Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பொசுங்கும் செயல் அறவே கூடாது

Go down

பொசுங்கும்  செயல் அறவே கூடாது  Empty பொசுங்கும் செயல் அறவே கூடாது

Post by ram1994 Tue Jan 13, 2015 6:50 pm

நெருப்பில் முடி பொசுங்க கூடாது அதுவும் வீட்டினுள் நெருப்பில் தெரிந்தோ தெரியாமலோ வெட்டப்பட்ட உதிர்ந்த முடியானாலும் எரியக்கூடாது மகா தரித்திரம் அப்போதே பிடிக்கும், கைமுடியானாலும். தலைமுடியானாலும். பறவைகள். மிருகங்கள் முடியானாலும். வெட்ட வெட்ட வளரக்கூடியது அதில் ரத்தம் உண்டு, பார்ப்பதற்கு தெரியாது, ஆனால் அது தீயில் பொசுங்கும் போது தெரியும், அதன் வாடையே அதற்கு சாட்சி . ஒரு உயிரை எரிக்கும் போதும். முடியை எரிக்கும்போதும் ஒரே வாசனை (வாடை) வரும், இந்த துர்நாற்றம் லட்சுமி சுத்தத்திற்கு ஏற்றதல்ல அதனால்தான் அக்காலத்திலேயே பிணத்தை எரிப்பதானாலும் ஊரின் மேற்கே (காற்று திசையில்) கொண்டு சென்று எரித்தார்கள், இந்த வாடையை முகர்ந்தவர் யாரானாலும் 16-நாள் தொடர்ந்து தலையுடன் குளித்து வர வேண்டும், இல்லையேல் தரித்திரம் தான் பிடிக்கும், முடியானாலும் இதே நிலைதான், அதுமட்டுமல்ல கருவாடு. இறைச்சி எந்த வீட்டில் தீய்ந்து போகிறதோ அந்த வீடும் வெகுவிரைவில் கீழ்நிலைக்கு வரும், தீப்புண் பட்ட குடும்பமும் தரித்திரத்திற்கு ஆட்பட்டு பின்புதான் மீளும், அதே போல் கொசுவானாலும் வீட்டில் இறக்கலாம், ஆனால் தீய்ந்து போகக்கூடாது, இப்போது நவீனமாக கொசுவை கொள்ள எலக்ட்ரானிக் பேட் வந்துள்ளது இதை பலரும் பயன்படுத்துகிறார்கள், இந்த பேட்டில் கொசு தீய்ந்து போகிறது, குடும்ப சுகமோ செல்வமோ குறைந்து கொண்டே வருவதற்கு இதுதான் காரணம்.

ஓட்டல்களில் ஈ தொல்லை தீர ஒரு நீலவண்ண மின்சார குழல் விளக்கு எரியும் அதன் ஈர்ப்பு ஈ. கொசு. சிறு வண்டுகளை கவரும் அந்த விளக்கை சுற்றி சுற்றி வரும் அதற்காகவே அந்த குழல் (டியூப் லைட்) விளக்கின் பக்க வாட்டில்  மின்சார ஹீட்டர் பொருத்தி இருப்பார்கள், அதில் அகப்பட்டு அனைத்தும் பொசுங்கும் அதை பொருத்தி  இருந்த பல ஓட்டல் உரிமையாளர்கள் அழிந்து போய் இருக்கிறார்கள், அதாவது செல்வமற்று. சுகமற்று. கடன்பட்டு. தொழில் கைமாறி ஓடும் அளவிற்கு தரித்திரம் ஆட்கொண்டதை.

நரிக்குறவர்களை கடந்த காலங்களில் கவனித்தீர்களேயானால் எந்த இறைச்சியாகட்டும் தீயில் பொசுக்கி சாப்பிடுவார்கள், அதனால் அவர்கள் நாடோடி வாழ்க்கையுடன் யாசகம் பெற்றே வயிரையும். உடலையும் வளர்க்க வேண்டியதாயிருந்தது அந்த அளவிற்கு தரித்திரம் ஆட்கொள்ளும் அதே நேரத்தில் இன்றைக்கு அவர்களை பார்த்தீர்களேயானால் இறைச்சியை சுட்டு பொசுக்கி தின்னும் பழக்கத்தை நாட்டு சூழ்நிலையால் விட்டு விட்டார்கள், இப்போதைக்கு அவர்கள் நன்றாகவே வளர்ச்சி கண்டிருக்கிறார்கள், அன்றைக்கு செய்த அதே தொழில்தான் இன்றைக்கும் செய்கிறார்கள், அன்றைக்கு அவர்களுடைய பழக்கம் இறைச்சியை சுட்டு பொசுக்கி தீய்த்து சாப்பிட்டார்கள், தரித்திரம் பிடித்திருந்தது, அதை மாற்றிக் கொண்டு கிடைத்த இறைச்சியை சமைத்து சாப்பிடுகிறார்கள், பெரும் தரித்திரத்தில் இருந்து மீண்டு சாதாரண தரித்திர நிலையில் உள்ளார்கள், இதுதான் வித்தியாசம் . ஆக முடி. நகம். இறகு , உரோமம். சதைகள் தீயில் கருகினால் அது வீடாக இருந்தால் மகா தரித்திரம் பிடிக்கும், காடாக இருந்தாலும் இவைகள் பொசுங்குவதை அடிக்கடி முகரும்படி ஆட்படாதீர்கள் கவனம், சாதாரண சைவ சமையல் செய்யும்போது கூட கடாய் தீயக்கூடாது என்பார்கள், கடாயில் அடியில் தீய்ந்து போனதில் சாப்பாடு சாப்பிடக்கூடாது, தரித்திரம் பிடிக்கும் என்பார்கள், இவைகளெல்லாம் மறுக்க முடியாத உண்மையே .

ஏழைகள் இயல்பாகவே நெருப்பில் முடி பொசுங்குதல் , கடாய் தீய்ந்து போகுதல் போன்ற சூழலில் இயல்பாகவே அகப்படுகிறார்கள் அதன் காரணமே அவர்கள் கடைசி வரை ஏழையாய் இருக்க இதுவும் ஒரு காரணமாகிறது . யாகம் வளர்க்கும் போதும் கூட யாக தீயில் முடியோ. பூச்சிகளோ விழுந்து தீய்ந்து போனால் நிச்சயம் முழு பலன் கிடைப்பதில்லை . சில நேரத்தில் யாகத்திற்கு பின்னால் கடுமையான கஷ்டப்படுவதை சந்திக்க நேரிடும். இது தெரியாமல் நிகழக்கூடிய நிகழ்வானாலும் அதன் துர்நாற்றம் (வாடை) லட்சுமி கடாட்சாரத்தை விலக்கி விடும் .

நம் கையில் உள்ள ரோமத்தில் தீ பட்டு லேசாக முடி பொசுங்கினாலும் உடனே அவ்விடத்தில் மஞ்சள்தூள் குழப்பி பூசி விடவேண்டும், அப்போதுதான் தரித்திரம் பிடிக்காது, எந்த ஒரு தரித்திர தீட்டிற்கும் மஞ்சள் நீர் சிறந்த பரிகாரமாகும் . அசைவம் சாப்பிடுபவர்கள் அக்காலத்திலேயே இதை நன்கு உணர்ந்திருந்தனர், அதனால் கோழியை. பன்றியை இறைச்சியுண்ண கொன்று அதன் ரோமத்தை தீயில் பொசுக்குவார்கள், பொசுக்கிய பின்னர் அந்த தரித்திரம் பாதிக்காதிருக்க மஞ்சள் தூள் அதன் உடல் முழுக்க பூசுவார்கள், பின்னால் வந்தவர்கள் தீய்ச்சல் வாடை போவதற்கு மஞ்சள் பூசுவதாக கருதினார்கள், உண்மையில் அவ்வாரில்லை .


தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் தலையணையோ அதன் உறையிலோ மேற்புரத்தில் எண்ணெய் படிவம் இருக்கும், மற்ற எண்ணெய்க்கும் முடியில் ஊறிய எண்ணெய்க்கும் முகர்ந்து பார்த்தால் வாடையில் வித்தியாசம் தெரியும்,( சிகிடு வாசனை என்பார்கள்) அந்த தலையணையை நெருப்பில் எரிக்கக்கூடாது, பயன்படுத்தியும் பின் பழுதானால் தூக்கி போட்டு விடலாம், ஆனால் நெருப்பில் போடக்கூடாது மகா தரித்திரம் பிடிக்கும் . நம் முடி எண்ணெய் பட்ட எந்த துணியும் எரியவிடக்கூடாது . போகி பண்டிகை அன்று சிலர் பழைய துணி தலையணை இவைகளை எரிப்பதுண்டு அதில் இதுபோல எண்ணெய் துணி எரிந்தால் மகா தரித்திரம் அவரை வந்து அடையும், எனவே கவனமாக இருக்கவும் .


பொசுங்கும்  செயல் அறவே கூடாது  Hair_design_004.w540.

( இக்கட்டுரை  பண்டித சித்தர் சிம்ஹம் மோஹனவேல் குருஜியின்  செல்வ கலை எனும் ஸ்ரீசுபமங்கள சாஸ்த்திர புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது ).

இந்த புத்தகத்தை அவசியம் வாங்கி படிக்கவும்.சிறு சிறு விஷயத்தை தெளிவான விளக்கங்களுடன் எழுத பட்டிருக்கும்.

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum