Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மைத்திரி, அத்துரலிய தேரர் மற்றும் சோபித்த தேரர் இணைந்து புதிய கூட்டணி

Go down

மைத்திரி, அத்துரலிய தேரர் மற்றும் சோபித்த தேரர் இணைந்து புதிய கூட்டணி Empty மைத்திரி, அத்துரலிய தேரர் மற்றும் சோபித்த தேரர் இணைந்து புதிய கூட்டணி

Post by oviya Sat Apr 25, 2015 11:36 am

நாட்டின் எதிர்கால அரசியல் சவால்களை வெற்றிக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாதுலுவாவே சோபித்த தேரர், அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோர் இணைந்து புதிய தேசியக் கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மகா சங்கத்தினர் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சி, சிவில் சமூக அமைப்பு மற்றும் வெகுஜன அமைப்புக்களை ஒன்றிணைத்துக்கொண்டு இக்கூட்டணி உருவாக்கப்படவுள்ளது.

இக்கூட்டணியைக் கட்டியெழுப்பும் நோக்கில், இதன் முதல் கட்டமாக பிரதிநிதிகள் பேரணி கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவில் கடந்த புதன் கிழமை இடம்பெற்றுள்ளது.

“நாட்டை ஒன்றிணைக்கும் சுதந்திர யுகம்” என்ற தொனிப்பொருளில் புதிய கூட்டணியினால் நாடு பூராகவும் அரசியல் கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் சொற்பொழிவுகள் என்பன ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார சீர்த்திருத்தங்கள் போன்று ஜனநாயகத்தை நிலைநாட்டும் வலுவான அரசியலமைப்பை கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்.

கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பேரணியில் மாதுலுவாவே சோபித்த தேரர், அத்துரலிய ரத்தன தேரர் மற்றும் தமிழ் அரசியல் கட்சியின் சிவில் சமூக அமைப்பு மற்றும் அதன் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum