Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வாழ்வில் பயன்படும் சில மந்திரங்கள்

Go down

வாழ்வில் பயன்படும் சில மந்திரங்கள்    Empty வாழ்வில் பயன்படும் சில மந்திரங்கள்

Post by ram1994 Thu Dec 11, 2014 7:44 pm

வினைகள் தீர்க்கும் விநாயகர்

விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து
பொருள் : கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம்.

முதல் தெய்வம் விநாயகர்
எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.

எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும் வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும் நான்கு கரங்களை உடையவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம் என்பது இதன் பொருளாகும்.
காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

ஓம் நமோ நாராயணாய

சிவவாக்கியர் கூறும் மந்திரம் ஓம் நமோ நாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரம், மனதில் நினைத்துக் கொண்டு நூறு உருப்போட்டால் பஞ்சமாபாதகங்கள் செய்திருந்தாலும் அவை பஞ்சுபோல் மறைந்து விடும்.
அஷ்டாக்ஷரம் என்பது எட்டெழுத்தைக் குறிக்கும்.

ஓம் நமோ நாராயணாய
ஓம் என்பது ஓரெழுத்தாகவும், நம என்பது இரண்டெழுத்தாகவும், நாராயணாய என்பது ஐந்தெழுத்தாகவும் ஆக மொத்தம் எட்டெழுத்தும் சேர்ந்து நாராயண அஷ்டாக்ஷரம் எனப்படும். இதைத் தொடர்ந்து கூறிவர நிறைந்த ஆயுள் கிடைக்கும். எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். தீமைகள், துன்பங்கள் தொடராது. முக வசீகரம் கிடைக்கும். எல்லாச் செல்வங்களும் கிட்டும். காலையில் இதை கூறுபவன் இரவில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். மாலையில் கூறுபவன் பகலில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். உச்சிப்பொழுதில் கூறுபவன் ஐந்துவித மகா பாதகங்கள், உப பாதகங்களிலிருந்து விடுபடுகிறான். எல்லா வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை அடைகிறான்.

மேற்கூறிய அனைத்தும் நாராயண உபநிஷத்தில் உள்ளவை.

குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார்
படுதுயராயின வெல்லாம்
நிலந்தரச் செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்
நலத்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.

எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

ஸ்ரீவல்லப மஹா கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர
வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

தன ஆகர்ஷண கணபதி மந்திரம்
ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா

வ்ராத கணபதி மந்திரம்
ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம:

சக்தி விநாயக மந்திரம்
ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம:

விநாயகர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே; வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி: ப்ரசோதயாத்

ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

சர்வ வித்யா கணபதி மந்திரம்
தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா

சகல காரிய சித்திக்கான எளிய முறை:

செய்யும் காரியங்களில் தடைகள் விலக
மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;

இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்.

நாகதோஷம் நீங்கி, குழந்தைப்பேறு உண்டாக
ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரந்நமௌளிர் நிரங்குஸ:
ஸர்ப்பஹார கடீஸூத்ர: ஸர்ப்ப யஜ்ஞோபவீதவாந்
ஸர்ப்பகோடீர கடக: ஸர்ப்ப க்ரைவேயகாங்கத:
ஸர்ப்ப கக்ஷதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:
இதைக் கூறினால் குழந்தைப் பேறு உண்டாகும்.

இன்பமாய் வாழ

அநந்தாநந்த ஸுகத: ஸுமங்கள ஸுமங்கள:
இச்சாஸக்திர் ஜ்ஞாநஸக்தி க்ரியாஸக்தி நிஷேவித:
ஸுபகா ஸம்ஸ்ரிதபத: லலிதா லிதாஸ்ரய:
காமிநீ காமந: காம: மாலிநீ கேளிலாலித:
இதை காலையில் 10 முறை மனனம் செய்தால் துக்கம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.

கல்வியில் மேன்மை பெற
ஸ்ரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரீ நந்தந: ஸ்ரீநிகேதந:
குருகுப்த பதோ வாசா ஸித்தோ வாகீஸ்வரேஸ்வர:
இதைக் கூறினால் கல்வி வளரும்.

சிறந்த செல்வம் பெற
தநதாந்யபதிர் த்ந்யோ தநதோ தரணீதர:
த்யாநைக ப்ரகடோ த்யேய: த்யாநோ த்யாந பராயண:
இதைக் கூறினால் தன தான்யங்கள் பெருகி நன்மை உண்டாகும்.

நோய்கள் நீங்க
நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:
அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே
சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய
ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்
பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;
ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.
இதைக் கூறிவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.

மன பயம் நீங்கி தைரியம் உண்டாக
ப்ரூக்ஷபதத்த லக்ஷ?மீக: பர்கோ பத்ரோ பயாபஹ:
பகவாந் பக்தி ஸுலபோ பூதிதோ பீதி பூஷண:
இதை தினமும் 10 முறை கூற மனதில் பயம் விலகும்.

வியாபாரத்தில் லாபம் உண்டாக

லக்ஷ லக்ஷ ப்ரதோ லக்ஷ?யோ லயஸ்தோ லட்டுக ப்ரிய:
லாஸ்ய ப்ரியோ லாஸ்ய பதோ லாப க்ருல்லோக விஸ்ருத:
இதைப் பலதடவை கூறிவர லாபம் கிடைக்கும்.

சுகப்பிரசவம் சாத்தியமாக
ஆபிருப்யகரோ வீர ஸ்ரீப்ரதோ விஜயப்ரத
ஸர்வ வஸ்யகரோ கர்ப்ப-தோஷஹா புத்ரபௌத்ரத:
இதைப் பாராயணம் செய்தால் சுகப் பிரசவம் ஏற்படும்.

வழக்குகளில் வெற்றி பெற
மேதாத: கீர்த்தித: ஸோக ஹாரீ தௌர்பாக்யநாஸந:
ப்ரதிவாதி முகஸ்தம்ப: துஷ்டசித்த ப்ரஸாதந:
இதைக் கூறினால் வழக்குகளில் நமக்கு வெற்றி உண்டாகும்.

பில்லி, சூன்யம் அணுகாதிருக்க
பராபிசாரஸமந: து:கபஞ்ஜந காரக
லவஸ்த்ருடி: களா காஷ்டா நிமேஷ: கடிமுஹூர்த்தக:
இதை 108 முறை கூறி விபூதி அணிந்தால், பிறருடைய ஏவல் சூன்யம் முதலியவை நம்மை ஒன்றும் செய்யாது.

நவக்கிரக தோஷம் நீங்க
ராஹுர் மந்த: கவிர் ஜீவ: புதோ பௌம ஸஸீ ரவி:
கால: ஸ்ருஷ்டி: ஸ்த்திர் விஸ்வ:ஸ்தாவரோ ஜங்கமோஜகத்
இதைப் பாராயணம் செய்தால் நவக்கிரக தோஷம் நீங்கும்.

பூத, பிரேத பிசாசுகளின் தொல்லைகள் நீங்க
பூராபோக்நிர் மருத் வ்யோமா அஹம் க்ருத் ப்ரக்ருதி: புமாந்
ப்ரஹ்மா விஷ்ணு: ஸிவோ ருத்ர ஈஸ: ஸக்தி: ஸதாஸிவ:
த்ரிதஸா: பிதர: ஸித்தா: யக்ஷõ: ரக்ஷõஸ்ச கிந்நரா:
ஸாத்யா வித்யாதரா பூதா: மநுஷ்யா: பஸவ: ககா:

சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க
அஷ்டஸக்தி ஸம்ருத்திஸ்ரீ ரஷ்டைஸ்வர்ய ப்ரதாயக:
அஷ்டபீடோப பீடஸ்ரீ ரஷ்டமாத்ரு ஸமாவ்ருத:
அஷ்டபைரவ ஸேவ்யாஷ்ட வஸுவந்த்யோஷ்ட மூர்த்திப்ருத்
அஷ்டசக்ர ஸபுபுரந்மூர்த்தி ரஷ்டத்ரவ்ய ஹவி: ப்ரிய:

வாழ்வில் பயன்படும் சில மந்திரங்கள்    Effective-prayers

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum