Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


குண்டலினி சற்று விரிவாக

Go down

குண்டலினி சற்று விரிவாக

Post by ram1994 on Thu Dec 11, 2014 8:04 pm

நமது உடலில் "குண்டலினி' எனும் மாபெரும் சக்தி தூங்கிக் கொண்டிருக்கிறது. இது நமது முதுகுத் தண்டின் கீழ்ப்பகுதியில் மூலாதாரச் சக்கரத்தின் அருகில் ஒரு பாம்பு சுருண்டு கிடப்பது போன்று தூக்க நிலையில் இருப்பதாக தந்திர யோக நூல்கள் கூறுகின்றன.

குண்டலினி சக்தியே நமது உடலிலுள்ள "பெண் சக்தி' அல்லது எதிர்சக்தி.  (சங்ஞ்ஹற்ண்ஸ்ங் ஊய்ங்ழ்ஞ்ஹ்). இந்த சக்தி உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல்நோக்கிச் செல்லும் தன்மை கொண்டது.

சக்கரங்கள் இயங்கத் தேவையான சக்தியை குண்டலினியே தருகிறது. குண்டலினி சக்தியை உறங் கிக் கிடக்கும் சக்தி என்று கூறினாலும்கூட, சாதாரண மனிதர்களுக்கும் சிறிய அளவில் குண்டலினி சக்தி பாய்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த சக்தி பாய்வதால்தான் சக்கரங்கள் இயங்குகின்றன.

கடந்த அத்தியாயத்தில் பல தந்திர யோக வழிமுறைகள் குறித்து (உதாரணமாக முத்திரைகள், யோகாசனங்கள், மந்திரங்கள், யந்திரங்கள்) கண்டோம். இந்த வழிமுறைகளில் குண்டலினி சக்தியைத் தட்டி எழுப்பும் போது, தூங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தி மெள்ள மெள்ள எழத்துவங்கும்.


அதிக அளவில் குண்டலினி பாயத் துவங்கும்போது, அதன் அளவிற்கு ஏற்ப சக்கரங்களின் செயல்திறனும் அதிகரிக்கும்.

மூலாதாரத்திலிருந்து மேலெழும் குண்டலினி சக்தி முதலில் மூலாதாரச் சக்கரத்தைத் தூண்டிவிட்டு அதன் செயல்திறனை அதிகரிக்கும். மூலாதாரச் சக்கரம் ஒரு குறிப்பிட்ட அளவிற்குத் தூண்டப்பட்ட பின்னரே குண்டலினி சக்தி அந்த சக்கரத்தைத் தாண்டி அடுத்த சக்கரமான சுவாதிஷ்டானத்திற்குள் நுழையும்.

சுவாதிஷ்டானத்தின் இயக்கம் சீரடைந்து, தூண்டப்பட்டு, ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் அதிகமாக இயங்கத் துவங்கும்போது, குண்டலினி சுவாதிஷ்டானத்திலிருந்து அதற்கு மேலேயுள்ள மணிப்பூரகச் சக்கரத்தைச் சென்றடையும்.

மூலாதாரம், சுவாதிஷ்டானம் ஆகிய இரு சக்கரங்களிலும் குண்டலினியை எளிதாகக் கொண்டு சென்றுவிடலாம். தந்திர யோகத்தில் ஈடுபடும் பலருக்கும் இது எளிதாக நடைபெற்றுவிடும். ஆனால் சுவாதிஷ்டானத்தைத் தாண்டி மணிப்பூரகச் சக்கரத்திற் குள் குண்டலினியைக் கொண்டு செல்வதுதான் சற்றே சிரமமான காரியம்.

குண்டலினி மணிப்பூரகத்தைச் சென்றடையும் வரையில், பல மாதங்கள் அல்லது வருடங்கள் குண்டலினி மூலாதாரத்திற்கும் சுவாதிஷ்டானத்திற்கும் இடையே மேலும் கீழுமாக ஊசலாடிக் கொண்டேயிருக்கும்.

வெகு அரிதாக, சில பயிற்சிகளின்போது குண்டலினி மணிப்பூரகத்தை அடைந்தாலும் உடனே கீழே இறங்கிவிடும்.

தொடர்ந்த பயிற்சிகளின் மூலம் மூலாதாரத்திலிருந்து குண்டலினியை எழுப்பி, சுவாதிஷ்டானத்தையும் கடந்து, மணிப்பூரகச் சக்கரத்தினுள் நிலைகொள்ளச் செய்துவிட்டால் பின்னர் அது கீழே இறங்காது!

மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் கீழ்நிலைச் சக்கரங்கள். (பூமி சார்ந்த சக்கரங்கள்). இவற்றின் ஆளுமையில் இருக்கும்வரை மனிதனின் சிந்தனைகளும் செயல்களும் பூமி சார்ந்தவையாகவே இருக்கும்.

சுவாதிஷ்டானத்தின் ஆளுமையிலிருந்து விடுபட்டு இடைநிலைச் சக்கரமான மணிப்பூரகத்தினுள்  குண்டலினி நுழையும்போது மனிதனின் உணர்வுகளும் சிந்தனையும் மனித நிலையிலிருந்து மேம்பட்ட ஒரு நிலையை அடையும்.

மணிப்பூரகம், அனாஹதம், விஷுதி ஆகிய மூன்று சக்கரங்களும் இடைநிலைச் சக்கரங்களாகும். குண்டலினி மணிப்பூரகத்தை அடைந்த பின்னர் அடுத்ததாக அனா ஹதம், விஷுதி ஆகிய சக்கரங்களுக்குச் செல்லும்.

பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யும்போது குண்டலினி இந்த மூன்று சக்கரங்களுக்கு இடையே மேலும் கீழுமாகச் சென்றுகொண்டிருக்கும். விஷுதியைத் தாண்டிச் செல்ல கடினமான, தொடர்ந்த பயிற்சிகள் தேவையாக இருக்கும்.

விஷுதியைத் தாண்டிச் செல்லும்போதுதான் உயர்நிலைச் சக்கரமான ஆக்ஞை தூண்டப்படும். இந்நிலையில்தான் திரிகால ஞானம், பரமஹம்ச நிலை போன்றவை உருவாகும்.

சக்கரங்களும் உணர்வு நிலைகளும் :-

ஒவ்வொரு சக்கரமும் குறிப்பிட்ட சில உணர்வு நிலைகளோடு இணைக்கப்பட்டுள்ளன. குண்டலினி ஒரு சக்கரத்தினுள் நுழைந்து அதைத் தூண்டும்போது, அந்த சக்கரத்தோடு தொடர்புடைய உணர்வு நிலை களும் தூண்டப்படும்.

ஒரு மனிதன் எத்தகைய உணர்வு நிலையில் இருக்கிறான் என்பதை வைத்தே அவன் எந்த சக்கரத்தின் ஆளுமையில் உள்ளான் என்பதைக் கூறிவிட முடியும்

இது தவிர பருவுடலிலும் சக்தி உடல்களிலும்கூட பல மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றங்கள் சக்கரத்திற்கு சக்கரம் மாறுபடும்.

சித்திகள் :-

குண்டலினி ஒரு சக்கரத்தினுள் நுழைந்து, அதைத் தூண்டித் திறக்கச் செய்யும்போது,

அந்த சக்கரத்தோடு தொடர்புடைய சில சித்திகள் கிடைக்கக் கூடும். ஆனால் சித்திகளைப் பெறுவது தந்திர யோகத்தின் குறிக்கோள்

அல்ல. சித்திகளிலே மதிமயங்கி தங்கிவிடுபவர் களால் ஆன்மிகப் பாதையில் தொடர்ந்து முன்னேற முடியாது. ஆக, சித்திகள் என்பவை உங்களது ஆன்மிகப் பாதையில் போடப்படும் வேகத்தடைகளே.

குண்டலினியும் நாடிகளும் :-

நமது உடலிலுள்ள நாடிகளில் சுழுமுனை, இடகலை, பிங்கலை ஆகிய மூன்று நாடிகளே முதன்மை நாடிகள் எனப்படுகின்றன. குண்டலினி சக்தி மேலே எழும்போது, இந்த மூன்று நாடி களில் ஒரு நாடி வழியாகவே மேலே எழ முடியும்.

ஒவ்வொரு நாடி யிலும் வெவ்வேறு விதமான விளைவுகள் தோன்றும். சுழுமுனை நாடியில் குண்டலினி நுழைந்து மேலே எழும்பினால் மட் டுமே அது சகஸ்ரார சக்கரத்தை அடைந்து, கபாலத்தில் இருக்கும் ஆண் சக்தியான சிவத்துடன் இணைய முடியும். தந்திர யோக மைதுனம் நிகழும்.

பிற இரு நாடிகளும் (இடகலை, பிங்கலை) ஆக்ஞை சக்கரத்துடன் முடிந்துபோகும்.

எனவே இந்த நாடிகளில் ஒன்றின் வழியாக குண்டலினி எழுந்தால் தந்திர யோக மைதுனம் நிகழாது. வேறு வகையான பலன்கள் கிடைக்கும்.

சக்தி- சிவம் இரண்டும் இணைந்து தந்திர யோக மைதுனம் உடலினுள் நிகழும்போதுதான் எல்லையற்ற "பரமானந்த நிலை'யும், அதற்கு அடுத்தபடியான "முக்தி' நிலையும் கிடைக்கும். இதற்கு முறையான, தொடர்ந்த பயிற்சிகள் அவசியம்.

சிலவகை தந்திர யோகிகள் சுழுமுனை நாடியில் குண்டலினி செல்வதைத் தவிர்த்து, இடகலை அல்லது பிங்கலை நாடிகளின் வழியே குண்டலினியை எழுப்புகிறார்கள். இதற்கு தனியான விசேஷ பயிற்சிகள் உள்ளன.

இந்தப் பயிற்சிகள் அனைத்துமே மிக உயர் நிலை பயிற்சிகளாகும். ஒரு குருவிடமிருந்தே நேரடியாக இவற்றைக் கற்றுக்கொள்ள முடியும். சரியான முன் தயாரிப்புகளும், வழிகாட்டுதலும் இன்றி இவற்றில் ஈடுபட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.

தந்திர யோகப் பயிற்சிகள் அனைத்துமே மிகமிக சக்திவாய்ந்தவை. குறிப்பாக குண்டலினியை எழுப்பும் பயிற்சிகள் தீயுடன் விளையாடுவது போன்றது. கவனமாக இல்லை யெனில் சுட்டுவிடும்! ஒரு சிறந்த குருவின் மேற்பார்வையிலேயே இவற்றைத் துவங்க வேண்டும்.

தொடர்ந்த, முறையான பயிற்சிகளின் மூலமே இவற்றை சாதிக்க முடியும். குருவின் ஆசிகளும் இறைவனின் அருளும் வேண்டும்.

தந்திர யோகம் கூறும் சூட்சும உடல் :-

பருவுடல்- சூட்சும உடல் என இரு உடல்கள் நமக்கு உள்ளன. நமது புலன்களால் உணரக்கூடியதே பருவுடல். பருவுடல் குறித்த உண்மை களை மிக நுட்பமாக நவீன விஞ்ஞா னம் ஆராய்ந்துவிட்டது. ஆனால் சூட்சும உடலின் ரகசியங்கள் இன்னமும் விஞ்ஞானத்திற்கு பிடிபடாத ஒன்றாகவே உள்ளது.

விஞ்ஞானத்தால் இதுவரையில் கண்டுபிடிக்க முடியாத சூட்சும உடலின் ரகசியங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "மெய்ஞ்    ஞானத்தால்' நம் முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டனர்.

இந்த மெய்ஞ்ஞான உண்மைகளே தந்திர யோகப் பயிற்சிகள் அனைத் திற்கும் ஆதாரமாக உள்ளன. நீங்கள் தந்திர யோகம் கற்றுக்கொள்ள வேண்டுமானால் முதலில் நமது சூட்சும உடல் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும்.

✷ குண்டலினி சக்தி

✷ சக்கரங்கள்

✷ நாடிகள்

✷ சக்தி உடல்கள்

ஆகியவை குறித்த முழுமையான புரிதல் இருந்தால் மட்டுமே தந்திர யோகப் பயிற்சிகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum