற எண்ணமும். நான் எதை சந்தோஷமாக. கௌரவமாக. லாபமாக. அதிஷ்டமாக. உணர்வாக எதிர்பார்க்கிறேனோ அதையே மற்றவரும் எதிர்பார்க்கிறார்கள், நான் எதை தவறு என்றும். கஷ்டம் என்றும். குடும்பம் என்றும். சொத்து என்றும். வேதனை என்றும் தேவை என்றும் எதிர்பார்க்கிறேனோ வெறுக்கிறேனோ அதையேதான் மற்றவரும் விரும்புகின்றனர், என் பசி போல் அவருக்கும் பசி உண்டு, என் துயரம் போல் அவருக்கும் இருக்கும், என் துயர நிலை தூக்க நிலை யாருக்கும் என்னால் போய் சேர்ந்து விடக்கூடாது , என்னால் ஒரு ஆத்மாவும். வேதனைபட்டதாக இருக்கக் கூடாது, அதே நேரத்தில் என்னால் பல ஆத்மாக்கள் மனநிறைவு பெற வேண்டும் என்றெல்லாம் ஆரம்பத்தில் இந்த பழக்க வழக்க குணங்களை கடைபிடித்தாலே. மனம் சலனமற்று இருக்கும் பயிற்சிக்கு அடித்தளமாகும் .

 மனம் சலனமற்று இருக்க பரிபூரணமாய் நாம் நேசிக்க வேண்டும், இவ்வாறு முயலும் போது தன்னாலேயே ஜனவசியம். ஆத்மவசியம் உண்டாகிறது, பல வெளி ஆத்மாக்கள் நம்மை விரும்ப  ஆரம்பிக்கின்றன, நம்மை எத்தனை ஆத்மாக்கள் விரும்புகின்றனவோ. பலனை பெற்று சாந்தமடைகிறதோ அவைகளுக்குக்கெல்லாம் நம் ஆத்மா பலன் பெரும் தகுதி பெறுகிறது , நம் கர்ம பாவம் ஏதாவது இருப்பினும் பலன் பெற்ற ஆத்மாக்கள் பங்களிப்பு பெரும், (பித்ரு ஆத்மாக்களுக்கு தர்மத்தை தாரை வார்த்துக் கொடுப்பதும் இதற்குத்தான், ஒருவர் கொடுக்கும் தர்மத்தையோ. பொருளையோ. அனாவசியமாய் ஆசைபட்டு வாங்கக் கூடாது என்பதும் இதற்குத்தான், ஒருவருக்கு அநாவசியமாய் ஆத்மாவால் இரக்கப்படுவதை நிராகரிக்கப்பட வேண்டும் என்பதும் இதற்குத்தான் தீரா துயரம் உள்ளவர் மற்றவர் ஆத்மா சந்தோஷப்படும்படி தர்மம் செய்யச் சொல்வதும்  இதற்குத்தான்,) இந்த பரிமாற்றம் சாத்தியமானவையே, மாமனிதர்களின் பெரும் கண்டுபிடிப்பு இது, (கண்ணுக்கு புலப்படாததை கண்டுபிடித்தவர்கள் ஞானிகள் இதை அடிப்படையாகக் கொண்டு புலப்படுபவை கண்டுபிடித்தவர்கள் விஞ்ஞானிகள் இந்த இருவராலும் அளக்க முடியாதது, ஆத்மா யட்சனி இதை ஒத்துக் கொண்டவர்கள் சக்தி என்கிறார்கள்,  ஒத்துக் கொள்ள மறுப்பவர்கள் மாயை என்கிறார்கள், எதையுமே அறியாதவர்கள் ஏமாற்று வேலை என தன் இயலாமையை கௌரவமாக வெளிப்படுத்துகிறார்கள்) எனவே சுயத்தை அறிந்து சுழ்ச்சியாலும் வெல்லலாம் இது தாந்திரீகம், நேர்வழியாலும் வெல்லலாம் இது இறை பக்குவதும். வழி பலவாகினும் அடையும் கருத்து ஒன்றாக இருக்க வேண்டும் .

22, நம் ஆத்மா வலிமையானாலும் அல்லது வலிமையான ஆத்மாவின் தொடர்பு கிட்டினாலும் இதைக் கொண்டு இன்னொரு உடல் தாங்கிய ஆத்மாவை  நம் இஷ்டத்திற்கு செயல்படுத்த முடியும், நம் எண்ணங்களையும் அவர்களிடம் புகுத்தலாம், இந்த வழிமுறை மூலம் நட்பையும். காதலையும். காமத்தையும். தன் தேவையையும் கூட பெறலாம், ஆரம்பத்தில் வலிமை இல்லா உடல் தாங்கிய ஆத்மாக்களை மட்டுமே முதலில் எளிதில் வசப்படுத்த முடியும், முரட்டு ஆத்மாவையோ. சக்தி பெற்ற ஆத்மாவையோ அவ்வாறு செயல்படுத்துவது புனிதமான ஆத்மாவால் மட்டுமே முடியும் . (ஆத்மா பலம் பெற்ற பின்புதான் இதை செயல்படுத்த முடியும்,)

 இதன் அடிப்படையில் தான் ஆன்மிகவாதிகள் மற்றவர் கோரிக்கைகளை செயல்படுத்தி பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள், இதில் ஆத்ம சக்தியே முதல் நிலை யந்திரம். மூலிகைகள் மூன்றாம் பட்சமே, 1, சக்தி பெற்ற ஆத்மா ஒரு செயலை மற்றவருக்காக செய்ய முடியும், இது முதல் பட்சம். 2, சக்தி பெற்ற ஆத்மாவை நம்பி செயலை ஒப்படைக்கும் ஆத்மா நம்பிக்கையோடு ஒத்து போக வேண்டும், இல்லையேல் செயல் நடக்காது, இது இரண்டாம் பட்சம், 3, செயலை ஒப்படைக்கும் ஆத்மா திருப்தி அடைய சக்தியூட்டப்பட்ட. சக்தி நிலைந்துள்ள ஒரு வஸ்துவை ஒப்படைத்து உடனடி செயலாற்றுவது மூன்றாம் பட்சம் (இந்த மூன்றாம் பட்ச முறையால் தான் இக்காலத்தில் ஏகப்பட்ட போலிகள் உருவாக காரணமாகின, இதனால் இரண்டாம்பட்ச செயல்  பலனற்று போனது, முதல் பட்ச செயல் முழுமையானால் இந்த அவலங்கள் இல்லை, முதல் பட்சத்தை கடைபிடிக்கும் சுறுசுறுப்பும் மனபக்குவமும் சோம்பலாலும். பேராசையாலும். பாழாகிக் கொண்டிருக்கின்றன .

இளமையில் பேராசையை அனுபவித்து முதுமையிலாவது இந்த ஆத்மா சுத்தத்தை கண்டு வெற்றி பெறலாம் எனில் முதுமையிலும் கடமையும் ஆசையும் துறத்துகிறது என்கின்றனர் .

 இவர்கள் அறிவது. ஆத்மா ஞானம் பெற நேரத்தை ஒதுக்குவோ. செலவிடவோ. கடமையை மீறவோ. ஆசையை துறக்கவோ தேவையில்லை, சன்யாச வேடம் கூட அவசியமில்லை, ஆத்மாவை எந்த காரணியும் பாதிக்காமல் பார்த்துக் கொண்டால் போதும், இதற்கு வயது வரம்பு அவசியமும் இல்லை, விதி பிராப்தத்திற்கும் இடம் கொடுக்க வேண்டாம், (இயல்பாக பிற ஆத்மா தொடர்பு. தெய்வ ஆத்மா தொடர்பு. நற்குண தொடர்பு இருக்கிறதா என்பதை முன்னமே அறியவே விதி ஜாதகம் பார்க்கிறோம்) இல்லாததை இருக்கும்படி மாற்ற நம் உடலால்தான் முடியாது , ஆனால் நம் ஆத்ம யட்சனியால் முடியும் என்பதை மறக்க வேண்டாம், விதியின் கர்ம பாவம் தாக்க  எத்தனிப்பது முதலில் நம் மனதைத்தான் ஆனால் அதே மனதால் விதி பாவத்தை வெல்ல முடியும் என்பதே மாமனிதர்களின் கண்டுபிடிப்பு .

23 .      மனம் என்ற சக்தி இல்லை என்றால்  மந்திரம்  யந்திரம்  தந்திரம் எதுவும் பலன் அளிக்காது .  மனம் உங்களிடம் தான் இருக்கிறது அதை எங்கும் கடன் பெற தேவையில்லை . அதை அடக்க நீங்கள் தான் தகுதி பெற வேண்டும் . உங்கள் மனதை குருவாலோ . பெற்றோராலோ . இறைவனாலோ அடக்க முடியாது  உங்களுக்கே கட்டு படக் கூடியது அதை ஓடுக்கி தவம் செய்யுங்கள் , உங்கள் வெற்றியின் ரகசியம் இதில் தான் உள்ளது , மற்றவரை சந்தேகபடுங்கள் வேண்டாம்மென்று சொல்லவில்லை ஆனால் உங்கள் மேல் உங்களுக்கே சந்தேகம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் , லோகமே உங்களுக்கு பொய்யானாலும் உங்கள் மனம் உண்மையாக பிராத்திக்க முயற்ச்சி செய்யுங்கள் ,தெய்வமோ மனிதனோ உங்களை ஏமாற்ற முடியாது உண்மையில் ஏமாற வைப்பது உங்கள் மனம் தான் எனவே மனம்சரியாக இறைவனை நேசிக்கிறதா என கவனியுங்கள் வெற்றியை உங்கள் மன கட்டுப்பாடு எளிமையாய் கொடுக்கும் .  நம் மனம் எனும் ஆத்மயட்சனி  0_946c2_8b7fb4a5_L

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum