Top posting users this month
No user |
குமார் குணரட்னத்தை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை
Page 1 of 1

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னத்தை கைது செய்ய விரிவான தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குணரட்னம் தங்கியிருந்த இடத்தை விட்டு தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குமார் குணரட்னத்தை கைது செய்து ஒப்படைக்குமாறு பொலிஸாரிடம் கோரியுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குமார் குணரட்னம் தங்கியிருந்த பன்னிப்பிட்டிய மற்றும் கேகாலை ஆகிய இடங்களில் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய போதிலும் அந்த இடங்களில் அவர் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குமார் குணரட்னத்தின் அவுஸ்திரேலிய கடவுச்சீட்டு தற்போது தம் கைவசம் இருப்பதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குமார் குணரட்னத்தை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடியுரிமையை கோருவதற்கோ அல்லது வீசா காலம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் தங்கியிருப்பதற்கோ குமார் குணரட்னத்திற்கு உரிமை கிடையாது என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum