Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மைத்திரியின் வெற்றிடத்திற்கு ஜயசிங்க நியமனம்

Go down

மைத்திரியின் வெற்றிடத்திற்கு ஜயசிங்க நியமனம்            Empty மைத்திரியின் வெற்றிடத்திற்கு ஜயசிங்க நியமனம்

Post by oviya Sun Jan 11, 2015 12:51 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு ஜயசிங்க பண்டார நியமிக்கப்பட உள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 2010ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டவருக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ளது.

2010ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜயசிங்க பண்டார 21876 விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பொலனறுவை மாவட்டத்தில் ஐந்தாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

மைத்திரிபால சிறிசேன, ரொசான் ரணசிங்க, சிறிபால கம்லத், சந்திரசிறி சூரியாரச்சி ஆகியோர் நாடாளுமன்றிற்கு தெரிவாகியிருந்தனர்.

அண்மையில் ஆளும் கட்சியை விட்டு விலகி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.    

இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் ஊடாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்தாகின்றது. அந்த இடத்திற்கு ஜயசிங்க பண்டார நியமிக்கப்பட உள்ளார்.

எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பாகும் போது ஜயசிங்க பண்டார, நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum