Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


தூக்கமும் - மூதேவியும்

Go down

தூக்கமும் - மூதேவியும்

Post by ram1994 on Tue Jan 13, 2015 9:17 am

முன்னோர்களும், தானும் செய்த தர்ம பலனால் எத்தனையோ பேர் செல்வந்தர்களாக வாழ்கிறார்கள். அன்னை மகாலட்சுமியின் கருணை பெற்றவரும் சரி செல்வம் படைத்தவர்களாக வாழ்கிறார்கள். இதில் பலர் நிம்மதி இல்லாமல் இருக்க கண்டிருக்கிறேன் லட்சுமியின் அருளை பெற்ற இவர்களுக்கு நிம்மதி ஏன் கிட்டவில்லை என்று ஆய்வு செய்ததில் பலரும் மூதேவியை பழித்தும், மூதேவியின் அருளினால் கிடைக்கும் தூக்கத்தை ஒதுக்கி உழைக்க அந்த நேரத்தை பயன்படுத்தி செல்வத்தை சேர்த்தது தெரிய வந்தது .

இரவில் மூதேவியின் அம்சமான தூக்கத்தை அனுபவித்தால்தான் ஸ்ரீதேவியால் சந்தோஷம் கிடைக்கும் . இல்லையேல் மூதேவி அனைத்தையும் தடுத்துவிடுவாள். மூதேவியை எவராலும் வெல்ல முடியாது . அதற்கென தனியே இறையருளும் பக்குவ உடலும் வேண்டும். சராசரி மனிதனால் முடியாத ஒன்றாகும் . இந்த தூக்கம் உலகத்தில் இறைவனால் அளிக்கப்பட்ட சொர்க்கமாகும். இந்த தூக்கம் இல்லாமல் உலகில் பாதி பேர் வேதனைபடுகிறார்கள்.

மக்கள் ஒரு தவறை செய்கிறார்கள். கஷ்டப்பட்டு வாங்க கூடியது லட்சுமிதேவியின் அருள் ஆனால் கஷ்டமே இல்லாமல் இயற்கையை போல் இதமாக இலவசமாக எம் முயற்சியும் இல்லாமல் கிடைக்க கூடியது மூதேவியின் அருளே. இலவசமாக கிடைக்கக்கூடியவைகளுக்கு மக்கள் பெரும்பாலும் மதிப்பளிப்பதில்லை . அந்த இலவசங்களை எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது . காற்று, வெப்பம், பூமி, ஆகாயம், தண்ணீர், தூக்கம் இவைகளெல்லாம் இலவசமாகவே அனுபவிக்கிறோம். இதில் குறிப்பாக மக்கள் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பானவர் மூதேவி என்றும் வெளிச்சத்துக்கு (சூரியன்) எதிர்ப்பு இருள் (சனி) என்றும் தவறான கருத்து கொள்கிறார்கள். இது பெரும் தவறு . (இதைபற்றி விவரித்தால் பெரும் அத்யாயம் படைக்க வேண்டியதாகிவிடும். எனவே இத்துடன் முடித்து மேலும் தொடர்கிறேன்). எனவே மூதேவியை எதிர்ப்பது யாராக

இருந்தாலும் அவர் அருமையை தெரிந்து கொள்ள ஒரே ஒரு நாள் தூங்காமல் இருந்து பார்த்தால்தெரியும். அவர் அருமை இவரை வெறுப்பதினால் எவ்வளவு செல்வம் இருந்தும் நிம்மதி தூக்கம் இழக்கின்றனர். அன்னை மூதேவியை அரவணைக்கும் போது உடல் செல்வங்கள் காக்கப்படும். மூளை சுறுசுறுப்படையும், மணம் பலப்பெரும். கோபம் தடைபடும், நிதானம் பெருகும், உஷ்ணம் குறையும், கண்கள் பலப்படும், சிந்தனை யோகம் கைகூடும், சக்கராக்கள் சீராகும், மர்ம உறுப்பு பலப்படும் இப்படி அத்தனை உடல் உறுப்புகளுமே தூக்கத்தினால் ஓய்வு பெற்று சக்தி பெறுகிறது . எனவே பகலில் தூங்கினால் தரித்திரம் எனவே இரவில் நேரத்திற்கு உறங்கி விடிய விழித்து லக்ஷ்மி அருள் பெறுவது நல்லது. .

சூரிய வேளையில் தூங்கினால் கர்ம பாவத்துடன் தூக்கமும் பெருகி உழைப்பு பாதிக்கும் என்பதால் பகலில் மூதேவியை அண்டவிடக்கூடாது விரட்டி விடு என்றார்கள். இரவில் உழைப்பே கதி என்று இல்லாமல் உழைத்த உடலுக்கு ஓய்வு கொடு என்றார்கள். இந்த ஓய்வு தூங்குவதால் மட்டுமே கிடைக்கும் என்பதை தெரிந்தும் தூக்கத்திற்கு மதிப்பளிப்பதில்லை பிரச்சனை அங்கேதான் உருவாகிறது . உடல் செல்வம் சரியாக இயங்காத போதும் பொருட்செல்வத்தால் நிம்மதி இருப்பதில்லை . எனவே இரவு வேளையில் பணிமுடித்தபின் அவசியம் தூங்குவது நல்லது. டிவி, நெட், கேம் என பார்த்து ஆர்வ காட்சிகளால் தூக்கத்தை கட்டுபடுத்தி சமாளித்து தூக்கத்தை கெடுத்துக்கொள்கின்றனர். இதனால் மூதேவியின் கோபத்திற்கு மட்டுமல்ல ஸ்ரீதேவியின் அருளை பெறவும் தகுதி இழக்கிறார்கள்.

எனவே தேவையான அளவு தூக்கத்தை அனுபவியுங்கள். பகலில் தூங்காதீர்கள். நல்ல தூக்கத்தில் இறைவனின் தரிசனத்தை காணலாம். நல்ல தூக்கமே விடிவு விழிப்புக்கு உதவி செய்யும். பிரம்ம முகூர்த்தத்தை பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். தூக்கம் இல்லையேல் துக்கங்கொண்டவனாகவோ, வெறிகொண்டவனாகவோ, சந்தோஷத்தை குறுக்கு வழியில் அனுபவிப்பவனாகவோ, தன் துன்பத்திற்கு தானே காரணமாகுபவனாகவோ, நோயுள்ளவனாகவோ தான் ஆகிறார்கள். யோசித்துப் பார்த்தால் இது அனைவரும் அறிந்த உண்மையாகும் . எனவே தூக்கமும் ஒரு செல்வமே எனவே அதனை நேரத்திற்கு அனுபவிக்க முக்கியத்துவம் கொடுங்கள் கட்டாயமாக தள்ளி போடாதீர்கள்.


லட்சுமி அன்னை என்றோ ஒருநாள் தான் அருள் புரிவார்கள். மூதேவி அன்னை தினசரி அருள்புரிவார்கள். மதிப்பவருக்கு நல்ல தூக்கம் கொடுப்பார்கள். மூதேவிக்கும், ஸ்ரீதேவிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ஆத்மா துக்கம் இல்லாமல் இருந்தால்தான் இருவருமே அருள்புரிவார்கள். அவ்வாறு ஆத்மா துக்கமும், துயரமும் கொண்டு நிரம்பி இருந்தால் இருவருமே அருள் புரியமாட்டார்கள் அளந்தபடிதான். எனவே மனதை துயரத்தால் நிரப்ப வேணடாம். துயரத்தை நீக்க வழி தெரியில்லை என்றாலும் தெய்வத்தை நம்பிக்கையாய் வையுங்கள் தன்னால் துயரம் விலகுவதை காண்பீர்கள். இந்த முயற்சி உங்களிடம் தான் உள்ளது. ஸ்ரீதேவி மூதேவி அருளை இனிதே பெறுங்கள். தூக்கத்தை கொன்று மேலும் துக்கத்தை பெறாதீர். எந்நேரமும் தூங்கி சந்தோஷத்தையும் தடை செய்து கொள்ளாதீர்கள். அளவான தூக்கத்தை அன்பான சிந்தனையோடு அனுபவியுங்கள். அதுவே அன்னை மூதேவியின் வழிபாடாகும். மூதேவி அன்னை லட்சுமி கடாட்சர குணத்திற்கு இவர் வழிவிட்டால் தான் உண்டு என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.


ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum