Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சூரிய பகவான் அருளும் ஆலயங்கள்

Go down

சூரிய பகவான் அருளும் ஆலயங்கள் Empty சூரிய பகவான் அருளும் ஆலயங்கள்

Post by oviya Tue Dec 23, 2014 1:53 pm

நவக்கிரகங்களின் நாயகனாக இருப்பவர் சூரியன். இவர் மற்ற கிரகங்களுக்குச் சக்தியை அளிக்கும் வல்லமை பெற்றவர். பரந்த வானவெளி வீதியில் ஏழு குதிரைகள் பூட்டி சுவர்ணமயமான ரதத்தில் பவனி வரும் இவர், பித்ருக்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தம், திதி ஆகியவற்றின் பலன்களை நம்மிடமிருந்து பெற்று பித்ரு தேவதைகளின் மூலம் மறைந்த நமது மூதாதையர்களிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பினை ஏற்றுள்ளார்.

இதனால் சூரியன் ஜாதகத்தின் பித்ருகாரகன் ஆவார். எனவே தினமும் நீராடியவுடன் கிழக்கு திசையை நோக்கிச் சூரிய பகவானை நமஸ்கரிப்பது அவசியமாகும். புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வது சூரியனுக்கு உகந்தது. அதோடு சூரிய கிரக அம்சம் உள்ள கோவில்களுக்கும் சென்று வரலாம். அந்த கோவில்கள் வருமாறு:-

சூரியனார் கோவில் :

சூரியபகவான் உங்கள் ஜாதகத்தில் பகை, நீசம் பெற்று இருந்தாலும், நீசம் பெற்று 3, 6, 8, 12-ல் மறைவு பெற்று இருந்தாலும் சூரிய திசை மற்றும் சூரிய புத்தி காலங்களில் தீயபலன்களை ஏற்படுத்தும் மேலும் கண்பார்வை மங்கல், பித்த நோய், எலும்புகள் பலம் இழப்பு, இருதயத்துடிப்பு, காய்ச்சல், தலைவலி, ரத்தசோகை, முன் கோபம், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சூரியனால் ஏற்படுபவை.

இவற்றை சூரிய வழிபாட்டால் போக்கிக் கொள்ளலாம். 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், தேதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டினால் ஒன்று வரும் நபர்களும், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் என்னும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், சூரிய திசை, சூரியபுத்தி நடப்பவர்களும் அவசியம் சூரியனார் கோவில் சென்று பரிகார வழிபாடு செய்தாக வேண்டும்.

மேலும் தேக ஆரோக்கியம், ஐசுவரியம், புத்திரபாக்கியம், நீண்ட ஆயுள், சுகம் அனைத்தையும் சூரிய வழிபாட்டால் பெறலாம். பொதுவாக எல்லோருமே ஒரு முறை சூரியனார் கோவில் சென்று தரிசிப்பதே சிறந்தது.

சூரிய பகவான் வழிபட்ட திருத்தலங்கள் :

திருத்தளூர் : பண்ருட்டியில் இருந்து புதுப்பேட்டை வழியாக அரசூர் செல்லும் சாலையில் 10 கி.மீ. சென்று மீண்டும் கரும்பூர் சாலையில் திரும்பி 5 கி.மீ. சென்றால் திருத்தளூரை அடையலாம். சூரியபகவான் வழிபட்ட திருத்தலம். சூரிய பகவான் ஆண்டு தோறும் சித்திரை 7, 8, 9-ந்தேதிகளில் தனது சூரிய ஒளிக்கதிர்களால் இறைவனைப் பூஜை செய்கிறார். இதுவும் சூரிய பரிகாரம் செய்ய ஏற்ற ஒரு திருத்தலமாகும்.

திருமாந்துறை : :

லால்குடிக்குப் பக்கத்தில் உள்ளது இத்தலம். இது சூரிய பகவான் வழிபட்ட திருத்தலம். இங்கு பங்குனி மாதம் 1, 2, 3-ந்தேதிகளில் காலை 6 மணி முதல் 6.30 மணி வரை சூரிய பகவான் தனது கதிர் ஒளியால் இறைவனைப் பூஜை செய்கிறார்.

திருப்பாலத்துறை :

திருச்சி மெயின்கார்டு கேட்டில் இருந்து திருவானைக்கா வழியாகக் கல்லணை செல்லும்நகரப் பஸ்சில் பனையபுரம் என்ற இடத்தில் இறங்கி, கொள்ளிடம் நோக்கி வந்தால் இந்த திருத்தலத்தை அடையலாம். சூரிய பகவான் வழிபட்ட தலம். வருடம் தோறும் புரட்டாசி 8-ந்தேதியும், பங்குனி 8-ந்தேதியும் சூரிய பகவான் தனது ஒளிக்கதிர்களால் இறைவனை ஆராதனை செய்கிறார்.

திருவாடானை :

காரைக்குடியிலிருந்தும், தேவக்கோட்டையில் இருந்தும் இத்திருத்தலத்தை அடையலாம். சூரியபகவான் நீல நிற ரத்தினத்தால் இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை உருவமாகச் செய்து வழிபட்ட திருத்தலம்.

திருப்புன்கூர் :

வைத்தீஸ்வரன் கோவிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் உள்ளது. சூரியன் வழிபட்ட லிங்கம் இத்திருக்கோவிலில் உள்ளது.

பொன்னூர் :

மயிலாடுதுறையிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது. சூரியபகவான் வழிபட்ட தலம். இத்தலத்திற்குப் `பாஸ்கர சேத்திரம்' என்ற பெயரும் உண்டு.
மேலும் சூரிய பகவானின் அதிதேவதையான அக்னி பகவானும் வழிபட்ட திருத்தலம். எனவே இங்கு சூரிய பகவானுக்கும், அக்னி பகவானுக்கும் பரிகார அபிஷேக, ஆராதனை செய்வதற்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.

பந்தநல்லூர் :

மயிலாடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பாதையில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. சூரியபகவான் வழிபட்ட தலம்.

திருப்பனந்தாள் :

கும்பகோணத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் பஸ் வசதி உள்ளது. சூரியபகவான் வழிபட்டதலம். மார்ச் மாதத்திலும், செப்டம்பர் மாதத்திலும் சூரியபகவான் தனது சூரிய ஒளிக்கதிர்களால் இறைவனைப் பூஜை செய்கிறார்.

திருக்காட்டுப்பள்ளி :

திருவையாற்றில் இருந்து கல்லணை செல்லும் பாதையில் உள்ளது. சூரியபகவான் வழிபட்ட தலம். மேலும் சூரிய பகவானின் அதிதேவதையான அக்னி வழிபட்ட தலமாக இருப்பதால், சூரிய பரிகாரத்துக்குச் சிறந்த ஒரு தலமாக இது விளங்குகிறது.

திருப்பந்துருத்தி :

கண்டியூரிலிருந்து திருக்காட்டுப் பள்ளிக்கு செல்லும் பாதையில் உள்ளது. திருவையாற்றில் இருந்தும் செல்லலாம். சூரிய பகவான் வழிபட்ட தலம்.

திருச்சோற்றுத்துறை :

இத்தலத்திற்குத் திருவையாற்றிலிருந்து செல்லலாம். சூரிய பகவான் வழிபட்ட தலம். வருடம் தோறும் சூரிய பகவான் சித்திரை 13, 14, 15-ந்தேதிகளில் தனது ஒளிக்கதிர்களால் இறைவனைப் பூஜை செய்கிறார்.

கும்பகோணம் நாகேசுவரர் திருக்கோவில் :

கும்பகோணத்தின் கீழ்த்திசையில் அமைந்துள்ள கோவில் இது. சூரியபகவான் வழிபட்ட திருத்தலம். சூரிய பகவானுக்குத் தனிக்கோவில் உள்ளது. வருடம் தோறும் சித்திரை 11, 12, 13-ந்தேதிகளில் சூரிய கிரகணம் இறைவன் மீது படுகிறது. இந்த சூரிய பூஜை இங்கு மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum