Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்த நினைத்ததையெல்லாம் மைத்திரி முடித்து வைத்தார்! எம்மினத்தை இப்படி செய்துவிட்டீர்களே!

Go down

மகிந்த நினைத்ததையெல்லாம் மைத்திரி முடித்து வைத்தார்! எம்மினத்தை இப்படி செய்துவிட்டீர்களே! Empty மகிந்த நினைத்ததையெல்லாம் மைத்திரி முடித்து வைத்தார்! எம்மினத்தை இப்படி செய்துவிட்டீர்களே!

Post by oviya Sun Jul 05, 2015 2:35 pm

அன்று மலையக தமிழ் மக்கள் கண்டதை இன்று வடக்கு கிழக்கில் காண்கின்றோம். இலங்கையில் இன அழிப்பு என்பது விடுதலைப் புலிகளின் செயற்பாட்டின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல.
இன அழிப்பு ஆரம்பிக்கப்பட்டது இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த உடனேயே நன்கு திட்டமிட்டு நீண்டகால அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை இந்த தமிழ் சமூகமும் தமிழ் தலைமைகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த செய்தியின் நோக்கமாகும்.

ஆம் 1947ம் ஆண்டிற்கு பின் இலங்கையை ஆட்சி செய்த ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க இரண்டுமே சிங்கள தலைவர்களை கொண்டதென்பது சகலரும் அறிந்த விடயமே.

இதில் இவர்கள் இரண்டு பிரிவாகும் முன்பு ஒன்றாக இருந்தார்கள் அன்றும் தமிழர்கள் தனியாகவே ஆங்கிலேயர் ஆட்சியில் அன்றைய அரசின் சிங்கள அதிகாரிகள் தங்கள் இனம் சார்ந்த விடயங்களுக்கு மிக அனுதாபமான முறையில் தீர்வு கண்டு கொண்டிருந்த வேளை, தமிழ் அதிகாரிகளோ சட்டத்தின் அடிப்படையிலேயே தமிழ் சிங்களவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியை செய்தார்கள் தமிழர்களுக்கென்றால் இன்னும் அதிக கெடுபிடிக்ள அது இன்றும் காணலாம்.

சிங்கள அரச அதிகாரிகள் தமிழ் அரச அதிகாரிகளுக்கு எதிரானவர்களாக இருந்து வந்தார்கள்.

இதன் தாக்கமே சுதந்திர இலங்கையில் அப்போதைய சிங்கள அரசு அதிகாரிகள் தமிழ் அதிகாரிகளை ஒன்றும் செய்யமுடியாது என்பதை நன்கு அறிந்து அதை சாதாரண தமிழ் மக்களுக்கு எதிரான செயல் வடிவத்தில் செயற்பட ஆரம்பித்தார்கள்.

இதன் மூலம் வடக்கு - கிழக்கு பகுதிகளில் குறிப்பாக திருகோணமலை, பொலனறுவை, கல்லோயா, அம்பாறை போன்ற பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தை ஆரம்பித்தார்கள் இன்றும் தொடர்கிறது.

வடக்கு கிழக்கு பகுதியில் கணிசமான சிங்கள குடியேற்றத்திட்டம் ஒரு பக்கம் நடைபெற்று வந்த போதும் மலையக பகுதிகளிலும் அசுர வேகத்தில் சிங்கள குடியேற்றம் திட்டமிட்டும் செய்யப்பட்டது.

அக்காலப் பகுதியில் பெருந்தோட்டங்கள் யாவும் பிரித்தானிய கம்பனிகளுக்கு சொந்தமாக இருந்த காரணத்தினால் அதற்கு பிரதான நிர்வாகியாக ஆங்கிலேயர் இருந்தார்கள்.

ஆனால் ஏனைய சகல துறையிலும் தமிழ் உத்தியோகஸ்தர்களும் தமிழ் தொழிலாளர்களுமே இருந்தார்கள். அந்திய செலாவணியை இலங்கைக்கு கொண்டுவரும் தேயிலை, இறப்பர் போன்றவைகளும் தமிழ் மக்கள் மத்தியிலேயே இருந்தது.

அன்றைய சிங்கள தலைமைகளுக்கு இது பெரும் பொறாமையை ஏற்படுத்தியிருந்தது.

இதன் விளைவாக இவைகளில் அரசு மற்றும் பெருந்தோட்ட பகுதியில் தமிழ் மக்களிடம் இருக்கும் இந்த அதிகாரத்தை அவர்களிடமிருந்து பெற்றாக வேண்டியது சிங்கள தலைமைகளின் முழு எண்ணமாக இருந்த போதும் அதை செயற்படுத்த அவர்கள் தீட்டிய திட்டமோ மிகவும் கபடத்தனமானதாகவும் அதேநேரம் தமிழ் அரசு உத்தியோகஸ்தர்களையும் அரசியல்வாதிகளையுமே பயன்படுத்தி அவர்களின் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள நீண்டகாலத் திட்டத்தை அமுல் நடத்தியதோடு, அப்போதைய வடகிழக்கு தமிழ் தலைமைகள் அரசியலை தங்களின் பகுதிநேர சேவைகளாக செய்து கொண்டிருப்பதும் முழுநேர வேலையாக தங்களின் அறிவு சார்ந்த தொழில்களையே செய்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(வழக்கறிஞர்கள், நில உரிமையாளர்கள், செல்வந்தர்கள், வியாபாரிகள்) இது இந்த சிங்கள அரசியல் தலைமைகளுக்கு சாதகமாகிவிட்டது.

அப்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் அனைவரும் கனவான் (Gendelman) அரசியலையே விரும்பினார்கள் அப்படியே நடக்கவும் செய்தார்கள். இது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அத்திவாரமிட்டுவிட்டது.

அதேபோல் மலையகப் பகுதிகளில் கல்வியில் அறிவு குறைவாகவும் அடிமைகளாக்கவும் சாதிய பாகுபாடுகளினாலும், உயர் சாதியில் உயர் பதவிகளையும் ஏனைய மக்கள் சாதாரண தோட்ட தொழிலாளர்களாகவும் இருப்பதும் இந்த சிங்கள தலைமைகளுக்கு மேலும் தங்களின் திட்டத்தை அமுல்படுத்த சாதகமாகிவிட்டது.

இதன் காரணமாக தோட்டப் பகுதியில் உயர் பதவிகளில் உள்ள பெரிய கங்கானிகள் அவர்களின் பிள்ளைகளின் நகர கல்வி மற்றும் வியாபாரம் போன்றவைகளுக்கு ஆதரவாக செயல்பட சிங்கள வியாபாரிகள் மற்றும் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள்.

அக்காலப் பகுதியில் இம் மக்கள் அரசியல் அனாதைகளாக இருந்தபடியால் இவர்களுக்கு அரசு பிரதிநிதிகளை தெரிவு செய்ய சந்தர்ப்பம் இல்லை இந்நிலைகளை பெரிய கங்காணிமார்களின் வழித்தோன்றல்களை தொழிற்சங்க தலைமைகளாகவும் இருந்த காரணத்தால் சிங்கள அரசாங்கத்தில் நியமன பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆட்சிக்கு வரும் ஐ.தே.க ஸ்ரீ.லசு.க போன்றார்கள் தங்களுக்கு சாதகமாக இயங்கும் தலைமைகளுக்கு பதவிகளை வழங்கிவிடுவார்கள்.

இவர்கள் அரசின் ஆதரவுடன் தங்களின் குடும்ப வளர்ச்சிக்கும் உறவினர்களின் வளர்ச்சிக்கும் அவர்களின் வியாபார வளர்ச்சிக்குமே இந்த அரசியல் பதவிகள் உதவின.

அதே நேரம் இலங்கை அரசு இந்தியா அரசுடன் மிக நெருங்கிய உறவை பேணி குடியுரிமையற்ற இம்மக்களுக்கு குடியுரிமை வழங்குவதாக சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இந்தியா பிரஜாவுரிமைக்கும் விண்ணப்பங்களை கோரியது இரண்டு அரசும், இதில் 5 லட்சம் பேர் இந்தியா பிரஜையாகி குடிபெயர்ந்தார்கள். தாய் இந்தியா மகன் இலங்கை என்ற ஒரே குடும்பம் இரண்டு பிரிவை ஏற்படுத்தியது.

இந்த ஒப்பந்தம். அதே நேரம் தோட்டப் பகுதிகள் சங்கிலியை போல் தொடர்ந்து தேயிலை தோட்டங்கள் இருந்த படியால் இவைகளை பிரிக்கும் வகையில் இரண்டு தோட்டங்களுக்கிடையில் காணி சுவீகரிப்பு என்ற போர்வையிலும் இரண்டு தோட்டங்களுக்கிடையே சிங்கள குடியேற்றம் என தமிழ் தோட்ட தொழிலாளர்கள் பிரிக்கப்பட்டார்கள்.

இதன் மூலம் தோட்டப் பகுதிக்கும் சிங்கள உத்தியோகஸ்தர்களின் வருகை அதிகரித்தது. இந்நிலையில் ஐ.தே.க அரசு காலத்தில் தோட்டப்பகுதியில் பெருவாரியாக வாழ்ந்த இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் பெருக்கத்தை தடுப்பதற்கான திட்டத்தை அமுல்படுத்தியும் தமிழ் மக்கள் பெருக்கத்தை தடுக்க ஆரம்பித்தார்கள். இதற்கு குடும்பத்திட்டம் என்று பெயரிடப்பட்டது.

இந்த திட்டத்தை சிறப்பாக அரசு மற்றும் சர்வதேச நிதிகளைக் கொண்டு தோட்டத் தமிழ் தொழிலாளர்களின் சமூக மேம்பாட்டை அபிவிருத்தி செய்யப் போவதாக விளம்பரப்படுத்தி அம்மக்கள் சார்பாக இந்த திட்டத்திற்கு ஆதரவாக இ.தொ.கா மற்றும் ஐ.தே.க ஆதரவு தொழிற்சங்கமான இ.தே.தோ.தொ.ச சார்பாக இயக்குனர் சபையில் அரிச்சந்திர சேகரா மற்றும் ராஜா செனவிரத்ன என்ற இன வாதிகளையும் நியமிக்கப்பட்டதின் விளைவு தோட்டப்பகுதியில் குடும்பக்கட்டுப்பாட்டின் அறுவை சிகிச்சைகள் அசுர வேகத்தில் நடைபெற்றதோடு அத்திட்டம் இன்றுவரை சிறப்பாக செயல்படுகின்றது இதன் விளைவு பிள்ளை பிறப்பு விகிதம் மலையகத்தில் படுவீழ்ச்சிக்கு வித்திட்டது.

இன்று தோட்ட பகுதியில் உயர் உத்தியோகஸ்த்தர்கள் அனைவரும் பெரும்பான்மையாகவும் அவர்கள் தோட்டத்தையொட்டிய எல்லை பகுதியில் சிங்கள மக்களும் நிரந்தரமாக இந்த தமிழ் மக்கள் எந்நேரமும் பய உணர்வுடன் வாழும் நிலைமை நிரந்தரமாக்கி விட்டார்கள்.

அதன் காரணமாக இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி உறுப்பினர்கள் என்பது இம் மக்கள் தெரிவு செய்தாலும் தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் பத்திரிகைகளுக்கு வீரனாக அறிக்கை விட்டாலும் உள்ளூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பயந்தே செயல்படுகின்றதை இப்பொழுதும் பார்க்கலாம்.

தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அப்பகுதி சாதாரண பொலிஸ் அதிகாரிகள் சாதாரண மக்களிடம் நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றி ஆதார பூர்வமான விபரங்களுடன் கொடுத்து நடவடிக்கை எடுக்க கூறினாலும் அவர்கள் அதை செய்யமாட்டார்கள்.

இது இவர்கள் வளர்ந்த துர்ப்பாக்கிய நிலையோடு இவர்களின் ஊழல், சட்டவிரோத செயல்பாடுகளை இப்பிரதேச காவல்துறை அதிகாரிகள் நன்கு அறிவார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மையாக இருந்து அரசு மற்றும் பொலிஸ் உயர் அதிகார மட்டத்தில் முஸ்லிம்கள் இருப்பதைப் போல் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் அதிகாரிகள் இல்லாமையாகும்.

இந்த சூழ்நிலையில் வட பகுதியில் இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகளின் உரிமையை கேட்கப் போராடிக் கொண்டு தமிழ் மக்கள் இருந்தாலும் பாதுகாப்பு என்ற போர்வையில் ஒவ்வொரு கிராமங்களுக்கும் இடையில் நிச்சயமாக சிங்களக் குடியேற்றத்தை அரசு தனது அதிகாரத்தின் முன் செயல்படுத்தப் போவது நிச்சயமாகும்.

எனினும் தமிழ் தலைமைகள் தங்களின் தன்னம்பிக்கையுடன் அரசு உதவும் என நம்பிக் கொண்டிருந்தால் அது நடக்காது போகலாம். நாம் மீண்டும் உங்களை கேட்பது இந்த சிங்கள அரசு அதிகாரத்தை ஐ.தே.க அல்லது ஸ்ரீ.ல.சு கட்சி கைப்பற்றினாலும் ஆட்சி வேறுபட்டாலும் இருவருமே ஒரே இனம்.

ஆகவே நாம் அவர்களை நம்பி நடக்காது நம்மை அவர்கள் நம்ப ஒன்றுபட்டு செயல்பட்டு உடனுக்குடன் நமது பிரச்சினைகளுக்கு முடிவு காண்பது அவசியம்.

இல்லையேல் செவிடன் (அரசு) ஊமையன் ( அரசில் தலைமைகள்) குருடன் (பொது மக்கள்) இவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையாகவே இது தொடரும்.

இந்நிலையில் மகிந்த கால ஆட்சிக்கு மைத்திரியும் செல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகி வருவதையும் நாம் இப்பாழுது காண்கின்றோம்.

இப்போதைய ஜனாதிபதி தனக்குள் சர்வ அதிகாரங்களையும் வைத்துள்ளார். அடுத்த முறை அவர் போட்டிபோடப் போவதில்லையெனவும் தெரிவித்துவிட்டார். அடுத்த ஜனாதிபதிக்கே அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளது

எனவே இப்போதைய ஜனாதிபதியை நாம் நம்பி வாக்குச்சீட்டுகளுக்கு மார்க்கை சிங்கள மக்களுடன் சேர்ந்து அளித்திருப்பதால் இவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் முக்கியமானதாக இருக்கும்

காணி மீள்அளிப்பு
விசாரணையின்றி சிறையில் வாடும் அப்பாவிகளின் விடுதலை
திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை தடுத்தல்
கலாச்சார சீர்கேடுகளுக்கு பின் பலமாக இருக்கும் போதைவினியோகத்தை தடுத்து நிறுத்தல்

போன்ற விடயங்களை கவனத்தில் எடுத்து உடன் அதுவும் தேர்தலுக்கு முன் தீர்க்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் இன்றைய ஜனாதிபதி மைத்திரி முன்னைய ஜனாதிபதி மகிந்த நினைப்பதையெல்லாம் மைத்திரி முடித்து வைத்தார் என்ற அவப்பெயருடனேயே அவரின் ஆட்சிக்காலம் முடியலாம்.

அப்பொழுதும் இந்த தமிழ் பொது மக்கள் எம் இனத்தை இப்படி பண்ணி விட்டீர்களே என்று கதறுவதையே எமது தலைமைகளும் பார்க்கும். இதனால் நன்மை சுயநல அரசியல்வாதிகளுக்கே.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum