Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Go down

கிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் Empty கிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Post by oviya Mon Jun 15, 2015 2:31 pm

பாடசாலை அதிபர் இடமாற்ற விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் தலையீடு செய்து, கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் சட்ட ரீதியாக நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு கடமையேற்க வந்த அதிபரை அரசியல்வாதியொருவரின் பலத்துடன் தடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவ்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலய சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்ட பேரணியில், பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

ஏறாவூர் வீரபத்திரர் ஆலய முன்றலில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, மட்டக்களப்பு - திருமலை பிரதான வீதியூடாக வந்து விபுலானந்தா வித்தியாலயத்தை வந்தடைந்ததுடன், அங்கு தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயத்திலிருந்து இடமாற்றம் பெற்று ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலத்தில் கடமையேற்கச் சென்ற அதிபர் எம்.உதயகுமாரை பாடசாலைக்குள் நுழைய விடாது தடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கழுதைக்குத் தெரியுமா கல்வியின் வாசனை, கௌரவமான அரச சேவைக்கு தூசனத்தல் அபிசேகம் செய்வதா, கிழக்கு மாகாணத்தின் நல்லாட்சியா?, பிரதித் தவிசாளரே கன்ணியமான அரச சேவையைக் களங்கப்படுத்தாதே, பிரதித் தவிசாளரே சட்டவாட்சியிலான நியமிப்பைத் தடுக்காதே, தூங்கிக் கிடந்த பாடசாலையினை தூக்கி நிறுத்திய உதயகுமாரை தூக்கி வீசியது ஏன்,

கல்விப் பணிப்பாளரே ஏறாவூர் கோட்ட கல்வியை பின்னோக்கித் தள்ளாதே, வலயக் கல்விப் பணிப்பாளரே சட்ட விதியை மதித்து சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்து, கிழக்கு மாகாண அரசியல்வாதிகளே கல்வியில் அநாவசியமாக தலையிடுவதை நிறுத்து போன்ற வாசகங்களை ஏந்தியவாறு பாடசாலைகளை அரசியல் களங்களாக பயன்படுத்த வேண்டாம் என்று கோசங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் ஊடாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு தமது மகஜரையும் அனுப்பி வைத்தனர்.

அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உதயகுமார் அதிபர் அவர்கள் 11.06.2009 இல் இப்பாடசாலையில் கடமை ஏற்க முன் பாடசாலையானது கற்றல் செயற்பாடுகளிலும் மாணவர்களது பொதுப்பரீட்சை செயற்பாடுகளிலும் மாணவர்களின் நிலை பின் தங்கியே காணப்பட்டது.

அது மட்டுமின்றி பாடவிதானம் தவிர்ந்த இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் மிகவும் மோசமான பின் தங்கிய நிலையே காணப்பட்டது.

அதுமட்டுமின்றி இந்தப் பாடசாலைக்கும் சமூகத்திற்குமான உறவுகளும் விரிசல் நிலையிலேயே காணப்பட்டது. ஆனால் உதயகுமாரன் அதிபர் அவர்கள் இப்பாடசாலையில் கடமை ஏற்றதன் பின்னர் எமது பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் படிப்படியாக உயர்வடைந்து தற்போது சிறப்பு நிலையிலேயே உள்ளது.

குறிப்பாக 05 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் க.பொ.த சாதாரண பெறுபேறுகள் அண்மைக்காலமாக சிறப்பு நிலையை அடைந்து வருகின்றது.

2014 இல் க.பொ.த சாதாரண பெறுபேறு 92 வீதம் எட்டியுள்ளது. இது நகர்ப்புறப் பாடசாலைக்கு ஒப்பானது. இவ்வாறாக பெறுபேறுகள் உயர்வடைவதற்கு எங்களது அதிபரின் அர்ப்பணிப்புடன் கூடிய நிர்வாகப் பணியும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புமே காரணமாகும்.

இந்த நிலையை அடைவதற்கு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புக்கள் இரவு நேர வகுப்புக்கள் பிரத்தியேக கருத்தரங்குகள் முன்னோடிப் பரீட்சைகள் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் அதிபரின் முயற்சி மிகவும் அர்ப்பணிப்பாக காணப்பட்டது.

இது தவிர பாடவிதானத்திற்குப் புறம்பாக இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் எமது அதிபரின் பங்களிப்பு அளப்பரியதாகும். பரிசளிப்பு விழாக்கள் விளையாட்டுப் போட்டிகள் கல்விச் சுற்றுலாக்கள் சிறுவர் தினவிழா ஆசிரியர் தினவிழா போன்ற செயற்பாடுகளிலும் எமது பாடசாலை சிறப்பு நிலையிலேயே காணப்பட்டது.

மேலும் பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்தி சமூக அபிவிருத்தி தொடர்பாக பாடசாலை சமூகத்துடன் அக்கறையுடனும் கண்ணியமாகவும் செயற்பட்டு பாடசாலை சமூக உறுப்பினர்களின் வினைத்திறனுடனான சேவையினைப் பெற்று சிறந்த விளைவுகளைப் பெற்றுக்கொள்வதில் மிகவும் திறமை வாய்ந்தவராக காணப்பட்டார்.

இவரது சேவை எங்களது பாடசாலைக்கு இன்னும் பல ஆண்டுகளுக்குத் தேவைப்படுகின்ற நிலையிலேயே இவரது தகைமையின் அடிப்படையில் மட்.ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் கிடைத்தது.

இச் செய்தி எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்த போதிலும் அவரது பதவி உயர்வு அவரது சேவை பல சமூகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் போன்ற அம்சங்களைக் கருத்திற் கொண்டே அவர் இடமாற்றம் பெறுவதற்கு விருப்பமின்றியும் சம்மதித்தோம்.

ஆனால் 11.06.2015ஆம் திகதியன்று எமது அதிபர் மட்ஃஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களுடன் சட்ட ரீதியாக கடமையேற்கச் சென்ற போதிலும் பாடசாலை சமூகம் பொருத்தமற்ற வகையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு அவரை கடமையேற்க விடாமல் தடுத்தமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அத்துடன் கல்வி அமைச்சின் வெளிப்படைத் தன்மையிலான சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்த ஓர் அரச அதிகாரி சுமார் ஒரு மணித்தியாலம் தமது காத்திருப்பை நுழைவாயிலிலே எதிர் கொண்டு ஏமாற்றமடைந்ததும்,

எமது அதிபர் பற்றியும் அவரது சேவை கல்வித்தகைமை அவரது சிறந்த நற்பண்புகள் போன்றவற்றை எள்ளளவும் அறிந்து புரிந்து கொள்ளாமல் அவரை குறை கூறி, அரசியல்வாதியின் பலத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தமை மிக மனவருத்தத்தைத் தருவதுடன் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும்.

சமூகப் பங்களிப்புடனான சுற்றுமதில் மற்றும் மாடிக் கட்டிடத்தின் மேல் பகுதி மலசலகூடத் தொகுதியினை அமைத்தல், நுழைவாயிலை அழகூட்டுதல் நூலக ஆய்வு கூடப் புனரமைப்பு, அலுவலகக் கட்டிடப் புனரமைப்பு ஆகியவை இவரது அளப்பரிய சேவைகளாகவும் பாடசாலைக்கும் பெற்றோர் சமூகத்திற்கும் இடையே விரிசலாகக் காணப்பட்ட உறவை மிகவும் நெருக்கமாகவும் சுதந்திரமாகவும் இவரது காலத்தில் தான் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆகவே அப்படியான சிறப்பான அதிபரை நாங்கள் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. இவரை எமது பாடசாலைக்குத் திரும்பவும் பெற்றுத்தர ஆவண செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை கேட்டுக் கொள்கின்றோம் என என்றும் விழிப்புடன் பெற்றோர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் என அவ்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு இதன் பிரதிகள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு ஜனாதிபதி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண ஆளுனர், மட்டக்களப்பு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள், மாகாணக் கல்வி அமைச்சு செயலாளர், மாகாணக் கல்வி பணிப்பாளர், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர், இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் யோசப் ஸ்ரான்லின், இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ.உதயரூபன், அனைத்து ஊடகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum