Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குரு பகவான் அருள் தரும் ஆலயங்கள்

Go down

குரு பகவான் அருள் தரும் ஆலயங்கள்   Empty குரு பகவான் அருள் தரும் ஆலயங்கள்

Post by oviya Tue Dec 23, 2014 1:59 pm

சுபக்கிரகவரிசையில் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளவர் குரு ஆவார். வேதத்தின் வடிவமே குருதான். இறைபக்தி, பக்தி, புத்தி, யுக்தி, ஞானம், அரசு சிறப்பு, அமைச்சராதல், பொறுமை ஆகியன எல்லாம் வழங்குபவர் வியாழனே. புனித சிந்தனையையும் நன்னடத்தையையும் அளிப்பவர். ஆன்மீகப் பெரியோராக, மதகுருவாக, ஒழுக்க சீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார்.

அனைவராலும் போற்றப்படும் பண்பாளராகவும், அருஞ்சாதனை புரிபவர்களாகவும், வேத முழக்கம் செய்கிறவர்களாகவும் உள்ளவர்களுக்கு குரு பலம் பெற்றிருப்பார். உடலில் உறுதி, உள்ளத்தில் தெளிவு, ஒளி பொருந்திய (தேஜஸ்) முகம், சுபிட்சம், மகிழ்ச்சி, மலர்ச்சி, பெருந்தன்மை, மென்மை, திறமை, செல்வம், புகழ், புனிதப் பயணம், புண்ணிய செயல்கள் ஆகியனயாவும் குரு பலத்தால் பெறக்கூடியவை ஆகும்.

ஒரு ஜாதகத்தில் குரு மட்டுமே அதிக பலம் பெற்றிருந்தாலும் போதுமானது. அவரது கருணையால் அனைத்து துன்பங்களும் அகலுவதற்கு இடமுண்டு. ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் வலிமை குன்றியோ, நீசமாகவோ இருப்பினும், குருவின் பார்வை பெற்றிருந்தால் அவற்றின் குறையாவும் நீங்கிவிடும். குறைநீக்கும் ஆற்றல் குருவின் பார்வைகுண்டு. இதை பெற நாம் வழிபட வேண்டிய குரு தலங்கள் வருமாறு:-

1.ஆலங்குடி :

குருவின் தலமாகிய ஆலங்குடி தலம் கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் பாதையில் உள்ளது. பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் கடைந்த போது வெளிப்பட்ட விஷத்தை ஈசன் சாப்பிட இத்தலம் ஆலம்குடி எனவும், இறைவன் பெயர் ஆபத் சகாயர் எனவும் ஆயிற்று.

ஒரு சமயம் தேவலோகத்தில் பார்வதி தேவி வந்து விளையாடிக்கொண்டிருந்த போது மேலே சென்ற பந்தைப் பற்றக் கைகளிரண்டையும் மேலே உயர்த்த, இதைப் பார்த்த சூரிய பகவான், தன் இயக்கத்தைத் தான் பார்வதி தேவி நிறுத்தச் சொல்கிறார் என்று தன் இயக்கத்தை நிறுத்தி விடுகிறார். இதனால் உலக இயக்கம் பாதிக்கப்படுகிறது.

சிவபிரானிடம் முறையிட, பார்வதி தேவிக்குச் சிவபெருமான் சாபம் அளித்துவிட, காசியாரண்யமாம் ஆலங்குடியில் பிறந்து, தவம் செய்து, தன்னிடம் வரும்படி பார்வதியிடம் சிவன் கூறிவிடுகிறார். அவ்வாறே தவம் இயற்றி ஈசனுடன் பார்வதி தேவி இணைந்தார். ஆலங்குடி குருபகவானை வழிபாடு செய்வதற்குக் குருபகவான் உச்சம் பெறும் ஆடி மாதமும், ஆட்சி பெறும் மார்கழி, பங்குனி மாதங்களும் ஏற்ற மாதங்கள் ஆகும்.

மேலும் குரு நட்சத்திரங்கள் ஆகிய விசாகம், புனர்பூசம், பூரட்டாதி வியாழக்கிழமைகளில், குரு ஓரையில் வியாழக்கிழமையில் குரு ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை வழிபட்டு, பரிகாரம் செய்வது மிக, மிகச் சிறப்பாகும்.

2. திட்டை :

தென்குடித் திட்டை எனப்படும் இத்திருத்தலம் தஞ்சாவூரிலிருந்து திருக்கருகாவூர் செல்லும் பாதையில் உள்ளது. குருபகவான் வழிபட்ட திருத்தலம், குருபகவான் தனி சன்னிதி கொண்டு விளங்குகிறார். இங்குள்ள மூலவர் மீது மேலிருந்து 25 மணி நேரத்துக்கு ஒருமுறை, ஒரு சொட்டு நீர் சுவாமி மீது இன்றும் சொட்டுகிறது.

இதற்குக் காரணம் மேல் தளத்தில் உள்ள சந்திரகாந்த் கல்தான் எனக் கூறப்படுகிறது. இங்குள்ள குருபகவானை வளர்பிறை வியாழக்கிழைகளில் வழிபடுவது சிறப்பாகும். இங்குள்ள முருகப் பெருமான் மிகவும் பிரசித்தமானவர் ஆவார். இத்தலம் குருபகவான் தனி சன்னிதி கொண்டு விளங்குவதால் குரு பரிகாரம் செய்வதற்கு ஏற்ற ஒரு சிறப்புத் தலமாகும்.

3. திருச்செந்தூர்:

முருகனின் ஆறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று. குருபகவான் வழிபட்ட திருத்தலம். முதலில் நாழிக் கிணறில் நீராடி விட்டு, பிறகு கடலில் நீராடி விட்டு முருகனைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். இத்திருத்தலத்தில் 9 கால பூஜை, ஒன்பது கிரகங்களினால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முருகன் 9 கால பூஜையை ஏற்றுக் கொள்கிறார். குரு பரிகாரத்துக்கு அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இது.

4. சுகபுரம் :

குரு பகவான் தட்சிணாமூர்த்தி மூலவராகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருத்தலம். தட்சிணாமூர்த்தி கடவுகளுக்கான தனிக்கோவில். 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை இங்குள்ள தட்சிணாமூர்த்தி மீது தான் இயற்றினார். அகப்பிரும்மரிஷி தவம் செய்த இடம்.

இத்திருத்தலம் மத்திய கேரளத்தில், மலைப்புறம் மாவட்டத்தில், பொன்னானியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் கிழக்கே இந்த சுகபுரம் என்னும் ஊர் இருக்கிறது. குரு பரிகாரத்துக்கு மிகவும் சிறப்புடைய அற்புதமான திருத்தலம் இது.

5. திருவலிதாயம் (பாடி ):

சென்னை பாடியில் திருவலிதாயம் உள்ளது. டி.வி.எஸ்.லூகாஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, எதிரில் போகும் பாதையில் சென்றால் கோவிலை அடையலாம். குரு பகவான் வழிபட்ட தலம் இது. இறைவன் பெயர் - வல்லீஸ்வரர், அம்பாள் பெயர் - ஜக தாம்பாள்.

குருயோகம் நீச்சமாக இருப்பவர்கள், வியாழக்கிழமைகளில் இத்திருத்தலத்தில் தனி சன்னதியில் எழுந்தளியிருக்கும் குருபகவானுக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபடலாம். சென்னை வாழ் மக்களுக்கு இது ஒரு சிறந்த குரு பரிகாரத் திருத்தலமாகும். இத்தலத்து தீர்த்தமாகிய பரத்வாஜ தீர்த்த கிணற்று நீருடன் கங்கை நீரை சேர்த்து, குரு ஓரையில் 48 நாள் பருகி வர இந்திரியக் கோளாறுகள் நீங்கும்.

6. திருலோக்கி :

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு திருவிசைப்பாத் திருத்தலம் இது. திருப்பனந்தாளிலிருந்து ஆடுதுறை செல்லும் சாலையில் 3 கி.மீ தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. குரு பகவான் வழிபட்ட திருத்தலம். ரிஷபத்தின் மீது சுவாமியும், அம்பாளும் வீற்றிருக்கும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அற்புதச் சிற்பம் உள்ள திருத்தலம் இது.

7. ஓமாம் புலியூர் :

சிதம்பரத்திலிருந்தும், காட்டு மன்னார் குடியிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த திருத்தலம். இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகச் சிறப்புடையவர். உபதேசம் செய்து தட்சிணாமூர்த்தி, கோவிலுக்குள்ளேயே மூலமூர்த்தியாக உயர்ந்த பீடத்தில் சிலை வடிவில் காட்சி தருகின்றார். இங்குள்ள தட்சிணா மூர்த்தி பகவானை வழிபட்டால் குரு கிரக நிவர்த்தி ஏற்படும்.

8. கும்பகோணம் சோமேசர் திருக்கோவில் :

கும்பகோணம், பொற்றாமரைக் குளத்தின் கிழ்க்கரையில் உள்ள கோவில் இது. குருபகவான் வழிபட்ட திருத்தலம், குரு பரிகாரத்துக்கு ஏற்ற சிவ திருத்தலம் இது. கும்பகோணத்தில் உள்ள வியாழ சோமேசரை வழிபடுதலும் சிறந்த குருபரிகாரமாக அமையும்.

9. மயிலாடுதுறை :

இங்குள்ள மயூரநாதர் கோவில் குருபகவான் வழிபட்ட திருத்தலம் ஆகும். இங்கு காவிரிக்கு வடகரையில் உத்தரமாயூரம் எனப்படும் வள்ளலார் கோவிலில் மேதா தட்சிணாமூர்த்தி ரிஷப தேவருக்கு உப தேசிக்கும் மூர்த்தியாக, யோகாசனத்தில் அமர்ந்து ஞான முத்திரையுடன் காட்சி தருகிறார். இந்த இரு தலங்களையும் வழிபட்டு குரு பகவானின் அருளைப் பெறலாம்.

10. தேவூர் :

திருத்துறைப்பூண்டியில் இருந்து கீவளூர் செல்லும் பாதையில் உள்ளது. குருபகவான் வழிபட்ட திருத்தலம். இங்கு குருபகவானுக்குத் தனிச் சன்னிதி உண்டு. இறைவனுக்கு தேவகுருநாதன் என்று பெயர். அவசியம் தரிசிக்க வேண்டிய குருபகவானுக்குரிய திருக்கோவில் இது. குருபரிகாரம் செய்ய மிகச் சிறந்த தலம் இது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum