Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பழனி கோவிலில் இயற்கை முறையில் விபூதி தயாரிப்பு

Go down

பழனி கோவிலில் இயற்கை முறையில் விபூதி தயாரிப்பு  Empty பழனி கோவிலில் இயற்கை முறையில் விபூதி தயாரிப்பு

Post by oviya Tue Dec 23, 2014 2:42 pm

பழனி கோவிலில் கோசாலை பசுமாட்டு சாணம் மூலம் இயற்கை முறையில் விபூதி தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

பழனி கோவில் சார்பில் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தயத்தில் உள்ள கோசோலையில் 16 மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் சாணத்தில் இருந்து இயற்கை முறையில் விபூதி தயாரிக்கப்படுகிறது.

கோவில் முன்பு உள்ள வளாகத்தில் விபூதி தயாரிப்பு நேற்று தொடங்கியது. இதுபற்றி தயாரிப்பாளர்கள் கூறியதாவது:–

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இப்பணியை செய்துள்ளோம். விபூதியில் வாசனை திரவியங்கள் கலக்காமல் சுத்தமான முறையில் பசுமாட்டின் சாணம் மற்றும் பதர் (அரிசி இல்லாத நெல்) மூலம் விபூதி தயார் செய்கிறோம். வாசனைக்காக வெட்டிவேர் சேர்க்கப்படும் என்றனர்.

கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:– ஒப்பந்ததாரர் மூலம் வரவழைக்கப்படும் விபூதி அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

தற்போது அன்பு இல்லத்தில் இயற்கையான முறையில் தயார் செய்யப்படும் விபூதி முதற்கட்டமாக உச்சிகால பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். படிப்படியாக விபூதி தயாரிப்பு பணி விரிவுபடுத்தப்படும் என்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum