Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சிறுபான்மையினர் தென்னிலங்கை பேரினவாதிகளுக்கு தீனிப்போடாதவாறு செயற்படவேண்டும்: துரைராஜசிங்கம்

Go down

சிறுபான்மையினர் தென்னிலங்கை பேரினவாதிகளுக்கு தீனிப்போடாதவாறு செயற்படவேண்டும்: துரைராஜசிங்கம் Empty சிறுபான்மையினர் தென்னிலங்கை பேரினவாதிகளுக்கு தீனிப்போடாதவாறு செயற்படவேண்டும்: துரைராஜசிங்கம்

Post by oviya Sun Apr 26, 2015 12:52 pm

புதிய ஆட்சியில் சிறுபான்மையினர், தமது அரசியல் நகர்வுகளை தென் இலங்கையில் இருக்கின்ற பேரினவாதிகளுக்கு தீனிபோடாத வகையில் முன்னெடுக்க வேண்டும் என கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,எதிர்கட்சித் தலைவர் விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணி போன்ற சிங்கள கட்சிகள் எங்களுடைய நியாயங்களை உணர்ந்து பகிரங்கமாக குரல் கொடுக்கக் கூடிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

“தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுள்ளது. கிடைத்துள்ள பதவிகளினால் நாங்கள் எல்லாவற்றையும் மறந்து உங்களுக்கு அபிவிருத்தி ஜால்ரா வாசிப்போம் என்று ஆட்சியாளர்கள் உட்பட எவரும் நினைக்கக் கூடாது.

“மழைக்கால் இருட்டு என்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது” என்பது எங்களுடைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு என்றுமே மறவாத ஒரு பாடம்.

ஏனென்றால் இன்று ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமான விடயமாகக் காணப்பட்டாலும் எங்களுடைய இலக்கை நாங்கள் எந்த விதத்திலும் மாற்றிக் கொள்ள மாட்டோம்.

மத்தியிலே கூட்டாட்சி,மாநிலத்தில் சுயாட்சி என்கின்ற இலக்கிலே தான் எங்களுடைய தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கின்றது.

இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தில் சுயநிர்ணய உரிமை தொடர்பான வேலைத் திட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் அதற்கான சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது தான் எமது முக்கியமான செயற்பாடாக காண்படுகிறது. அதன் காரணமாகவே வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மிகப்பெரும் இடராக இருந்த இராணுவ ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள்.

அதன் பின்பு மாகாணத்திலே சிவில் நிர்வாகம் செயற்படத் தொடங்கியிருக்கின்றது. இராணுவ முகாம்கள் மெல்ல மெல்லமாக நீக்கப்பட்டு , மக்கள் குடியிருப்புக்கள் அங்குல அங்குலமாக மீட்கப்பட்டுக் கொண்டிருகின்றன.

அரசியல் தொடர்பான பல்வேறு விடயங்கள் மத்தியிலே இருக்கின்ற தேசிய நிர்வாக சபை மூலம் செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருகின்றன.

எங்களுடைய தலைவரும் அவர்களுடன் இணைந்து தேசிய நிர்வாக சபையிலே பல்வேறு நிகழ்வுகளை நகர்த்திக் கொண்டிருகிறார்.

ஆட்சி மாற்றம் வந்தவுடன் மிகப்பெரியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நாம் என்ற அவாவில் இருக்க வேண்டிய சந்தர்ப்பம் இதுவல்ல.

இந்த சந்தரப்பங்களிலே மிகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் நடந்து கொண்டு பேரினவாத சக்திகள் தலையெடுத்து இந்த சுகமான சூழ்நிலையை குழப்பாத வகையில் எமது செயற்பாடுகளை நகர்த்திச் செல்ல வேண்டிய அவசியம் தற்போது இருக்கின்றது.

எங்கு மிதவாதத் தன்மை நின்றுவிடுகின்றதோ அங்கு தீவிரவாதம் தலையெடுக்கக் கூடிய சந்தர்ப்பமும் எங்களுடைய வரலாற்றுக் காலங்களிலெல்லாம் நாங்கள் கண்டிருக்கின்றோம்.

பல்வேறு சமாதான காலங்கள் எங்களுடைய வரலாற்றிலே வந்திருகின்றன.ஆனால் அந்த சமாதான காலங்களில் எல்லாம் பல்வேறு காரியங்கள் சாத்தியமாகியிருக்கின்றன.

ஆனால் திடீரென சமாதானம் குழம்புவதும் மீண்டும் பேரினவாத சக்தி தலையொடுப்பதும், எமது அபிலாசைகள் எல்லாம் மண் மூடிப் போவதும் வரலாற்றில் கண்டிருக்கின்றோம்.

ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் முன்பு ஏற்பட்ட சமாதானங்களிலிருந்து மாறுபட்ட சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. தேசிய கீதத்தை தமிழிலே பாடுவது கூட சிலருக்குப் பொறுக்கவில்லை. அதைப்பற்றி வாதாடுவதற்கு தயாராக உள்ளனர்.

ஆனால் கல்முனைக்கு வந்த மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்கள் சிங்களத்திலே தேசிய கீதம் பாடப்பட்டதைத் தொடர்ந்து உரையாற்றிய போது நான் இந்த செயலுக்காக வருந்துகிறேன்.

உங்களில் எத்தனை பேருக்கு இந்த சிங்களத்தில் பாடப்பட்ட தேசிய கீதம் விளங்கியிருக்கும். தேசிய கீதத்தை தமிழில் பாடியிருந்தால் உங்கள் எல்லோருக்கும் விளங்கியிருக்கும் அல்லவா? எனவே வடக்கு கிழக்கிலே தமிழிலே தேசிய கீதத்தைப் பாடவேண்டும் என்று ஒரு சிங்கள தலைவர் கூறிச் சென்றுள்ளார்.

அவர்களைப் போன்றவர்களை நாங்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவர்களுடைய கரங்களைப் பலப்படுத்த வேண்டியவர்கள் நாம்.எமது தலைவர் சம்பந்தன் ஐயா எதிர்க்கட்சித் தலைவராக வருவதற்கு குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் சிங்களவர்கள். ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக ஏனைய மலையக கட்சி தலைவர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருகிறார்கள்.

ஜேவிபியினரே எங்களுடைய நியாயத்தை உணர்ந்து தங்களுடைய கருத்தை பகிரங்கமாக கூறக்கூடிய நிலைமை இன்று தென் இலங்கையில் காணப்படுகின்ற விடயத்தை நாம் கவனத்திலே எடுத்துக் கொள்ள வேண்டும். இருக்கின்ற தீவிரவாத சக்திகளுக்கு தீனிபோடாத விதத்திலே நாங்கள் எங்களுடைய விடயங்களை நகர்த்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இந்த நாட்டிலே ஏற்படுகின்ற மாற்றங்கள் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையையும் பாதிக்கும் என்பதனை இதுவரையும் இந்த அரசியல் தலைவர்களும் மக்களும் உணரவில்லை என்றால் அது மகா வெட்கக் கேடாக விருக்கும். இந்த நாட்டிலே இருக்கக்கூடிய சமாதான சக்திகள் நாட்டில் பற்றுள்ள சக்திகள் சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.

இங்கு ஏற்படுகின்ற மாற்றங்கள் நாட்டின் எல்லோரையும் பாதிக்கக் கூடியவை என்ற மனநிலை எல்லோருக்கும் வரவேண்டும். சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள் என்று சிந்திக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டால் அது இந்த நாட்டில் மீண்டும் அரசியல் பிளவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவிருக்கும்.

இவ்வாறு சொல்லுகின்ற பொழுது சிறுபான்மையினராகிய நாங்கள் இந்த சமாதான காலத்திலே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாங்கள் எங்களுடைய உரிமையை என்றும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆட்சி மாற்றங்களில் நாங்கள் மயங்கி விடக் கூடாது நிதானத்துடன் கையாள வேண்டும்.

பதவி போன்றவை எங்களுடைய அறிவை மயக்கிவிட்டு உரிமை விடயங்களை கைவிட்டவர்களாக மாறிவிட மாட்டோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு அபிவிருத்தியை விமர்சித்தவர்கள் அபிவிருத்தி செய்ய வந்து விட்டார்க்ளள் என்று சிலர் நினைக்கக் கூடும்,

ஆனால் நாங்கள் செய்வது சரணாகதி அரசியல் அல்ல நாங்கள் செய்வது தான் உண்மையிலே இணக்க அரசியல் அவர்கள் தங்களை பேரினவாதத்தோடு கதைத்துக் கொண்டு அரசியல் செய்தார்கள் நாங்கள் எங்களுடைய தனித்துவத்தைப் பேணிக்கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கின்றோம்” என தெரிவித்தார்.

ஆறுமுகத்தான்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் எஸ்.நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் பொது அமைப்புகளின் தலைவர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.







மத்திய அரசின் ஸ்தீரமற்ற தன்மையினால்,எமது வாழ்வியலில் மாற்றம் ஏற்பட்டும்: துரைராஜசிங்கம்

தற்போது மத்திய அரசாங்கமும் ஒரு ஸ்தீரம் இல்லாத நிலையில் இருந்துக் கொண்டிருக்கின்றது, அங்கு ஏற்படும் மாற்றங்கள் எமது வாழ்விலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

எமக்கென்று இருக்கும் எமது பலத்தை நாம் இனிவரும் காலத்தில் பலப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி, கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கங்குவேலி புளியடிசோலை விவசாய சம்மேள கட்டிட திறப்பு விழா விவசாய சம்மேளனத்தின் தலைவர் எஸ்.செல்வராஜன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஜனார்த்தனன், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.தமிழ்ச்செல்வன், எஸ்.மோகன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூதூர் தொகுதிக் கிளைச் செயலாளர் எஸ்.தர்சன், சேருவில நீர்ப்பாசன திணைக்கள அதிகாரி ஜனாப்.எஸ்.முபீஸ் ஆகியோருடன், சம்மேளனத்தின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்கள், ஊர்ப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்! இதுவரையில் துன்பங்கள் தான் வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து தமிழ் மக்களின் வரலாறாக இருக்கின்றது. ஜனவரி மாதம் 08ம் திகதி இடம்பெற்ற புரட்சியில் மாற்றம் நிகழுமா என்பதில் ஒருவாறு நம்பிக்கை இல்லாமல் இருந்தோம் ஏனெனில் கடந்த முறையும் அவ்வாறு தான் ஒரு நம்பிக்கை நீர்க்குமிழ் போல் மறைந்தது.

அது போலவே இம்முறையும் நிகழும் என நினைத்த வேளையில் எமக்கெல்லாம் நல்ல காலம் பிறந்தது போன்று இந்த ஆட்சி மாற்றம் இடம்பெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது பங்கினை வகித்து மத்தியில் எதுவித பதவிகளும் எடுக்காது விட்டாலும் எமது கிழக்கு மாகாண ஆட்சியில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றோம்.

தற்போதைய நிலையில் நாம் கடந்து வந்த எமது 65 வருட போராட்ட காலத்தில் நாம் எமக்கு கிடைத்த சாதகத்தைப் பயன்படுத்தி இருக்கின்றோமா இல்லை நலுவ விட்டிருக்கின்றோமா என்பதை சிந்தித்து நிதானமாகச் சென்று எமது அடுத்த கட்டத்தை நகர்த்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அவ்வாறான அடுத்த கட்டத்தினை ஸ்திரப்படுத்துவது தான் எமது விடிவுக்கு வழிகோலும். இந்த விடயத்தில் நாம் உணர்வோடும் ஒற்றுமையோடும் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் உள்ளே இருந்து ஓட்டை போட்டு கப்பலைக் கவித்து கதை பேசியவர்களெல்லாம் தற்போது ஓரம் கட்டப்பட்டு விட்டார்கள்.

அவர்கள் இருக்கும் போது தான் ஒரு நிழற் பயங்கரவாதம் இருந்தது. அந்த நிலை தற்போது சற்று மாறிவிட்டது. இப்போது இருக்கின்ற நிலை இன்னும் தொடர வேண்டும் ஒருவர் பற்றி பின்பற்ற வேண்டும் என்றால் அவர்களின் வரலாறு பற்றி பார்க்க வேண்டும். இந்த விடயத்தில் எமது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் இழந்து வலிந்து நலிந்து கிடப்பவர்கள் எமது பிரதேசங்களைக் கட்டியெழுப்ப வேண்டியவர்கள் இது சாதாரண விடயம் அல்ல இதற்கு எம்மிடம் இருக்கும் அதிகாரமும் போதுமானதல்ல. நாம் இப்போது மட்டுல்ல எப்போதும் எமது மக்களுடனேயே இருக்கின்றோம்.

எமக்கு தற்போது கிடைத்திருக்கும் இந்த உரிமத்தை வைத்துக் கொண்டு எமது மக்களுக்கு எங்கிருந்து எவற்றைக் கொண்டு வரமுடியுமோ அவற்றுக்காக தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். தற்போது மத்திய அரசாங்கமும் ஒரு ஸ்திரம் இல்லாத நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது.

அங்கு ஏற்படும் மாற்றங்கள் எமது வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எமெக்கென்று இருக்கும் எமது பலத்தை நாம் இனிவரும் காலத்தில் ஸ்திரப்படுத்த வேண்டும். புலம்பெயர் அமைப்புகளும் எமக்கு உதவுவதற்கு தயாராகவே இருப்பார்கள் இதற்கெல்லாம் தேவை எமது ஒற்றுமை பலம் அது போல் தற்போது இருப்பது போல தேசிய அரசாங்கம் அமைகின்ற போதே அந்நிலை ஏற்படும்.

இதற்கு எமது மக்கள் ஒற்றுமைப்பட்டு எம்முடன் உறுதியாக செயற்படவேண்டும். தற்போது எங்கோ மறைந்து கிடந்தவர்கள் எல்லாம் தலையை எட்டிப் பார்க்கும் நிலை தோன்றியுள்ளது.

அவர்களையெல்லாம் அப்படியே ஓரம் தள்ளிவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எமது மக்கள் நிற்க வேண்டும். நாம் மிகப்பெரிய மனித வேள்வியைச் செய்த இனம் இதனை மனதில் நிறுத்தி எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்.

முன்பு இருந்த ஆட்சி எமது வடமாகாணத்தை நிமிர விடாமல் ஆதிக்கத்துக்குள் வைத்திருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான நிலை இல்லை வடக்கு மாகாணத்துடன் சேர்த்து தற்போது நாம் ஆட்சிப்பொறுப்பு பெற்றுள்ள கிழக்கு மாகாணமும் நிமிரக் கூடிய நிலை சற்று உள்ளது.

போராட்டத்தினால் சாதிக்காததை எமது புள்ளடிகளினால் சாதித்திருக்கின்றோம். அமைதியாக எமது உரிமையை அதிகாரத்தைப் பயன்படுத்தி மிகப்பெரிய ஏகாதிபத்தியத்தை வீழ்த்தியிருக்கின்றோம்.

எமது மக்களின் பிரச்சினைகள் எமக்கு தெரிந்தவைகளே நாம் வேறு எங்கோ இருந்து குதித்தவர்கள் அல்ல இவற்றை நாம் முழுமையான சாத்வீகத்தைக் கடைப்பிடித்து எமது பெரும்பாண்மை மக்களை சகோதரர்களாக நினைத்து அவர்களை உசுப்பி விடாத வண்ணம் செயற்பாடுகளை மேற்கொண்டு எமது விடயங்களை ஒவ்வொன்றாக வென்றெடுக்க வேண்டும்.

அவ்வாறான செயற்பாட்டினையே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையும் மேற்கொண்டு வருகின்றது என்று தெரிவித்தார்.

இதன் போது சம்மேளனத்திற்கென புதிதாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடத் தொகுதி அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன், அதிதிகளின் சிறப்புரைகளும் இடம்பெற்றதுடன், தென்னை மர கன்றினை விவசாய அமைச்சர் நாட்டி வைத்தார்.

பின்னர் அமைச்சர் பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற அகத்தியர் ஸ்தாபனம் சிவன் ஆலயத்தினையும் சென்று பார்வையிட்டதுடன், பெரும்பான்மையின மக்களினால் அத்துமீறி பிடித்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் விவசாயிகளின் படுகாடு விவசாய நிலங்களையும் நேரில் சென்று பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum