Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விநாயகர் சதுர்த்தி சிறப்பு கோவில் தகவல்கள்

Go down

விநாயகர் சதுர்த்தி சிறப்பு கோவில் தகவல்கள்         Empty விநாயகர் சதுர்த்தி சிறப்பு கோவில் தகவல்கள்

Post by oviya Sat Apr 11, 2015 2:53 pm


* சென்னை அருகிலுள்ள காரனோடை (கோல்கட்டா ரோட்டில் 27கி.மீ.) பாலத்தை அடுத்திருக்கும் தலம் பஞ்சேஷ்டி. இங்கிருந்து மேற்கே 2 கி.மீ., தூரத்தில் உள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோயில். இங்குள்ள காரியசித்தி கணபதி பீடம் குறுகலாக ஆரம்பித்து, இடையில் அகன்றும், நுனிப்பகுதி கூர்மையாகவும் தாமரை மொட்டுப் போல வித்தியாசமாக இருக்கிறது.
* சித்தூர் அருகிலுள்ள காணிப்பாக்கம் நிஜரூப சுயம்பு விநாயகர் சக்தி மிக்கவராக விளங்குகிறார்.
வழக்குகளில் நியாயமான தீர்ப்பு கிடைக்க இவருக்கு பூஜை செய்கின்றனர்.
* பெங்களூரு மல்லேஸ்வரம் 8வது கிராஸில் இருக்கும் விநாயகர் திருமணயோகம் அளிப்பதில் சக்தி மிக்கவராகத் திகழ்கிறார். இவருக்கு சோமாஸி என்னும் கர்ஜிக்காய் மாலை சாத்தி வழிபட திருமணத்தடை விரைவில் நீங்கும்.
* முருகப்பெருமானின் நான்காம் படைவீடான சுவாமிமலை அடிவாரத்தில் கண் கொடுத்த விநாயகர்
வீற்றிருக்கிறார். இவரை வழிபட கண் தொடர்பான நோய்கள் நீங்குவதோடு, வயதான காலத்திலும்
பார்வைக் குறைபாடு உண்டாகாது என பக்தர்கள் நம்புகின்றனர்.
* பிள்ளையாருக்கு புதன் கிழமையில் அருகம்புல் சாத்தி வழிபடுவது நல்லது. தொடர்ந்து 9 புதன்கிழமையில் வழிபாட்டை மேற்கொண்டபின், இயன்ற அளவு ஏழைக்குழந்தைகளுக்கு நோட்டு
உள்ளிட்ட கல்வி உபகரணங்களை தானம் அளித்தால் ஞாபகசக்தி அதிகரித்து பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவர்.
* விநாயகரின் விசேஷமான பெயர்கள் 16. இதில் பதினாறாவது பெயர் "ஸ்கந்த பூர்வஜர்'. தன் தம்பிக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், "கந்தனுக்கு மூத்தவர்' என்னும் பொருளில் விநாயகர் இவ்வாறு அழைக்கப்படுகிறார். அம்மா, அப்பா, மாமா என பல உறவுகள் இருந்தாலும், தம்பியால் குறிக்கப்படும் இப்பெயர், அவரின் அன்பை வெளிப்படுத்துகிறது.
* தர்மம் தலை காக்கும் என்பர். ஆனால், விநாயகரின் தந்தம் தர்மத்தைக் காத்து நிற்கிறது. தன்அழகிய தந்தத்தை உடைத்து அதை எழுத்தாணியாக்கி வியாசரின் பாரதத்தை எழுதினார். தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக, கடவுள் நிலையில் இருந்து இறங்கி, ஒரு குமாஸ்தா போல, வியாசரின்
உதவியாளராக இருந்து எழுதிய விதம் அவரது பெருந் தன்மையைக் காட்டுகிறது.
* தொந்தி கணபதியை வடமொழியில் "டுண்டி' என்பர். காசியில்உள்ள டுண்டி ராஜ கணபதி பிரசித்தமானவர். இதே பெயரில் ராமநாதபுரம் தொண்டியில் விநாயகர் கோயில் உள்ளது. ராமர் இங்கு வந்து வழிபட்டார்.
* புனே மார்க்கெட் பகுதியிலுள்ள "தகடுஸேட் கணபதி', கோயிலில், பக்தர்கள் பொரி மற்றும் தீர்த்தத்தை தாங்களே எடுத்துக் கொள்ளலாம். இப்பகுதியில் வணிக நிறுவனங்கள் நடத்துவோர் லாபத்தில் ஒரு பகுதியை தகடுஸேட் கணபதிக்கு காணிக்கையாக அளிக்கின்றனர்.
* மும்பை டிட்வாலா மகாகணபதியின் கண்களிலும், நாபியிலும் (தொப்புள்) வைரக் கற்கள் ஜொலிக்கும்.
உயிரோட்டத்துடன் காட்சி தரும் இவர் நாக பந்த பீடத்தில் அமர்ந்து, தன்னை நாடி வருவோருக்கு வளம் தருகிறார்.
* மும்பை சித்திவிநாயகர் கோயிலில், செவ்வாய்க்கிழமைகளில் பிள்ளையாரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். வேலை தேடுபவர்கள் நல்ல பணி கிடைக்க வேண்டிக் கொள்வர். முதல் மாத சம்பளம் பெற்றதும், சித்திவிநாயகருக்கு விசேஷ பூஜை செய்வர்.
* பிள்ளையாருக்கு புதன்கிழமையில் அருகம்புல் சாத்தி வழிபடுவது நல்லது. தொடர்ந்து 9 புதன்கிழமையில் வழிபாட்டை மேற்கொண்டபின், இயன்ற அளவு ஏழைக் குழந்தைகளுக்கு நோட்டு
உள்ளிட்ட கல்வி உபகரணம் தானம் அளித்தால் ஞாபகசக்தி அதிகரித்து பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவர்.
* ஞானசம்பந்தர் திருமருகல் (நாகப்பட்டினம் மாவட்டம்) என்ற ஊரிலுள்ள மாணிக்க வண்ணரை வழிபட வந்தபோது, திருமணம் நடக்க இருந்த மாப்பிள்ளையை பாம்பு தீண்டி இறந்த விஷயத்தை அறிந்தார். சிவன் மீது பதிகம் பாடி உயிர்ப்பித்தார். இத்தலத்தின் தெற்கு வீதியில் கோபுர வாசலுக்கு எதிராக விடம் தீர்த்த விநாயகரை வழிபட்டவருக்கு, விஷக்கடி தொடர்பான நோய்கள் நீங்கும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum